For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவராத்திரி கொண்டாட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சிவராத்திரியன்று இரவு கண் விழிப்பது புண்ணியமாக கருதப்படுகிறது. முன் காலத்தில் கண் விழிப்பதற்காக கோவிலில் பஜனைகளில் ஈடுபடுவார்கள்.நாட்கள் மாற மாற பழக்கங்களும் மாறி வருகின்றன.

பஜனைகளிலிருந்து மக்கள் நாடகம் போன்றவற்றில் தங்கள் கவனத்தை திருப்பினார்கள். முதலில் சிவராத்திரியன்று சிவனின் திருவிளையாடல் பற்றியநாடகங்கள் போடப்பட்டன. பின் அதுமாறி சமூக நாடகங்கள், நகைச்சுவை என்று நாடகங்கள் என நாடகங்களின் போக்கு மாறத் தொடங்கியது. பின்னர்தமிழகத்தில் திரையரங்குகளில் சிவராத்திரியன்று சிறப்பு நள்ளிரவுக் காட்சிகள் காண்பிக்கப்படுவது வழக்கமானது.

இப்போது நிலைமை இன்னும் முன்னேறிவிட்டது. கேபிள் டி.விக்களில் இரவு முழுவதும் படங்களைக் காட்டி பக்தர்களை கண் விழிக்க வைக்கிறார்கள்.

ஆனாலும் இன்னும் கோவில்களில் பஜனை நடத்தி கண் விழிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தஞ்சாவூர்:

சிவத் திருத்தலங்களில் குறிப்பிடத்தக்க திருத்தலம் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில். இங்கு சிவ ராத்திரி கோலகலமாக கொண்டாடப்படுகிறது.

தஞ்சை பெரிய. கோவில் பற்றி சில சுவையான தகவல்கள்:

இந்த திருக்கோவில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கோயிலின் கோபுரம் 216 அடி உயரமுடையது. ராஜராஜன் தனது முன் ஜென்மத்தில்வேடனாக பிறந்து பல விலங்குகளை கொன்றதால் இந்த பிறவியில் அவருக்கு வெண் குஷ்ட நோய் வந்ததாக கூறப்பட்டது.

இந்தநோய் தீர சிவன் கோயில் கட்டுமாறும் அதற்கான சிவலிங்கத்தை நர்மதா ஆற்றிலிருந்து 6 மாத காலத்திற்குள் கொண்டு வர வேண்டும்ராஜராஜனுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி ராஜராஜன் 43 ஊழியர்களுடன் நர்மதா ஆற்றிற்கு சென்று சிவ லிங்கததை ஆற்றிலிருந்து எடுத்தார். சிவ லிங்கம் ஆற்றிலிருந்து எடுக்க எடுக்கபெரிதாக வளர்ந்து கொண்டே இருந்தது.

இதன் காரணமாக இந்த சிவ லிங்கத்திற்கு பிரகதீஸ்வரர் என பெயரிடப்பட்டது.. இங்குள்ள நந்தி பெரிதாக வளர்ந்து கொண்டே போனதால் அது மேலும்வளராமல் இருக்க அதன் தலையில் ஆணி அடிக்கப்பட்டது அதன் பிறகு அந்த நந்தி வளரவில்லை எனவும் கூறப்படுகிறது.

ராஜராஜன் இந்த பிரம்மாண்டமான கோவிலை கட்ட 12 வருட காலம் எடுத்துக் கொண்டார். இந்த கோபுரத்தின் நிழல் பூமியில் விழாத விதமாகசிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X