ரத்னகிரி முருகன் கோயிலில் ஐப்பசி கிருத்திகை கோலாகலம்! அறுகோண தெப்பக்குளத்தில் அகல் விளக்குகள்

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரத்தினகிரி ஸ்ரீ அருள்மிகு பாலமுருகன் திருக்கோவிலில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு அறுகோண தெப்பக்குளத்தில் திரளான பக்தர்கள் கைகளில் அகல் விளக்குகளை ஏந்தி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

ராணிபேட்டை மாவட்டத்தில் ரத்தினகிரி எனும் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில். மலை மீது அமைந்துள்ள இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இங்கு எப்போது பாலமுருகனடிமை சுவாமிகள் இருப்பார்.

Aippasi Kirthigai

இங்கு அனைத்து விதமான விசேஷங்களும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு காலையில் உச்சி கணபதி, மற்றும் ஸ்ரீ பாலமுருகன் சுவாமிகளுக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவில் அடிவாரத்தின் கீழே மிக பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள ஆறு கோண தெப்பக்குளத்தில் ஸ்ரீ பாலமுருகன் உற்சவர் சுவாமிக்கு சிறப்பு புஷ்ப மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

இதையடுத்து மலையிலிருந்து மங்கள மேளதாளம் முழங்க பக்தர்கள் சுவாமியை ஊர்வலமாக கொண்டு வந்து தெப்பக்குளத்தில் சிறப்பு நாதஸ்வர வாத்தியங்கள் முழங்கியது. இதைத் தொடர்ந்து கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள், சிறப்பு மங்கள தீபாராதனையை அறுகோண தெப்பக்குளத்திற்கு காட்டினார்.

அதன் பின்னர் கூடியிருந்த திரளான பக்தர்கள் முருகனை மனதில் நினைத்தில் அரோகரா அரோகரா என முழக்கமிட்டனர். மேலும் தங்கள் கைகளில் இருந்த அகல் விளக்குகளை தெப்பக்குளத்திற்கு காட்டி சுவாமியை வழிபட்டு சென்றனர். இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+