Tirupati: திருப்பதி ஏழுமலையானை ஏப்ரல் மாதம் தரிசிக்க 4 லட்சம் டிக்கெட்டுகள்! 15 நிமிடங்களில் காலி!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் ஏப்ரல் மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியானது. மொத்தம் 4,33,200 டிக்கெட்டுகள் ரிலீஸ் செய்யப்பட்டன. அவை கிடுகிடுவென விற்றுத் தீர்ந்தது. இந்த தரிசன டிக்கெட்டை புக் செய்தவர்கள் இன்று மாலை 3 மணிக்கு திருமலை அல்லது திருப்பதியில் அறைகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
திருப்பதி ஏழுமலையானை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று கூட்டம் இருக்கும், இருக்காது என சொல்ல முடியாத அளவுக்கு திருமலை திருப்பதி உள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய மாதந்தோறும் பல்வேறு வகையான டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன. அதிலும் ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்வது கட்டாயம்.
இதை விட்டால் ஏழுமலையானை இலவச தரிசனத்திலோ அல்லது நடைபாதை வழி தரிசனத்திலோ சேவிக்கலாம். அந்த வகையில் தற்போது ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட்டுகள் கடந்த 21 ஆம் தேதி முதல் தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் ஏப்ரல் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவைகளான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவை உள்ளிட்டவைகளுக்கு கடந்த 19ஆம் தேதி ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.
அது போல் ஜனவரி 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு மின்னணு குலுக்கல் மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியாகின. இதில் குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் ஜனவரி 21 , 23 ஆம் தேதிக்குள் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றனர்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் வசந்தோற்சவம் ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் வரும் 22ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியானது. இந்த சேவைகளில் பங்கேற்காமல் சாமி தரிசனத்திற்கு மட்டும் செல்ல 22 ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியானது.
அது போல் அங்கப்பிரதட்சணம் செய்ய நேற்று காலை 10 மணிக்கு டிக்கெட் வெளியானது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் சுவாமி தரிசனம் செய்ய இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியானது. மொத்தம் 4,33,200 டிக்கெட்டுகள் வெளியாகின. அவை 20 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்தது. இந்த டிக்கெட்டை புக் செய்தவர்கள் அறைகளை மாலை 3 மணிக்கு ஆன்லைனில் புக் செய்யலாம்.
தரிசன டிக்கெட் புக் செய்தவர்களுக்கு மட்டுமே அறை ஒதுக்கீடு செய்யப்படும். அதிலும் யாருடைய லாகின் ஐடியில் புக் செய்தோமோ அதிலேயே புக் செய்ய வேண்டும். 4,33,200 டிக்கெட்டுகள் வெளியான நிலையில் அறையின் எண்ணிக்கை மிகவும் குறைந்தே காணப்படும் என்பதால் முதலில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அறைகள் கிடைக்கும். இதற்கான கட்டணம் வெறும் 100 ரூபாய் ஆகும். ஒரு வேளை கிடைக்காவிட்டால், கீழ் திருப்பதியில் விடுதிகளில் அறைகளை புக் செய்து கொள்ளலாம். எனவே தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்திலோ TTD செயலியிலோ புக் செய்து கொள்ளலாம்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications