Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடி கடைசி செவ்வாய்..ஔவையார் நோன்பும் கொழுக்கட்டை படையலும்..என்னென்ன பலன்கள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆடி மாதம் செவ்வாய் கிழமை வந்தாலே பெண்கள் ஔவையார் விரதம் இருந்து கொழுக்கட்டை படையல் செய்து வழிபடுவார்கள். காலம் காலமாக கடைபிடிக்கப்படும் இந்த நோன்பின் மகிமையைப் பற்றி ஆடி கடைசி செவ்வாய்கிழமையான இன்றைய தினம் அறிந்து கொள்வோம்.

ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஔவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு.

வரலட்சுமி விரதம், மகாலட்சுமி நோன்புகளில் கொழுக்கட்டைதான் பிரசாதமாக பெரும்பாலும் நைவேத்தியம் செய்யப்படும். அதேபோலத்தான் ஔவையார் நோன்பிலும் உப்பில்லாமல் செய்யும் அரிசி கொழுக்கட்டை தான்
நைவேத்தியம் செய்யப்படுகிறது. இந்த கொழுக்கட்டையை நோன்பு இருக்கும் பெண்களே சாப்பிட வேண்டும். அதை வேறு எந்த ஆணுக்கும் கொடுக்கக் கூடாது.

ஆடி மாத செவ்வாய் சிறப்பு

ஆடி மாத செவ்வாய் சிறப்பு

ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை. 'ஆடி செவ்வாய் தேடிக் குளி - அரைத்த மஞ்சள் பூசி குளி" என்பது பழமொழி. ஆடிச் செவ்வாயன்று எண்ணெய் தேய்த்து குளித்தால் மங்கலம் தங்கும் என்பது மரபு.

அம்மன் விரதம்

அம்மன் விரதம்

ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப் பெருமானின் அவதாரமே செவ்வாய்க் கிரகம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் துர்கை மற்றும் முருகபெருமானை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமணமப் பாக்கியமும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

ஔவையார் நோன்பு

ஔவையார் நோன்பு

ஆடி செவ்வாயில் ஔவையார் நோன்பு இருந்தால் கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் நம்புகிறார்கள். தமிழத்தின் தென் பகுதிகளில் ஆடிச்செவ்வாய் அன்று நோன்பு கடைப்பிடிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஔவையார் அம்மன் கோவிலில் திருமண தடை தோஷம் நீங்கவும் குழந்தை பேறு கிடைக்கவும் விதவிதமான கொழுக்கடைகளை படைத்து வழிபடுவது வழக்கம்.

கொழுக்கட்டை படையல்

கொழுக்கட்டை படையல்


இரவு நேரத்தில்தான் இந்த நோன்பு கடைபிடிக்கப்படும். அரிசியை கழுவி உலர வைத்து அதை உரலில் இடித்து மாவாக எடுத்துக்கொள்வார்கள். முழு தேங்காய், தீபம் போட நல்லெண்ணெய் என அனைத்தும் வைத்திருப்பார்கள்.
இளம் பெண்கள் முதல் வயதான சுமங்கலிகள் வரை ஒரு பகுதியில் இருக்கும் அனைத்து பெண்களும் ஒன்று கூடி இந்த விரதம் இருந்து நோன்பை மேற்கொள்வார்கள். காலம் காலமாக இந்த ஔவையார் நோன்பு நோக்கும் பெண்ணின் வீட்டில் வயதான சுமங்கலி பெண்ணின் தலைமையில் இந்த நோன்பு மேற்கொள்ளப்படும்.

 உப்பில்லாத கொழுக்கட்டை

உப்பில்லாத கொழுக்கட்டை

இடித்து வைத்த அரிசி மாவை உப்பு சேர்க்காமல் பிசைந்து கொழுக்கட்டை செய்து, அந்த கொழுக்கட்டைகளாக தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்வார்கள். வாழையிலை, வேப்பிலை, மாவிலை, புளிய இலை மற்றும் புங்கை இலை ஆகியவற்றில் பரப்பி வழிபடுவார்கள். இந்த கொழுக்கட்டையில்தான் பல வித உருவங்களை பிடித்து வைத்து வழிபடுவார்கள். கொழுக்கட்டையிலேயே விளக்கு செய்து எண்ணெய் ஊற்றி தீபம் போட்டு வழிபடுவார்கள்.சாமி கும்பிடும் போது மூத்த சுமங்கலி பெண் ஔவையார், பிள்ளையார் கதைகளை அனைவருக்கும் கூறுவார்.

எப்போது விரதம் இருக்கலாம்

எப்போது விரதம் இருக்கலாம்

ஔவையார் விரத வழிபாட்டை தொடர்ந்து மூன்று செவ்வாய் கிழமைகளில் செய்யலாம். ஆடி மாதம் விரதமிருக்க முடியாதவர்களுக்கு, தை மற்றும் மாசியில் தொடரலாம். 'அசந்தா ஆடியிலும் தப்புனா தையிலும் மறந்தா மாசியிலும்' என்ற நாட்டுப்புறப் பாடல், அவ்வை நோன்பின் மகத்துவத்தையும், ஆடி மாதம் தவறினாலும், அடுத்து வரும் தை மற்றும் மாசியில் நோன்பு இருக்கலாம் என்பதை முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர்.

திருமணம் கைகூடும்

திருமணம் கைகூடும்

திருமணமான பெண்களும், கணவருக்காக விரதமிருந்து வழிபடுவார்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து, குடும்பம் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமை நிலைக்கவும், குழந்தைப் பாக்கியம் கிடைக்கவும் கணவன் நீண்ட ஆயுள் பெறவும் இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள். ஆடி செவ்வாய்க்கிழமைகளில் மணமாகாத பெண்கள் விரதமிருந்து வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் கூடும். திருமணத் தடை ஏற்படுத்தும் தோஷங்களான கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், சனி தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடைகளும், செவ்வாய் தோஷத்தினால் பெண்களுக்கு ஏற்படும் திருமணத்தடைகளும் நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+