எந்தெந்த விரல்களில் பெண்கள் மெட்டி அணியலாம்? தங்க நகைளை திருமணமான பெண்கள் உடலில் அணிவது ஏன் தெரியுமா
சென்னை: திருமணமான பெண்கள் நகைகள் அணிவது ஏன் தெரியுமா? எந்தெந்த நகைகளை பெண்கள் அணியலாம்.. மெட்டி அணிவதன் சிறப்பு என்ன? கால் விரலில் எத்தனை மெட்டிகளை அணியலாம்? அனைத்தையும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நம்முடைய உடலில் ஏராளமான வர்ம புள்ளிகள் உள்ளன.. தங்க நகைகள் அணிவதன் மூலம், நம்முடைய உடலில் உள்ள முக்கிய வர்ம புள்ளிகள் தூண்டப்படுகின்றன.. இதனால், ஒவ்வொரு உறுப்புகளையும் எளிதாக பராமரிக்கவும் முடிகிறது.. உடலில் உஷ்ணம் ஏறிவிடாதவாறு வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் தன்மை தங்கத்துக்கு உண்டு.

தங்க ஆபணரங்கள்: ஆபரணங்கள் அணிவதால், நோய்கள் மறைமுகமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. தங்கம் மட்டுமின்றி, வெள்ளி, முத்து மற்றும் பவளம் போன்ற நகைகளை அணிவதாலும், நன்மைகள் பல உண்டாகிறது.
உதாரணத்துக்கு வளையல் அணிவதால், முன் கை பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம், உடலில் வெள்ளையணு உற்பத்தி அதிகரிக்கிறது. கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கு காலில் அணியும் கொலுசு உதவுகிறது.. உடல் சூட்டை வெள்ளி குறைக்க செய்கின்றன.. குதிகால் நரம்பை கொலுசு தொட்டுக்கொண்டிருப்பதால், அதன் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளை குறைத்து கட்டுப்படுத்துகிறது.
சைனஸ்: தலைவலி, சைனஸ் போன்ற பிரச்னைகளை சரி செய்ய நெத்திச்சுட்டி உதவுகிறது.. காதில் துளையிட்டு கம்மல் அணிவதால், கண் பார்வை வலுப்படுகிறது.. கண்களுடன் காது நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளதால், கூர்மையான கண் பார்வைக்கும், மூளையின் செயல்திறனுக்கும் பேருதவி புரிகிறது. மூக்கிலுள்ள சில புள்ளிகளுக்கும், பெருங்குடல் , சிறு குடலுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளன.. எனவே மூக்குத்தி அணிவதால், அது சம்பந்தமான நோய்களை குணமாவதுடன், சுவாச பரிமாற்றத்துக்கும் துணை புரிகிறது.
தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டத்தை சீராக்க உதவுவது கழுத்தில் அணியும் நகைகளாகும்.. பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் அமைந்துள்ளது.. விரல்களில் மோதிரம் அணிவதால், இதயம், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்குகின்றன.
கர்ப்பப்பை வளர்ச்சி: அந்த வகையில், மெட்டிகளும் மிக முக்கியமானவை.. கால் கட்டை விரலுக்கு அருகில் உள்ள விரல் கர்ப்பப்பையுடன் தொடர்புடையது. எனவே, பெண்கள் மெட்டி அணிந்து நடக்கும்போது ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக கர்ப்பப்பை வளர்ச்சி ஏற்படும்... கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான், கருப்பையின் நரம்பு நுனிகள் முடிகின்றன... பாலுணர்வை தூண்டக்கூடும்..
பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது என்பதற்கான அறிகுறியாக இந்த மெட்டி அணிவது பார்க்கப்படுகிறது.. அதேசமயம், உடல் ரீதியாகவும் சில நன்மைகளும் கிடைக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கால்விரலில் மெட்டி அணிவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு வழிவகுக்குமாம்.. தம்பதி இடையே நல்ல உறவைப் பேண வேண்டுமானால், மனைவி தன்னுடைய 2வது மற்றும் 3வது கால்விரலில் மெட்டி அணிய வேண்டும். பிரஷர், டென்ஷன், பிரச்சனைகளை சமாளிக்கும் அறிவைக்கொடுப்பது சந்திர பகவான்.. சந்திர பகவானுக்கு உரியது வெள்ளி ஆகும்..
காலில் மெட்டி: கட்டை விரலுக்கு அடுத்த விரலில் மட்டும்தான் மெட்டி அணிய வேண்டும்.. அதுவும் வெள்ளியில் மட்டுமே அணிய வேண்டும்.. ஒரே காலில் இரண்டு அல்லது மூன்று மெட்டி அணியும் போது உடல் நலத்திற்கு கேடு தருவதுடன் கணவனின் வளர்ச்சியையும் பாதிப்படைய செய்யுமாம்.












Click it and Unblock the Notifications