நீங்க மூங்கில் செடி வெச்சிருக்கீங்களா? இந்த பொருளை வீட்டில் வைத்தாலே பணமும், மகிழ்ச்சியும் டபுள்தான்
சென்னை: வீடுகளில் சில பொருட்களை கட்டாயம் வைத்திருப்பதால், சுபீட்சம் நிறைந்திருக்கும்.. தங்கு தடையின்றி செல்வம் பெருகும் என்பார்கள்.. அந்தவகையில், வாஸ்து சாஸ்திரத்தில் சில முக்கிய பொருட்களை வலியுறுத்தியிருக்கிறார்கள்.. அதில் மூங்கில் செடிகள்.
பொதுவாக, நம்மை சுற்றிலும், அல்லது நம்முடைய வீட்டை சுற்றிலும் மரம், செடி, கொடிகள், பூக்கள் நிறைந்திருப்பது ஆரோக்கியத்துக்குரியதாகும். நாம் சுவாசிக்கக்கூடிய ஆக்சிஜனை உற்பத்தி செய்து தந்து, மனித ஆயுளை கூட்டக்கூடிய இந்த தாவரங்களை நாம் வீட்டில் தாராளமாக வளர்க்கலாம். இதனால், மாசுபடும் துகள்களை சிலவகை செடிகள் கவர்ந்து அழித்து விடும்... சுற்றுப்புறச்சூழலும் மாசுபடாமல் மீட்டெடுக்கப்படும்.

இதில் சில தாவரங்களை வீட்டிற்குள்ளேயே வளர்ப்பதால், சுற்றுச்சூழல் நன்றாக இருப்பதுடன், பாசிட்டிவ் எனர்ஜியும் பெருகிவிடும்.. அந்தவகையில், மணிபிளான்ட், தொட்டாசிணுங்கி, துளசி என ஏகப்பட்ட செடிகளை நாம் வீடுகளுக்குள் வளர்க்கலாம்.
ஆக்ஸிஜன்: காற்றிலுள்ள கார்பன் மோனாக்சைடு, ஃபார்மாடிகைடு, பென்சைன் போன்ற நச்சுக்களை ஈர்த்து, சுத்தமான ஆக்சிஜனை வெளியிடும் சக்தி மணி பிளாண்ட்களுக்கு உள்ளது. டிவி, செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்களையும் இந்த செடி கிரகித்து கொள்வதால்தான், பல வீடுகளில் ஹாலிலேயே இந்த செடியை வளர்க்கிறார்கள்.
தொட்டால் சிணுங்கி செடிகள், ராகு தோஷத்தை நீக்கிவிடுமாம்.. நீல நிற சங்குப்பூ செடிகள், வீட்டிற்குள் மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும் கொண்டு வருமாம். கற்றாழை செடிகள் நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் அபரிமிதமாக அழைத்து வந்துவிடும். அந்த வகையில் மூங்கில் செடியும் தவிர்க்க முடியாதது. ஏனென்றால், வாஸ்து, ஃபெங் சுயி என்ற சீன சாஸ்திரத்துடன், இந்த மூங்கில் செடிகள் நெருங்கிய தொடர்புடையவை.
மூங்கில் செடிகள்: ஒருவர் மூங்கில் செடிகளை வீட்டில் வளர்த்தால், செல்வமும், ஆரோக்கியமும் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.. அதுமட்டுமல்லாமல், இது அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.. எனினும், இந்த மூங்கில் செடியை 5, 7, 9 என்ற ஒற்றை எண்ணிக்கையில் வைக்க வேண்டுமாம். அப்போதுதான் செல்வம் வீடுகளில் தங்கும் என்பார்கள்... அதிலும், 21 என்ற எண்ணிக்கையில் திடீர் அதிர்ஷ்டம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டிவிடுமாம்.
மூங்கில் செடியை வளர்ப்பதாக இருந்தால், வீட்டின் கிழக்கு பகுதியில் அல்லது தென்கிழக்கு பகுதியில் வைக்க வேண்டும்.. காரணம், இந்த பகுதிதான், உங்கள் குடும்பத்தின் ஆற்றல் மண்டலமாக செயல்படுகிறது. நேர்மறை ஆற்றலை ஈர்க்க வேண்டுமானால், வீட்டின் வாசலிலேயே வைக்கலாம்.. தென்கிழக்கு இடத்தில் வைத்தால், செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்கும்.
உடல் ஆரோக்கியம்: மூங்கில் செடிகள் மங்களகரமானவையாக பார்க்கப்படுவதுடன், உடல் ஆரோக்கியம் பெறுவதுடன் நிதி நிலை வலுப்பெறும் என்றும் ஆழமாக நம்பப்படுகிறது. இது எல்லாவற்றையும்விட, மாசுகளை சுத்தப்படுத்தும் உயரிய தன்மை இந்த மூங்கில் செடிகளுக்கு இருப்பதால், வீடுகளில் தாராளமாக வளர்க்கலாம்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications