Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவளியில் தரிசனம் தரும் தங்க அன்னபூரணி..வாழ்நாள் முழுவதும் குறைவில்லாத உணவு கிடைக்கும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உணவு மனித வாழ்க்கைக்கு அவசியமானது. அன்னபூரணியை தரிசனம் செய்தால்..அன்னபூரணியின் அருள் இருந்தால் போதும் வாழ்நாள் முழுவதும் குறைவில்லாத உணவு கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருக தீபாவளி நாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது சிறப்பு. அதே போல அன்னபூரணியை விரதமிருந்து வணங்க வற்றாத செல்வங்களும், உணவும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

காசியில் அன்னபூரணி அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரத்தில் பால் அன்னம் தந்து உலக உயிர்களின் அன்னதோஷம் என்னும் வறுமை அண்டாதவாறு அருள்புரிகிறாள். தனதிரயோதசி தொடங்கி தீபாவளி, அமாவாசை நாட்களில் காசியில் தங்கமயமாய் காட்சி தரும் அன்னபூரணியை தரிசிக்க வாழ்நாள் முழுவதும் அள்ள அள்ள குறையாத அன்னத்தையும் செல்வத்தை வழங்கிடுவாள்.

கந்தமகா புராணத்தில் உள்ள அருணாச்சல மகாத்மியத்திலும், மார்க்கண்டேய புராணத்தின் துணை நூலான காமாட்சி விலாசத்திலும் அன்னபூரணியின் வரலாறு கூறப்பட்டுள்ளது. தேவரும் முனிவரும் எப்போதும் தியானிக்கும் கயிலைவாசன், ஏகாந்தமாக தவத்தில் ஆழ்ந்திருந்த சமயம், பார்வதி தேவி விளையாட்டாக அவர் கண்களைப் மூடினார்.

 இருள் சூழ்ந்த உலகம்

இருள் சூழ்ந்த உலகம்

சூரிய, சந்திரரை வலது, இடது கண்களாகவும், அக்கினியையே நெற்றிக் கண்ணாகவும் கொண்டவர் சிவபெருமான். தேவி அவர் கண்களைப் பொத்தியதால் சூரிய, சந்திரர் தம் ஒளியிழந்தனர். அதனால் உலகம் இருண்டது. அனைத்து உயிர்களும் பரமேஸ்வரனை சரணடைந்தனர். அவர் தன் அக்கினிமயமான நெற்றிக்கண்ணைத் திறந்து உலகிற்கு ஒளியைத் தந்தார். இவை அனைத்தும் கணநேரத்தில் நடந்ததால் பார்வதி தேவி பயந்து உடனே தன் கைகளை ஈசனின் கண்களிலிருந்து எடுத்தாள். கூடவே மனம் கலங்கி அவரிடம் நான் விளையாட்டாக தங்கள் கண்களை மூடியதால் ஏற்பட்ட பாவம் நீங்க என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும்?'' எனக் கேட்டாள்.

 அன்னை செய்த தவம்

அன்னை செய்த தவம்

‘‘நமக்கு இது கண்ணிமைக்கும் நேரமே என்றாலும் உலக உயிர்களுக்கு அது எவ்வளவு காலம் என்று உனக்குத் தெரியாதா தேவி? ஏன் இந்த குறும்புத்தனம்? ஆனாலும் நீ உலகிற்கெல்லாம் அன்னை. ஆகவே உன்னை ஒரு பாவமும் அணுகாது'' என்றார் ஈசன். அந்த வார்த்தைகளால் சமாதானமடையாத அம்பிகை பூவுலகில் தவம் செய்து உலக உயிர்களுக்குத் தன்னால் ஏற்பட்ட துன்பத்துக்குப் பிராயச்சித்தம் தேட முயன்றாள். ஈசனின் அனுமதி பெற்று தென்திசை நோக்கி புறப்பட்டாள். அந்த சமயம் காசி திருத்தலம் மழையின்றி, கடும் பஞ்சம் பூண்டிருந்தது. மக்கள் பசியினால் துடித்தார்கள். தேவி காசியை அடைந்து அங்கு அற்புதமான ஒரு திருக்கோயிலை உருவாக்கி அன்னபூரணி எனும் பெயரில் தங்கினார்

 பிச்சைப்பாத்திரம் ஏந்திய இறைவன்

பிச்சைப்பாத்திரம் ஏந்திய இறைவன்

நான் முகன் என்று போற்றப்படும் பிரம்மனுக்கு முன்பு ஐந்து தலைகள் இருந்தனவாம். இதனால் கர்வம் அதிகமாக இருந்தது. பார்வதி, பரமசிவன், பிரம்மா ஆகிய மூவருக்கும் இடையேயான சிறு பிரச்சினையில் பிரம்மனின் ஒரு தலையை சிவனார் அறுத்து விட்டார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. பிரம்மனின் கபாலம் சிவன் கையிலேயே ஒட்டி கொண்டது. இந்த தோஷம் நீங்க பிட்சாடனாராக சிவபெருமான் பல இடங்களில் பிச்சை பெற்றார். ஆயினும் சிவன் கையை விட்டு கபாலம் விழவில்லை. அந்த பாத்திரத்தில் எந்த பொருளும் தங்கவில்லை. அதே நேரம் பிரம்மதேவனை பார்த்து சிவனார் என நினைத்து வணங்கிய பார்வதி, தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொண்டு அன்னபூரணியாக அவதரித்து காசியில் தவம் செய்தாள்.

 பசிப்பிணி போக்கும் அன்னை

பசிப்பிணி போக்கும் அன்னை

இந்த சமயத்தில்தான் பிட்சாடனாராக வந்த சிவபெருமான் அன்னபூரணியிடம் பிச்சை பெற்றார். அந்த நேரமே பிரம்மனின் கபாலம் சிவபெருமான் கையை விட்டு விலகியது. சிவனின் பசியை தீர்க்க வந்த அன்னபூரணி உலக பசிப்பிணி தீர்க்க காசியிலேயே தங்கி விட்டார் என்கிறது புராண கதை.

 அன்னபூரணி தரிசனம்

அன்னபூரணி தரிசனம்

காசியில் அருளும் அன்னபூரணி தேவி தன் திருக்கரங்களில் ஒரு கையில் உள்ள தங்கப் பாத்திரத்தில் பால் சோற்றை ஏந்தியுள்ளாள். உலகிலுள்ள ஜீவன்களின் பசியாற அவள் தன் மறுகையில் உள்ள தங்கக்கரண்டியால் அள்ளி அள்ளி அந்த பால்சோற்றை அனைவருக்கும் அளிக்கிறாள். அந்த பால் சோற்றோடு ஞானத்தையும் சேர்த்தளித்து நம் வயிற்றுக்கு மட்டுமல்லாமல், ஆத்மாவிற்கும் உணவிடுபவளாகத் துலங்குகிறாள். காசி விஸ்வநாதர் சந்நதிக்குச் செல்லும் வழியில் துண்டி விநாயகரை தரிசித்து பின் சற்று தொலைவில் அன்னபூரணி தேவியின் ஆலயத்தை அடையலாம். அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய நுழைவாயிலின் வலது புறம் பாதாளலிங்கமும், இடது புறம் சிறிய கிணறும் உள்ளன. மராட்டியர் கால கட்டிட அமைப்புடன் ஆலயம் திகழ்கிறது.

 காசி அன்னபூரணி

காசி அன்னபூரணி


நவரத்ன சிம்மாசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் அன்னையின் ஒரு கரத்தில் அட்சய பாத்திரமும், மறு கரத்தில் தங்க கரண்டியுடன் கூடிய தங்கத்தில் ஜொலிக்கும் அன்னபூரணியை தீபாவளியின்போது மூன்று நாட்களுக்கு மட்டுமே தரிசிக்க முடியும். அன்னையிடம் பிச்சை கேட்கும் பிட்சாடனார் உருவமும் அருகில் ஆரடி உயரத்தில் உள்ளது. இந்த சிலை வெள்ளியால் செய்யப்பட்டது.

 தீபாவளி பலகாரங்கள்

தீபாவளி பலகாரங்கள்

தீபாவளியன்று அன்ன கூடம் என்ற நிகழ்வில் பலவித உணவுகள், பலகாரங்கள் வைத்து பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும். மறுநாள் லட்டு தேரில் அன்னபூரணி ஊர்வலம் வருவாள். எண்ணற்ற லட்டுகளால் உருவான தேரில் உள்ள லட்டுக்களை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பார்கள்.

 குறைவில்லாத உணவு

குறைவில்லாத உணவு


நாம் உணவாய் உண்ணும் அனைத்தையும் விளைவிப்பதும், அதற்கு ஆதாரமாய் இருப்பதும் அன்னபூரணியே. இந்த அன்னபூரணியை தீபாவளியன்று தொடர்ந்து மூன்று நாட்கள் விரதமிருந்து பூஜை செய்து வணங்கலாம். அதுபோல் அன்னபூரணி உருவச்சிலை வைத்து பூஜை செய்து வணங்கிடலாம். அன்னபூரணி அனைத்து நலன்களையும் தருவாள்.
வற்றாத செல்வமும் வாழ்நாள் முழுவதும் குறைவில்லாத உணவும் கிடைக்கச் செய்வாள் அன்னபூரணி.

ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் ஓம் நமோ பகவத் யன்னபூர்ணே
மமாபிலிக்ஷித மன்னம் தேஹி ஸ்வாஹா'

அன்னபூர்ணா மந்திரத்தை குருமூலம் உபதேசம் பெற்று சொல்லி வந்தால், குறைவற்ற அன்னம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் போன்றவற்றோடு தேவியின் திருவருளும் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+