Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டு பூஜை அறையில் மறந்தும் கூட இந்த படங்களை வைக்காதீர்கள்..எலுமிச்சை விளக்கை ஏற்றாதீர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நம்முடைய வீட்டு பூஜை அறையில் நாம் இறைவனின் திரு உருவப்படங்களை வைத்து சாமி கும்பிடுவோம். கோவிலுக்கு போக முடியாத நேரங்களில் நம்முடைய வீட்டு பூஜை அறையை கோவிலாக நினைத்து நைவேத்தியம் செய்து வழிபடுவோம். சிலர் எத்தனையோ சாமி படங்களை இஷ்ட தெய்வங்களை வைத்து வழிபடுவார்கள். பூஜை அறையில் அவரவர் சக்திக்கு ஏற்ப நல்லெண்ணெய் ஊற்றியோ, நெய் ஊற்றியோ தீபம் ஏற்றுவார்கள். மறந்தும் கூட நம்முடைய வீட்டின் பூஜை அறையில் சில படங்களை வைத்து வணங்கக் கூடாது. அதே போல கோவிலில் மட்டுமே ஏற்றக்கூடிய தீபங்களை நம்முடைய வீட்டில் ஏற்றக்கூடது என்று ஆன்மீக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

பூஜை அறையில் முக்கியமாக சில விசயங்களை செய்ய வேண்டும். நம் வீட்டு பூஜை அறை சுத்தமாக இருக்க வேண்டும். கண்ட குப்பைகளை போட்டு வைக்கக் கூடாது. காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபட வேண்டும். இரண்டு வேலை விளக்கு ஏற்ற முடியாதவர்கள் காலையிலோ, மாலையிலோ விளக்கு ஏற்றலாம். அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றுவதும், மாலையில் பிரதோஷ காலத்திலும் விளக்கேற்றுவது கூடுதல் சக்தியைத் தரும்.

குத்து விளக்கு,பூஜை சாமான்கள் வெள்ளி, பித்தளை, செம்பு, வெண்கலம் போன்ற பொருட்களில் செய்து இருப்பது நல்லது. எவர்சில்வரில் செய்த பொருட்களை மறந்தும் கூட வாங்கி விடாதீர்கள். அது சனிபகவானின் ஆதிக்கத்தை அதிகரித்து விடும்.

Dont keep these pictures in your pooja room dont light the lemon lamp at home

நம் வீட்டு பூஜை அறையில் ஏற்றிய விளக்கு தானாக அணையக்கூடாது. நாம்தான் குளிர்விக்க வேண்டும். தவறுதலாக விளக்கு அணைந்து விடும் பட்சத்தில் நாம் இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தானாக அணைந்த தீபத்தை மீண்டும் ஏற்றி நாமாக குளிர்விக்க வேண்டும். அதே நேரத்தில் வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே அணைய வேண்டும். நாம் அணைக்கக் கூடாது.

நம்முடைய பூஜை அறையில் புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன்படம், விக்கிரகம் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம். குல தெய்வ படம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அகோர தெய்வங்களின் படங்களை வீட்டில் வைக்கக் கூடாது.

சிலர் பரிகாரத்திற்காக எள், எலுமிச்சை தீபம் ஏற்றச் சொல்லி ஜோதிடர்கள் கூறியிருப்பார்கள். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் எலுமிச்சை தீபத்தை வீட்டில் ஏற்றுவார்கள். துர்க்கை படத்தையோ, அகோர காளி படத்தையோ வீட்டின் பூஜை அறையில் வைத்து எலுமிச்சசை தீபம் ஏற்றுவார்கள். அது சிறப்பானதல்ல. அதே போல எள் தீபத்தையும் வீட்டில் ஏற்றக்கூடாது. செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல், வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது. பூஜை அறையையும் பூஜை சாமான்களையும் முடிந்த வரைக்கும் வியாழக்கிழமை சுத்தம் செய்வது நல்லது.

Dont keep these pictures in your pooja room dont light the lemon lamp at home

கோவிலுக்கு செல்லும் போது அவசரத்தில் பின் வாசல் வழியாக செல்வார்கள். கோவிலின் பிரதான வாசல் வழியேதான் சென்று வணங்க வேண்டும். அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது. கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.
கோவிலில் கொடுக்கும் குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை, கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.

விநாயகனை ஒருமுறை வலம் வரவேண்டும். சிவ பிரானை மூன்று முறையும், அம்பாளை நான்கு முறையும், முருகனை மூன்று முறையும் சுற்றி வழிபாடு செய்தல் வேண்டும். கோவிலிலோ வீட்டிலோ
கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.

காலையில் படுக்கையில் இருந்நு கண் விழித்தெழுந்ததும் அவரவர் உள்ளங்கையில் கண் விழிப்பதே நற்பலன்களை தரும் என்பது சாஸ்திரம் நெறியாகும். அமாவாசை திதியில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. சந்திரன் சூரியனால் அஸ்தமனம் அடைந்து அது சனியைப் போல் செயல்படும் ஆகையால் சனிக்கு உரிய எள்ளில் தயாரிக்கும் நல்லெண்ணையில் குளிப்பது சனியின் ஆதிக்கத்தை அதிகரிப்பது போலாகிவிடும்.

வீடு பகலிலும் இருள் சூழ்ந்து இருக்க கூடாது. இருள் சனியின் ஆதிக்கம் கொண்டது.சனி கிரகம் ஆயுளை தவிர வேறு நற்பலனை தருவதில்லை.சூரிய வெளிச்சம் வீட்டிற்கு வந்தால் வறுமை நீங்கும் செல்வம் பெருகும். பழைய இரும்பு பொருட்கள்,பழைய துணி,செயல்படாத மின் சாதனம், உடைந்த பொருட்கள், செயல்படாத எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வீட்டில் சேர்க்காதீர்கள். ராகு மற்றும் சனியின் ஆதிக்கத்தை இவை தருவதால் உங்கள் முன்னேற்றத்திற்கு தடைகளை ஏற்படுத்தும்.

Dont keep these pictures in your pooja room dont light the lemon lamp at home

தண்ணீரில் லட்சுமி உள்ளதால். தண்ணீரை தேவையின்றி வீண் செய்யக்கூடாது. வீட்டில் பைப்பில் நீர் ஒழுகிக் கொண்டு இருந்தால் செல்வம் தங்காது விரையமே நடக்கும் என்பதால் பழுதை உடனே சரி பார்க்க வேண்டும்.
சுத்தத்தையும்,நறுமணத்தையும் லட்சுமி விரும்புவதால் வீட்டையும், சாப்பிட்ட எச்சில் பாத்திரங்களையும் உடனுக்குடன் சுத்தம் செய்து விடவேண்டும். விளக்கு வைத்த பின்பு பால்,தயிர்,உப்பு,ஊசி,நூல்,தண்ணீர் போன்றவற்றை பிறருக்கு வீட்டில் இருந்து எடுத்து கொடுக்க கூடாது.

கடவுளுக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக் கடன்களை தவறாமல் செலுத்தி விடவேண்டும். வேண்டுதலுக்கு நேர்த்தி கடன் என்று வேறு பெயர் உண்டு.கடனை குறித்து வைப்பது போல் இதையும் குறித்து வைத்து அதை திருப்பி செலுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தோஷமாகிவிடும்.

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் இலங்கைவேந்தன்என்ற பழமொழிக்கேற்ப கடன்பிரச்சனையால் பாதிக்கப்படாதவர் என யாருமே இருக்கமுடியாது. ஒவ்வொருவரும் அவரவர் சூழ்நிலைக்கேற்ப கண்டிப்பாக மற்றவரிடம் கடன்பட்டிருப்போம். செலவுக்கேற்ற வருமானம் இல்லையே என்று புலம்பிக்கொண்டிருப்பவரே அதிகம்.

கடன் பிரச்சினை நீங்க வேண்டும் என்றால் நம்முடைய குல தெய்வத்திடம் வேண்டிக்கொண்டு அஸ்வினி, அல்லது அனுஷம் நட்சத்திர நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் படிப்படியாக குறையும். செவ்வாய்க்கிழமையன்று கடனை திருப்பித் தருவதால் கடன் பிரச்சனை நீங்கும். ஞாயிற்றுக்கிழமை, சனிக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியிலும் குளிகன் நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சீக்கிரம் அடைபடும். அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்னம் நடைபெறும்போதும், அனுஷ நட்சத்திர நாளில் விருச்சிக லக்னம் நடைபெறும்போதும் யாரிடம் அதிக கடன்பட்டிருக்கிறோமோ அவரிடம் அசலில் ஒரு சிறிய பகுதியை கொடுத்தால் மைத்ர முகூர்த்த விசேஷம் காரணமாக, கடன் விரைவாக குறையும்.

குளிகை காலத்திலும் கடன் அடைக்கலாம். கரிநாள் உள்ள நாட்களிலும் கடன் அடைக்கலாம். மரணயோகம் உள்ள நாட்களில் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது. கடன்பிரச்சனை தீர கும்பகோணம் சாரபரமேஸ்வரர் திருக்கோயில், சீர்காழி சிவலோகத்தியாகர் திருக்கோயில், திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில், தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு, திருக்காலடியப்பன் திருக்கோயில் எர்ணாகுளம், மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திருநின்றியூர் இத்தகைய தலங்களில் உள்ள இறைவன் பிறவிக்கடனை தீர்த்து வைக்க கூடியவர் எனவே இந்த ஆலயங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து வர கடன் பிரச்சினை நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+