சுப காரிய தடையா?..திருமணம் கைகூடவில்லையா..அனுமனுக்கு செய்யும் இந்த வழிபாடு வெற்றியை தேடித் தரும்
சென்னை: அனுமனுக்கு வாலில் பலம் என்று சொல்வார்கள். சொல்லின் செல்வன் அனுமனை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும். தடைகளை உடைத்து காரிய வெற்றி தருவார் அஞ்சனை மைந்தன் அனுமன் என்ற நம்பிக்கை உள்ளது. நம் வீட்டிலேயே அனுமன் படத்தை வைத்துவழிபடுவதன் மூலம் காரியத் தடைகளை வெல்லலாம். அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படும் இன்றைய நாளில் நாம் எப்படி வழிபாடு செய்வது என்று பார்க்கலாம்.
அனுமன் ஜெயந்தி நாளில் நாம் விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கை கூடும். துன்பம் விலகும். இன்பம் பெருகும். அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து உணவு உண்ணாமல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் வழிபட்டு, வடை மாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணை சாத்தி வழிபட வேண்டும்.

தமிழகத்தில் அனுமன் ஜெயந்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வடைமாலை சாற்றி பலரும் வழிபடுகின்றனர். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 1லட்சத்து எட்டு வடைமாலை சாற்றி வழிபடப்பட்டது.
சுபகாரியங்களில் தடைகள் ஏற்பட்டால் மனது பெரிய அளவில் சங்கடப்படும். காரிய வெற்றி கிடைக்க அனுமனை சரணடையலாம். அனுமன் படத்தில் வாலில் வாலில் குங்கும பொட்டு வைத்து வழிபடுவது விசேஷமானது. அவல், சர்க்கரை, தேன், பானகம், கடலை, இளநீர் முதலிய பொருட்கள் அனுமனுக்கு மிகவும் பிடிக்கும். அதை நைவேத்தியம் செய்வதனால் அனுமன் மிக மகிழ்வார்.
அனுமனுக்கு வாலில் தான் சக்தி அதிகம். அதனால் தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும்.
மார்கழி மாதம் வளர்பிறை திரயோதசியன்று 13 முடிச்சுகளோடு கூடிய மஞ்சள் கயிற்றை கலசத்திற்குள் வைத்து "ஓம் நமோ பகவதே வாயு நந்தனாய" என்ற மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து மஞ்சள், தனம், பூ மேலும் மற்ற பூஜை பொருட்களால் பூஜை செய்ய வேண்டும்.
கோதுமை மாவினால் தயார் செய்யப்பட்ட பூரி, வெற்றிலை பாக்கு, தட்சணையோடு ஒரு தட்டில் வைத்து அந்தணருக்கு கொடுக்கலாம். மேலும் அந்த அந்தணருக்கு அன்னதானம் செய்யலாம். அனுமன் விரத தொடக்கத்தில் இவ்வாறு செய்வதால் சகல காரியங்களும் வெற்றி அடையும்.
அனுமன் ஜெயந்தி நாளில் காலை உணவாக பொரியும், பழமும் சாப்பிட வேண்டும். இதை பிறருக்கும் வழங்கலாம். பகல் உணவாக கிழங்கு, காய்கறிகளை சாப்பிடலாம். இரவில் ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், சுலோகங்கள் கூறி வழிபட வேண்டும்.
ஸர்வ கல்யாண தாதாரம்
ஸர்வ வாபத்கந வாரகம்
அபார கருணா மூர்த்திம்
ஆஞ்ச நேயம் நமாம் யஹம்.."
தினமும் 21 முறை 'ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்' என்ற மந்திரத்தையும் கூறலாம்.
அனுமன் சொல்லின் செல்வன்.. காரிய வெற்றி தருபவர். சிரஞ்சீவியாக இந்த மண்ணில் வாழ்கிறார் என்ற நம்பிக்கை இன்றைக்கும் உள்ளது. எனவே அனுமன் பிறந்த நாளான இன்றைய தினம் ராம நாமம் சொல்லி அனுமனை வணங்க சுப காரிய வெற்றிகள் வீடு தேடி வரும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications