கார்த்திகை தீபம் திருநாளில் சொக்கனுக்கு உகந்த சொக்கப்பனை.. ஜோதி பிழம்பாக எழுந்தருளிய சிவன்
திருச்சி: பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலின் மலை உச்சியில் உள்ள கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் இன்று ஏற்றப்பட்டது. சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் தீப திருவிழா சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கார்த்திகை திருநாளில் சிவ ஆலயத்திலும் முருகன் ஆலயங்களிலும் இன்று மாலை சொக்கப்பனை கொளுத்துவார்கள். சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவனுக்கு சொக்கன் என்ற பெயரும் உள்ளதால் சொக்கப்பனை என்ற சொல் ஏற்பட்டது.
கற்பக தருவான பனை பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றது. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு.
பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது. பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது.
பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

திருச்சியில் கார்த்திகை தீபம்
திருச்சி தாயுமானவர் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீபம் ஏற்றுவதற்கான மெகா திரியை தயார் செய்து செப்பு கொப்பரையில் வைத்து எண்ணெய் ஊற்றும் பணி நடைபெற்றது. இதற்காக 300 மீட்டர் நீளம் உள்ள பருத்தி துணியாளான பிரமாண்டமான திரி தயாரிக்கப்பட்டது. இந்த திரியை தயார் செய்து ஒரு கட்டு போல கட்டி மேலே தூக்கி சென்று கயிறு கட்டி மேலே ஏற்றி செப்பு கொப்பரையில் வைக்கப்பட்டது. பின்னர் இந்த கொப்பரையில் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் ஆகியவை கலந்து 900 லிட்டர் ஊற்றி தீபம் ஏற்ற தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு மலை உச்சியில் உள்ள அரச மரத்தடியில் நின்று கோபுரத்தின் உச்சியை பார்த்தபடி நிற்க பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் தாயுமானவர் சன்னதி அருகே இருந்து எடுத்து வரப்படும் தீபத்தை கார்த்திகை தீப கோபுரத்தில் உள்ள திரியில் வைத்து ஆறு மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக நேற்று தாயுமான சாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் இன்று ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தொடர்ந்து எரியும். இந்த தீபத்தை மலைக்கோட்டை சுற்றியுள்ள சுமார்
5 கிலோமீட்டர் தொலைவு வரை உள்ள மக்கள் பார்க்க முடியும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் பணியாளர்கள் செய்துள்ளனர். இதே போன்று திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் உறையூர் வெக்காளியம்மன் கோயில் போன்ற முக்கிய கோயில்களில் கார்த்திகை தீபம் நாளான இன்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சமயபுரம் மாரியம்மன் கோவில்
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு உற்சவர் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மன் கேடயத்தில் புறப்படாகி தேருக்கு அருகில் எழுந்துருளினார். இதனைத் தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைடுத்து அம்மன் தேரோடும் வீதி வழியாக திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வின் போது அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமயபுரம் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க சமயபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் தீப திருவிழா
புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற வில்லியனூரில் அமைந்துள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, லட்சதீப பெருவிழா இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, இன்று காலை 6 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டு,பின் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா.சிவா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவில் வளாகத்தில் தீபங்களை ஏற்றினர். தொடர்ந்து சொக்கப்பனையும் ஏற்றப்பட்டது. பின்னர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. இதேபோல் புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோவில், திருகாஞ்சி கங்கை நதீஸ்வரவர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீரங்கத்தில் சொக்கப்பனை
விஷ்ணு ஆலயங்களிலும் சொக்கப்பனை விழா நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரங்காநாதர் கோவிலில் இன்று இரவு சொக்கப்பனை ஏற்றப்பட்டது. கோவில்களில் சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை காப்பாக நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம். சாம்பலை எடுத்துச் சென்று வயல்வெளிகளில் தூவினால், அந்த முறை அமோக விளைச்சல் நிச்சயம் என்பது நம்பிக்கை. கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் திருவண்ணாமலையில் சிவமாக காட்சி தரும் மலை மீது மகா தீபம் ஏற்றப்படுவதால் சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications