மகாளய பட்சம்..மறந்தும் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்..பித்ரு தோஷம் ஏற்படும்
சென்னை:
மகாளய பட்ச காலத்தில் நம்முடன் இருக்கும் முன்னோர்களை நாம் சிரத்தையோடு வழிபாடு செய்து தர்ப்பணம் கொடுப்பதால் பித்ரு தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம். பித்ரு கடன் செய்வதனால் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். மகாளய பட்ச காலம் இன்று முதல் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 25ஆம் தேதி வரை மகாளய பட்ச காலமாகும். இந்த நாட்களில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்யும் புரட்டாசி மாதம், எமதர்மராஜன் நமது முன்னோர்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள். பவுர்ணமி முடிந்து பிரதமை முதல் புரட்டாசி அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படுகிறது. இந்த நாட்களில் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நாம் கொடுக்கும் தானங்களை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.
பித்ரு கடன் செய்யாது இருந்தால் பித்ரு தேவதைகள் சபித்து விடுவார்கள் என்பதும் காலம் காலமாக இந்துக்களின் நம்பிக்கை. அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டால் பித்ருக்கள் வருத்தப்படும்போது அது பித்ரு தோஷமாக சந்ததியரின் ஜாதகத்தில் அமைகிறது.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்
நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நாம் மறக்கக்கூடாது அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அமாவாசை, புண்ய கால தர்பணம், வருஷ ஸ்ரார்தம், மஹாளய பட்சம் ஆகிய 96 நாட்கள் தர்பணம் செய்ய வேண்டும் என சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. இன்று வேலை மற்றும் தொழில், வாழும் சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த 96 நாட்களும் தர்பணம் செய்வது அனைவருக்கும் இயலாத காரியமாகும் என்றாலும் முக்கியமான தர்பணங்களையாவது தவறாமல் செய்வது நல்லது, அந்த வகையில் தக்ஷிணாயனத்தில் வரும் ஆடி அமாவாசையும் மகாளய அமாவாசையும் முக்கியமான ஒன்றாகும். அதேபோல உத்தராயணத்தில் தை அமாவாசையும் முக்கியமானது.

நிம்மதியற்ற வாழ்க்கை
குடும்பத்தில் இயற்கையாக மரணித்தவர்கள் தவிர கொலை, தற்கொலை, விபத்து மற்றும் அகால மரணங்கள் மூலம் உயிர் நீத்தவர்களுக்கு முறையான கர்மகாரியங்களை செய்வது அவசியம். அப்படி செய்வதன் மூலம் அந்த ஆத்மாக்கள் பித்ருலோகத்தை அடையும். அவ்வாறு செய்யாமல் விடுவதன் மூலம் பலவித தோஷங்கள் ஏற்படுகின்றன. அவை ஜாதகக் கட்டங்களில் அமர்கின்றன. இதனால் நமக்கு மட்டுமல்லாது நமது சந்ததியினருக்கும் திருமண தடை, குழந்தையின்மை ஏற்படும். வேலையில்லாத நிலையும், எதற்கெடுத்தாலும் பிரச்சினை, தீராத நோய்கள், கடன் பிரச்சினை என வாட்டி வதைக்கும். இதனால் கோபம், மனஉளைச்சல், நிம்மதியற்ற வாழ்க்கையால் சிலருக்கு தற்கொலை சிந்தனை ஏற்படும்.

எள் கலந்த நீர்
நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று அக்னிக்கும் பிராமணர்களுக்கும் ஒரே நேரத்தில் போஜனமளித்து பின் பிண்ட ரூபத்தில் இருக்கும் பித்ருக்கு எள் கலந்த நீர் அளித்து தர்பணம் செய்வதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன.

எள் பயன்படுத்துவது ஏன்?
சூரியனை ஆத்ம காரகன் எனவும் குருவை ஜீவ காரகன் எனவும் ஜோதிடம் போற்றுகிறது. ஆனால் இந்த உடலுக்கு சனைஸ்வரன் எனும் சனி பகவானையே காரகனாக கூறுகிறது. எனவே சனீஸ்வர பகவானின் தானியமான எள்ளை பித்ரு ஸ்ரார்த கர்மங்களுக்கும் வாகனமான காகத்தை பித்ரு ரூபமாகவும் பார்க்கிறது நமது வேதங்கள். எள்ளை மகாவிஷ்ணுவின் வியர்வையிலிருந்து தோன்றியதாக இதிகாசங்கள் கூறுகின்றன. எனவே அதனை பித்ருக்களுக்கான கர்மங்களுக்கு பயன்படுத்த பரிந்துரைக்கிறது நமது வேதம்.

அன்னதானம்
மகாளய பட்சத்தில் பித்ரு லோகத்தில் இருந்து நம்மைத் தேடி வரும் முன்னோர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து அவர்களின் பசியைப் போக்குவதோடு பசியோடு இருக்கும் ஏழை மக்களுக்கு உணவு கொடுப்பதனால் நம்முடைய பல தலைமுறைக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வது நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கை. சிலர் தண்ணீர் கூட தானமாக தரலாம். ரொம்ப முக்கியமானது அன்னதானம்தான். நம் முன்னோர்களை மகிழ்விக்கும். மகாளய பட்சம் தொடங்கியுள்ள நிலையில் எந்த திதியில் தர்ப்பணம் அளித்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

என்னென்ன பலன் கள்
பிரதமை - பணம் சேரும்.
துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும்
திரிதியை - நினைத்தது நிறைவேறும்
சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
பஞ்சமி - சொத்து சேரும்
சஷ்டி - புகழ் வந்து சேரும்
சப்தமி - பதவி பெறலாம்
அஷ்டமி - சமயோசித புத்தி பெறலாம்
நவமி - பெண் குழந்தைகள் பிறக்கும், திருமண தடை நீங்கும்.
தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறும்
ஏகாதசி - கல்வி, கலை வளர்ச்சி, விளையாட்டில் திறன் சிறக்கும்
துவாதசி - நகைகள், ஆடைகள் சேரும்
திரயோதசி - விவசாயம் செழிக்கும், பசுக்கள் விருத்தியாகும், ஆயுள், அரோக்கியம் கூடும்
சதுர்த்தசி - பாவம் நீங்கி, தலைமுறைகளுக்கு நன்மை சேரும்.
மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் கிடைக்கும்.

மகாளய பட்ச காலத்தில் செய்யக்கூடாதவை
மகாளய பட்சம் கடைபிடிக்கப்படும் இந்த 15 நாட்களும் நம்முடைய வீட்டினை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குப்பைகளை சேகரித்து வைத்திருக்கக் கூடாது. மாமிச உணவுகளை சாப்பிடக்கூடாது. மகாளய பட்ச விரதம் இருப்பவர்கள் தாம்பத்ய உறவில் ஈடுபடக்கூடாது. உணவில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு உள்ளிட்டவைகளை சேர்க்கக் கூடாது. தேவையற்ற பேச்சுக்கள், வீண் சண்டைகளை தவிர்க்க வேண்டும். மகாளய பட்ச காலத்தில் நம்முடைய முன்னோர்களை நினைத்து வணங்கினால் வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications