நோயற்று வாழட்டும் உலகு..ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஐம்பெரும் விழா..மாணவர்களுக்கு தானம்

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை:

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆசிப்படி தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் 18 வது ஆண்டு வருஷாபிஷேக விழா, பீடாதிபதி ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் 62 வது ஜெயந்தி விழா, தீர்த்தக்குளம் திறப்பு விழா, ஸ்தல வரலாறு நூல் வெளியீட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை அடங்கிய ஐம்பெரும் விழா நடைபெற்றது.

விழாவில் முதல்நாளான 9ம்தேதி காலை மங்கள இசையுடன் கோ பூஜை, விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி, மகா கணபதி,நட்சத்திர, நவக்கிரக , ஸ்ரீ தன்வந்திரி, ஏகாதச ருத்ர ஹோமம் உள்பட 62 வகை விசேஷ ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் மஹா தீபாராதனையுடன் ஸ்வாமிகளுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் 62 சுமங்கலிகள் ,62 கன்னி பெண்கள் பங்கேற்ற சுமங்கலி, கன்யா பூஜைகள் நடைபெற்றது. விழாவில் ஸ்தல வரலாறு நூல் வெளியிடப்பட்டு , சாதுக்களுக்கு வஸ்திரம்,5 கிலோ அரிசி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பின்னர் மூலவர் ஸ்ரீ தன்வந்திரிக்கு சிறப்பு பூஜையும், ஸ்ரீ ஆரோக்யலஷ்மி தாயாருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. மாலையில் வாலாஜா ஸ்ரீ நடராஜ பெருமான் நாட்டிய பள்ளி எம்.ஷன்மதி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

Muralidhara Swamigal who donated 62 students at Sri dhanvandri Arogya Peedam

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தவத்திரு. கூனம்பட்டி ஆதினம், கலவை சச்சிதானந்த சுவாமிகள், நங்க நல்லூர் காமாட்சி ஸ்வாமிகள், பெலாகுப்பம் ஸ்ரீலஸ்ரீ ரகுராம அடிகளார் , இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், சிப்காட் நவசபரி ஐயப்பன் கோவில் ஜெயச்சந்திரன் ஸ்வாமிகள், வாலாஜா தாசில்தார் நடராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன், வக்கீல் ராஜசேகரன் உள்பட முக்கிய பிரமுகர்கள், ஆன்மீக சான்றோர்கள்,தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் , வியாபார பெருமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், சுற்றுப்புற கிராம நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் இரண்டாம் நாளான நேற்று 10ம்தேதி சனிக்கிழமை மஹா கணபதி, ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீசுதர்சன,ஸ்ரீ மஹாலஷ்மி ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் மூலவர் தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், 81 கலச அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்தில் பூஜைகளும் நடைபெற்றது. விழாவில் மாணவ, மாணவிகள் 62 பேருக்கு எழுது பொருள்கள் , 62 பேருக்கு 5 கிலோ அரிசி மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டது.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் லலிதாம்பிகை பீடம் ஸ்வாமிகள், திரைப்பட நடிகர் பூவிலங்கு மோகன், தொழிலதிபர்கள் திருச்சி கணேசன், ருக்மணி, சென்னை ராமாபுரம் ஷீரடி சாய்பாபா ஆலய நிர்வாகி தயாளன், சென்னை மகாலட்சுமி எண்டர் பிரைசஸ் தொழிலதிபர் குணசேகரன், தொழிலதிபர்.ஆற்காடு கு.சரவணன், பெல். பிரபு, ஊட்டி ராஜசேகர் ஆகியோர் உள்பட முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சியினர், சுற்றுப்புற கிராம நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாலையில் மேட்டூர் பிரதர்ஸ் ன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஹோமங்கள் மற்றும் பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவர் தன்வந்திரி மற்றும் பரிவார தெய்வங்களையும் தரிசனம் செய்து பிரசாதமும், பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர்.

விழாவில் மூன்றாம் நாளான நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மஹா கணபதி பூஜை, அஷ்ட திக் பாலகர் பூஜை, வருண பூஜை , கங்கா பூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னர் 62 தம்பதி பூஜையும் , நாதஸ்வர கலைஞர்களின் இசை விழாவும் நடைபெற்று வஸ்திர தானம் வழங்கப்பட்டது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர், ஸ்ரீ புரம் தங்க கோவில் சக்தி அம்மா கலந்து கொண்டு ,21 அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடர், மூலவர் தன்வந்திரி பெருமாள் ஆகியோருக்கும், கருட கங்கா ஸ்ரீ தன்வந்திரி சஞ்சீவினி தீர்த்த குளத்திலும், கருடருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தி தீர்த்தக்குளத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளை வாழ்த்தியும், பக்தர்களுக்கு அருளாசி வழங்கியும் பேசினார்.

பூஜைகள் மற்றும் தீர்த்தக்குள திறப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவர் தன்வந்திரி மற்றும் பரிவார தெய்வங்களையும் தரிசனம் செய்து பிரசாதமும், பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர். விழாவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை ஸ்வாமிகள், பெங்களூர் மதுசூதனானந்த ஸ்வாமிகள், ஆற்காடு தொழிலதிபர் ஜெ.லட்சுமணன் உள்பட ஆன்மீக பெரியோர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், சுற்றுப்புற கிராம நிர்வாகிகள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+