வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்க..கோடி கோடியாய் பணத்தை ஈர்க்க.. இந்த ஒரு பொருள் போதும்
எதிர்மறை சக்திகளை பச்சை கற்பூரம் தடுக்கும் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும். பணத்தை ஈர்க்கும் சக்தி பச்சைக்கற்பூரத்திற்கு உள்ளது.
மதுரை: பணத்தை ஈர்க்கும் சக்தி ஒரு பொருளுக்கு உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணம் காணிக்கையாக கோடி கோடியாக குவியவும் அந்த பொருள்தான் காரணமாக இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? வீட்டிற்குள் நுழையும் எதிர்மறை சக்திகளை தடுக்கும் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் சக்தியும் அந்த பொருளுக்கு உள்ளதாம். அது என்ன பொருள் அதை எப்படி வீட்டில் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
பச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருப்பதாக நம்பபடுகிறது. இதற்கு தக்க சான்றாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. அங்கு பச்சை கற்பூரம் பெரும் பங்கு வகிக்கிறது. அதனால் தான் பண மழை பொழிந்து கொண்டிருக்கிறது.
அவற்றை சாதாரணமாக பூஜை அறையில் வைத்தாலே நன்மைகள் பல வந்து சேரும். தெய்வீக மனம் கொண்ட ஒரு பொருள் பச்சை கற்பூரம். அவற்றை தீர்த்ததில் கலப்பதால் இல்லம் சுபிட்சம் அடையும். குபேர மூலையில் பச்சைக் கற்பூரம் வைக்கலாம். பச்சைக்கற்பூரம் வாசனையோடு இருக்கும் போது வீட்டிற்குள் பணத்தை ஈர்க்கும்.

பச்சைக்கற்பூரம்
நாராயணனுக்கு விருப்பமான பச்சை கற்பூரம் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டில் பணவரவு சரளமாக இருக்கும் என்கிற ஐதீகம் உண்டு. பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உண்டு. சாதாரணமாக பச்சை கற்பூரத்தை பாறை மீது தடவினால் அந்த பாறையில் விரிசல் உண்டாகும். ஆனால் திருப்பதி பெருமாளின் திருமேனியில் வருடம் முழுவதும் பச்சை கற்பூரம் தடவப்படுகிறது. ஆனால் சிலாதோரணம் என்ற அந்த பாறை மீதும், திருப்பதி பெருமாள் திருமேனியின் மீதும் தடவினாலும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. பச்சை கற்பூரம் தடவப்பட்ட பெருமாளை தரிசிக்க தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்கின்றனர்.

குல தெய்வ அருள்
குலதெய்வ அருள் தருவதற்கு இந்த ஒரு பொருளை தீப எண்ணெயில் சிறிதளவு நுணுக்கி சேர்த்தால் எங்கே இருந்தாலும் உங்களுடைய குல தெய்வம் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களுடைய வேண்டுதல்களை கேட்டு கட்டாயம் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

பணம் குறையாது
பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும். தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம்.

பணம் பெருகும் வழி
பூஜை அறையில் பச்சை கற்பூரத்தை வையுங்கள். தெய்வ கடாட்சமான எண்ணங்கள் உருவாகும். பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும்.

துர்சக்திகள்
பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது. வீட்டில் சிலருக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான். பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியே போய் விடும். அதனால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். நம் வீட்டில் உள்ள துர்சக்திகள், கெட்ட சக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகி செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும்.

நிம்மதி பெருகும்
இரண்டு அல்லது நான்கு துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். இதனை பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். அதுமட்டுமல்லாது பச்சை கற்பூரத்திற்கு பணத்தினை ஈர்க்கும் தன்மை இருக்கிறதினால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் இருக்காது. வீட்டில் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். வீண் செலவுகள் இருக்காது.

நேர்மறை எண்ணம் அதிகரிக்க
இந்த கற்பூரத்தினை பணம் இருக்கும் இடத்தில் வைக்கும் போது, அங்கு வரும் எதிர்மறையான வாசங்களையும், சக்திகளையும் இது தடுத்து நிறுத்தும். வீட்டிலும் தொழில் செய்யும் இடத்திலும் பணப்புழக்கம் அதிகரிக்க பணப்பெட்டியில் பச்சை துணியில் சிறிது பச்சை கற்பூரம், ஏலக்காய், சிறிது சோம்பு மூன்றையும் சேர்த்து முடிச்சு போட்டு வைக்கவும். பணம் பெட்டியில் மளமளவென பெருகுவதைக் காணலாம்.

மகாலட்சுமியின் அம்சம்
வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடியேறுவாள். எனவே பணம் புழங்கும் இடங்களில் வாசனை மிக்க பச்சை கற்பூரமானது இருந்தால் செல்வம் செழிக்கும். வீட்டில் நடைபெறக்கூடிய எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை இடம் பெற செய்வது நல்லது. பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்வத்தையும், இஷ்டதெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்துவிட வேண்டும். இப்படி செய்வதால் நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications