சுக பிரசவம் நடக்க வேண்டுமா?..கர்ப்பிணிகள் இந்த பூஜையில் பங்கேற்க மறக்காதீர்கள்!
சென்னை: இன்றைய கால கட்டத்தில் சுப பிரசவம் என்பது அரிதாகி வருகிறது. குழந்தை பாக்கியம் கிடைப்பதும் வரமாக உள்ளது. திருமணமான தம்பதியர் ஒற்றுமைக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும்,கர்ப்பிணிகளுக்கு சுப பிரசவம் நடைபெறும் ஆன்மீகத்தில் எளிமையான பரிகாரத்தை நமது முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர்.
தாய்மை என்பது இன்றைக்கு ஒரு வரமாக உள்ளது. அந்த வரத்தை இறைவன் கொடுக்கும் போது நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கியமான பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்று பலரும் இறைவனை வேண்டிக்கொள்வார்கள்.
மண்ணில் பிறக்கும் போது எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான். அந்த குழந்தை நல்லவராக உலகத்தில் வாழ இறைவன் அருள் தேவை. எனவேதான் நமக்கு பிறக்கும் வாரிசுகள் நல்லவர்களாக திகழ சில பரிகாரங்களை முன்னோர்கள் கூறியுள்ளனர்.

பள்ளியறை பூஜை
சிவ ஆலயங்களில் பள்ளியறை பூஜையை காண்பதற்கு கொடுப்பினை வேண்டும். பள்ளியறை பூஜையை தரிசனம் செய்தாலே நமக்கு வளமான வாழ்க்கை அமையும். பள்ளியறை பூஜைக்கு பசும்பால் தருபவர்களுக்கு அருமையான வாரிசுகள் இப்பிறவியிலேயே கிட்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யம் கிடைக்கும்
பள்ளியறை பூஜைக்கு பூக்கள்,பூச்சரங்கள்,நிவேதனம் செய்பவர்களுக்கு அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
பள்ளியறை பூஜைக்கு எண்ணெய்,நெய்,மின் விளக்கு தானம் செய்பவர்களுக்கு பல ஆயிரக் கணக்கானவர்களுக்கு கல்வி தரும் பாக்கியத்தை அடுத்த பிறவியில் பெறுவார்கள்.

நல்ல வாழ்க்கைத்துணை
ஆயில்யம்,கேட்டை,மூலம்,பூராடம் நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் ஒரு வருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் சிறப்பான வாழ்க்கை துணை கிடைக்கும் ஆயில்யம் நட்சத்திரமும்,செவ்வாய்க்கிழமையும் வரும் நாளன்று தமது வருமானத்தில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை அன்பளிப்பாக தந்து,அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.

வெற்றிகள் தேடி வரும்
திங்கட்கிழமை அன்று பள்ளியறை பூஜைக்குரிய பொருட்களை தானம் செய்து,அதில் கலந்து கொள்பவர்களுக்கு வெற்றி மீது வெற்றி வந்து சேரும். அரசு மற்றும் தனியார்த் துறையில் பதவி உயர்வுக்குக் காத்திருப்பவர்கள் புதன்கிழமையன்று பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதோடு,கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

நோய்கள் நீங்கும்
அனுஷம் நட்சத்திரமும் வியாழக்கிழமையும் வரும் நாட்களில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை தம்மால் முடிந்த அளவுக்கு வாங்கிக்கொடுத்து பங்கேற்றால் காரிய சித்தி உண்டாகும். கணவனுடைய நோய் பல காலமாக இருந்தால் அது தீர,அவருடைய மனைவியானவர், வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜையில் பங்கேற்க வேண்டும்.

அற்புதமாக பிள்ளைகள்
பள்ளியறை பூஜைக்கு பூக்கள் கட்டித் தருபவர்கள் மறுபிறவியில் அதிகமான சம்பளம் தரும் வேலையில் சேருவர். அவர்களது மகனும்,மகளும் மற்றும் பேரன் பேத்திகள் அதிக சம்பளம் தரும் வேலையில் இருப்பார்கள். அற்புதமான வாரிசு மகனாகவோ அல்லது மகளாகவோ பெற விரும்பினால் சனிக்கிழமையன்று பள்ளியறை பூஜையில் கலந்து கொள்வதோடு,அதற்குத் தேவையான பொருட்களை வாங்கி அன்பளிப்பாகத் தரவேண்டும்.

தம்பதி ஒற்றுமை
பிரிந்த வாழ்க்கைத் துணை சேரவும்,காணாமல் போய் பல ஆண்டுகள் என்ன ஆனார்கள் என்பதை அறியவும்,அறிந்த பின்னர் திரும்பி வரவும் மூன்றாண்டுகள் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். அசுவினியும் ஞாயிற்றுக்கிழமையும் வரும் நாட்களில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பூக்கள்,பால்,நைவேத்தியம் போன்றவைகளை வாங்கித் தரவேண்டும்.

பக்தி நிறைந்த பிள்ளைகள்
பள்ளியறை பூஜைக்கு பால்,நைவேத்தியங்கள் செய்து கொடுப்பவர்களும்,பள்ளியறை பூஜை நிறைவடைந்த பின்னர்,ஏழைகளுக்கு தானமாக நைவேத்தியத்தைத் தருபவர்களுக்கு ஒழுக்கமும் பக்தியும் நிறைந்த குழந்தைகள் இப்பிறவியிலும்,மறுபிறவியிலும் பிறப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள் பரிகாரம்
பள்ளியறை பூஜையில் கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டு, பசுவுக்கு வாழைபழங்கள் கொடுத்து வந்தால்,சுகப்பிரசவம் ஏற்படும். பள்ளியறை பூஜை நைவேத்தியப் பாலை பலருக்கும் தந்தால் அவர்களுக்கு வலியில்லாத பிரசவம் உண்டாகும். குழந்தை பிறக்கும் தருணத்தில் இறை சிந்தனை உண்டாகும். இப்படிப்பட்ட சிந்தனை உண்டானால்,அவர்களுக்கு பிரசவ வைராக்கியம் உருவாகுவற்குப் பதிலாக முக்தி வைராக்கியம் உண்டாகும்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications