கோடி கோடியாய் செல்வ வளம் பெருக.. ஆடி 18 வீட்டிலேயே பூஜை.. பதினெட்டாம் பெருக்கு தரும் ஆன்மீக பலன்கள்
சென்னை: ஆடிப்பெருக்கன்று காவிரித் தாயை வணங்கினால், வருடம் முழுவதும் குடும்பத்தை தீமை வராமல் காவிரித்தாய் பாதுகாத்து ஆசீர்வதிப்பாள், குடும்பங்கள் செழிப்புறும் என்பது ஐதீகமாகும்.. எனவேதான், ஆடிப்பெருக்கன்று காவிரியில் புனித நீராடுகிறார்கள்.. எனினும், நீர்நிலைகளுக்கு செல்ல முடியாமல் போனால், வீட்டிலேயே செய்ய வேண்டிய நடைமுறைகள், பூஜை முறைகள் என்னென்ன தெரியுமா? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
ஆடிப்பெருக்கு நாளில் வணங்கினால் திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.. பெண்களின் மாங்கல்யம் கெட்டிப்படும்.
காவிரி அன்னையை கர்ப்பிணியாக பாவித்து வளைகாப்பு செய்வது போல பலவகை உணவுகளை படைத்து மஞ்சள் சரடு, காதோலை கருகமணி, பூமாலை, வளையல், தேங்காய், பழம், அரிசி, வெல்லம் வைத்து வணங்கி புதிய மஞ்சள் சரடுகளை கட்டிக்கொள்வார்கள். அதேபோல, ஆண்களும் தங்கள் கைகளில் மஞ்சள் சரடுகளை கட்டிக்கொள்வார்கள்.

முளைப்பாரி - மஞ்சள் தாலி
சிலரது வீடுகளில் முளைப்பாரி வளர்த்து எடுத்து வந்து நீர் நிலைகளில் கரைத்து விடுவார்கள்.. ஆடிப்பெருக்கன்று புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும்.
நாளை ஆடிப்பெருக்கு என்பதால், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் ஏற்பட வேண்டுமானால், ஆடிப்பெருக்கு நாளில் காவிரி அன்னையை வழிபடலாம். .. புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் போன்றவற்றை வீட்டில் சமைத்து ஆற்றங்கரையோரத்திற்கு சென்று அன்னைக்கு படையல் போட்டு வழிபட்டு, குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட வேண்டும்.
சர்க்கரைப் பொங்கல்
ஒருவேளை நீர்நிலைகளுக்கு செல்ல முடியாமல் போனால் வீட்டிலேயே பெண்கள் சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.. ஆடிப்பெருக்கு தினத்தன்று சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து வாசல் தெளித்து வீட்டைத் துடைத்து மாக்கோலமிட்டு, நீராட வேண்டும்.
பூஜையறையில் கடவுள் படங்களை பூக்களால் அலங்கரித்து புது மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம், பழம், பத்தி, கற்பூரம், வெற்றிலை பாக்கு, தேங்காய் போன்றவற்றை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
நிவேதனமாக சர்க்கரைப் பொங்கலை வைக்கலாம். பிறகு, ஒரு நிறைகுடத்திலிருந்து, கலச சொம்பில் தண்ணீர் எடுத்து, அதில் அரைத்து மஞ்சளை கலந்து வைத்துவிட்டு, அதன்முன்பு விளக்கேற்றி வைத்து, தீபாராதனை செய்து, புனித நதிகளை மனதில் நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்..
அப்போது, முன்னொரு காலத்தில் எங்களை மூதாதையர், உங்களை புனிதமாக கருதி வழிபட்டதுபோல, எங்களுக்கும் அத்தகைய மனநிலையை தாருங்கள் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.. அதேபோல காவிரியையும், தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரையும் மனதார வணங்கவேண்டும்.
தீர்த்த தண்ணீர் - மஞ்சள் தாலி
இறுதியில், அந்த தீர்த்தத்தை குடும்ப உறுப்பினர்களின் தலையில் தெளித்துவிட்டு, பிறகு வீடு முழுவதும் தெளிக்க தெளிக்கலாம். மிச்சமிருக்கும் தீர்த்தத்தை செடி, கொடிகளுக்கும் தெளிக்கலாம். பூஜை முடிந்ததுமே புது கயிறை, கணவரின் கைகளால் பெண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். கன்னி பெண்கள் மஞ்சள் கயிறை தாலியாக பாவித்து கட்டிக்கொள்ளலாம்.. இதனால் அடுத்த ஆடிப்பெருக்குக்குள் வரன் கூடிவரும். இந்த பூஜையை செய்வதால், வீட்டிலுள்ள செல்வ வளம் கூடும்.
பத்திரப்பதிவு, தங்கம் வெள்ளி
இந்த நன்னாளில் செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம். எனவே, புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். வீட்டிற்குத் தேவையான அரிசி, பருப்பு முதலான பொருட்களை வாங்கலாம்.. தங்கம், வெள்ளியும் வாங்கலாம்.. பத்திரப்பதிவு முதலான புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
தங்கம், வெள்ளி காசுகள், நாணயங்கள் வீட்டில் இருந்தால், அதை பூஜையில் வைத்து, வணங்கிவிட்டு மீண்டும் பீரோவில் வைப்பதால் செல்வம் பெருகும்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications