மகாளய பட்சம்.. நவராத்திரி.. புண்ணியம் நிறைந்த புரட்டாசி விரத நாட்கள்.. எந்த நாளில் என்ன விஷேசம்
சென்னை: புரட்டாசி மாதம் ராசிச் சக்கரத்தின் கன்னி மாதத்தில் வருகிறது இது கன்னி மாதம். கன்னி மூலையில் அமைந்திருக்கும் விநாயகரை வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும். புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை மட்டுமின்றி திங்கள், புதன்கிழமையும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாட்களாகும். புரட்டாசி மாதத்தில் மகாளயபட்சம், நவராத்திரி போன்ற பண்டிகைகள் வரும் நாட்களை தெரிந்து கொள்வோம்.
புரட்டாசி மாதம் முன்னோர்கள் வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது. பித்ருக்களை வழிபடும் மகாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்குப் பெருமை சேர்க்கிறது. கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

புண்ணியம் மிக்க புரட்டாசி மாதம் பிறந்து விட்டது. இந்த மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை சாப்பிட்டு விரதங்கள் கடைபிடித்தால் அதிக புண்ணியம் கிடைக்கும். இந்த மாதத்தில் வரும் மகாலட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, ஷஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை.
ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும். எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்க வேண்டும்.
புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தன்று லட்சுமியை இந்திரன் வணங்குவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி மலர்களால், அலங்கரித்து வழிபட்டால் சகல செல்வங்களும் வந்து சேரும். புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று அம்பாளுக்கு 4 வண்ணங்களில் ஆடையும் ரத்தினக்கல் ஆபரணமும் அணிவித்து வழிபட வேண்டும். அன்று அம்பாளுக்கு நைவேத்தியமாக இளநீர் படைக்க வேண்டும். இந்த பூஜையால் குடும்பத்துக்கு தேவையான செல்வங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.
புரட்டாசி மாதம் அதிக வழிபாடுகள் நடத்த வேண்டிய மாதமாகும். அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதும் இந்த மாதத்தில்தான் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி தசமி வரை பத்து நாட்களும் விரதம் இருந்து அம்மனை வணங்குவதன் மூலம் அருளோடு பொருளும், தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
புரட்டாசி மாதத்தில் விரத நாட்கள் , விஷேச நாட்களை தெரிந்து கொள்வோம்:
புரட்டாசி 1 விநாயகர் சதுர்த்தி திருக்கணித பஞ்சாங்கப்படி புரட்டாசி 2 விநாயகர் சதுர்த்தி. அங்காரக சதுர்த்தி. புரட்டாசி 3 ரிஷி பஞ்சமி. குமார சஷ்டி, புரட்டாசி 5 மகாலட்சுமி விரதம் ஆரம்பம். புரட்டாசி 6 முதல் சனிக்கிழமை கேதார கௌரி விரதம் ஆரம்பம். புரட்டாசி 8 விஷ்ணு பரிவர்த்தனை ஏகாதசி. புரட்டாசி 9 திருமூலர் சித்தர் ஜெயந்தி. புரட்டாசி பௌர்ணமி விரதம்.
புரட்டாசி 13 மகாளய பட்சம் ஆரம்பம். புரட்டாசி 15 மகா பரணி சங்கடஹர சதுர்த்தி புரட்டாசி 16 கிருத்திகை விரதம். புரட்டாசி 17 மஹா வியாதிபாதம். புரட்டாசி 19 மத்தியாஷ்டமி இடைக்காடர் சித்தர் ஜெயந்தி புரட்டாசி 22 சுக்கிர ஜெயந்தி. புரட்டாசி 23 அஜ ஏகாதசி புரட்டாசி 24 கல்கி துவாதசி. புரட்டாசி 25 மஹா திரயோதசி, புரட்டாசி 27 சர்வ மஹாலய அமாவாசை புரட்டாசி 28 நவராத்திரி பூஜை விரதம் ஆரம்பம். புரட்டாசி 29 சந்திர தரிசனம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications