For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெருமாள் கோயில்களில் ரதசப்தமி விழா.. விமரிசையாக கொண்டாட்டம்.. பக்தி பரவசத்துடன் வழிபட்ட பக்தர்கள்

தை முதல் நாளில் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வந்து வடக்கு திசை நோக்கி தனது பயணத்தை தொடர்கிறார் என்பது ஐதீகம்.

Google Oneindia Tamil News

பரமக்குடி: சூரிய பகவானுக்கு உரிய நாளான இன்று, அனைத்து பெருமாள் கோயில்களிலும் ரதசப்தமி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதற்காக தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாள் கோயில்களுக்கு வந்து வழிபட்டனர்.

அந்த வகையில், பரமக்குடி மற்றும் எமனேஸ்வரத்தில் உள்ள பெருமாள் கோயில்களிலும் ரதசப்தமி விழா கோலாகலமாக நடைபெற்றது.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம்! தமிழ்நாடு முழுவதும் டூர் புறப்படும் ஸ்டாலின்! இனி அதிரடி தான்! கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம்! தமிழ்நாடு முழுவதும் டூர் புறப்படும் ஸ்டாலின்! இனி அதிரடி தான்!

ரத சப்தமி நாள்

ரத சப்தமி நாள்

சூரிய ஜெயந்தி நாள் ரத சப்தமி விழாவாக கொண்டாடப்படுகிறது. தை மாதம் சூரியனுக்கு உரிய மாதம் ஆகும். இதில், சூரிய பகவானின் ரதத்தில் பூட்டப்பட்ட ஜய, அஜய, விஜய, ஜிதப்ராண, ஜிதஸ்ம, மனோஜவ, ஜிதக்ரோத ஆகிய ஏழு குதிரைகளும் சூரியக் கதிர்கள் செல்லும் பாதைகளை குறிக்கின்றன. அதன்படி, தை முதல் நாளில் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வந்து வடக்கு திசை நோக்கி தனது பயணத்தை தொடர்கிறார் என்பது ஐதீகம்.

எமனேஸ்வரம் பெருமாள் கோயில்

எமனேஸ்வரம் பெருமாள் கோயில்

அந்த வகையில், சூரியன் வட திசையில் இருந்து ஆறு மாதத்திற்கு ஒளி தருவார் என்பது நம்பிக்கை. எனவே, இன்று காலை 7 மணிக்கு எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் அமர்ந்த திருக்கோலத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, நாள் முழுவதும் முக்கிய வீதிகளை வலம் வந்த பெருமாள், பின்னர் கோயிலை அடைந்தார். இதை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.

பரமக்குடி பெருமாள் கோயில்

பரமக்குடி பெருமாள் கோயில்

இரவு, சிறப்பு தீபாரதனைகளுக்கு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதேபோல, பரமக்குடி சுந்தராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் ஏகாந்த சேவையில் கல் மண்டபத்தில் காலை 10 மணிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, பெருமாள் புறப்படாகி முக்கிய வீதிகளில் வலம வந்து பின்னர் கோயிலை அடைந்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில்

திருப்பதி ஏழுமலையான் கோயில்

இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல, திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் இன்று ரத சப்தமி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. அதன்படி, ஏழுமலையான காலை முதல் இரவு வரை வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோயில் மாட வீதிகளில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

English summary
Ratha saptami festival in all vishnu temples in Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X