சபரிமலை மண்டல பூஜை..தங்க அங்கியில் ஐயப்பனை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள்..குவியும் வருமானம்
சபரிமலை: மண்டலபூஜை இன்று நடைபெறுவதை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பனை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் சன்னிதானத்தில் அலைமோதுகிறது. மலையெங்கும் சரண கோஷம் எதிரொலிக்கிறது. கடந்த 40 நாட்களில் மட்டும் சபரிமலைக்கு வந்த பக்தர்கள் மூலம் 223 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில், இந்தாண்டு மண்டல கால பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் மண்டல காலம் நவம்பர் 17ம் தேதி தொடங்கியது. கடந்த இரு ஆண்டுகளாக அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதால் இந்த ஆண்டு சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. தினமும் சராசரியாக 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை பக்தர்கள் வந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஐயப்பன் திருமேனிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்து வழிபட்டுள்ளனர். கடந்த வாரம் கற்பூர ஆழி பூஜை நடைபெற்றது.
இந்நிலையில், பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று நடைபெற உள்ளது. மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். 420 சவரன் எடை கொண்ட தங்க அங்கியை திருவிதாங்கூர் மன்னர் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார். இந்த தங்க அங்கி பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து கடந்த 23ம் தேதி காலை ஊர்வலமாக சபரிமலை நோக்கி புறப்பட்டது. ஓமல்லூர், ரான்னி, பெருநாடு வழியாக நேற்று மதியம் இந்த ஊர்வலம் பம்பையை அடைந்தது.
பம்பை கணபதி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இந்த தங்க அங்கி வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து சன்னிதானத்திற்கு புறப்பட்டது. தலைச்சுமையாக தங்க அங்கியை திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த பக்தர் ராமையா சுமந்து வந்தார். பக்தர் ராமையா கடந்த 25 ஆண்டு காலமாக பாதையாத்திரையாக சபரிமலைக்கு வந்து சேவை செய்து வருகிறார். அவரது சேவையை பாராட்டி கடந்த 5 ஆண்டு காலமாக ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கியை சுமக்கும் வாய்ப்பை ஐயப்பன் கோவில் நிர்வாகத்தினர் அளித்துள்ளனர்.

நேற்று மாலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தங்க அங்கி அணிந்து தீப ஒளியில் ஜொலிக்கும் ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். இன்று மதியம் 12.30 மணியில் இருந்து ஒரு மணிக்குள் ஐயப்பனுக்கு மண்டல பூஜைகள் நடைபெறும். மாலை 5 மணிக்கு புஷ்ப அபிஷேகம் நடைபெறும். இன்று இரவு அத்தாழ பூஜை நடைபெற்ற பின்னர் கோயில் நடை அடைக்கப்படும். பின்னர் மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் மாதம் 30ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும். டிசம்பர் 31 முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு பூஜைகள் நடைபெறும். மகர நட்சத்திரம் வானில் தோன்ற ஜோதி வடிவத்தில் ஐயப்பன் காட்சி அளிப்பார் என்பது ஐதீகம். ஐயப்பனை ஜோதி வடிவத்தில் தரிசனம் செய்யவும் மகர விளக்கு பூஜையில் பங்கேற்கவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள்.
மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தினசரியும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். சபரிமலைக்கு இதுவரை 29 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று சபரிமலையில் மண்டல பூஜை நடைபெறுவதால் பக்தர்கள் சபரிமலையை நோக்கி படையெடுக்கின்றனர். சன்னிதானத்தில் இவ்வாண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும் தரிசனம் செய்யவும், பக்தர்களுக்கு வழிபாடுகள் செய்யவும் சிரமம் ஏற்படாமல் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்த கோபன் சன்னிதானத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், சபரிமலைக்கு இந்த ஆண்டு இதுவரை வருமானமாக ரூ. 222 கோடியே 98 லட்சம் கிடைத்துள்ளதாகவும், 29 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்துள்ளதாகவும், அவர்களில் 20 சதவிகிதம் பேர் குழந்தைகள் எனவும் தெரிவித்தார். கடந்த 2 ஆண்டுகள் கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தினாலே இந்த ஆண்டு சபரிமலைக்கு குழந்தைகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications