பூஜை அறையில் 1 பொருள் போதுமே.. மணி பர்ஸில் பணம் நிரம்பி வழிய, இந்த போட்டோ வைங்க.. செல்வம் தழைக்கும்
சென்னை: பூஜையறையில் வெள்ளி சம்பந்தப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதால் பல நன்மைகளை அடையலாம் என்கிறார்கள்.. அதேபோல சமையலறையிலும் சிறிய அளவிலான வெள்ளியை வைத்திருக்க வேண்டுமாம். அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தில் வெள்ளி என்பது சுக்கிரனுடன் தொடர்புடையது என்பததால் பூஜையறையில் வெள்ளி நாணயம் வைப்பது சிறப்புக்குரிய ஒன்றாகும்.. நேர்மறையான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய வெள்ளியானது, பணத்தை ஈர்க்கும் சக்தி கொண்டது..

தூய்மை: தூய்மை, செல்வம், செழிப்பு போன்றவற்றுடன் தொடர்பு கொண்ட இந்த வெள்ளி லட்சுமி தேவியுடனும் தொடர்புடையது. அதனால்தான், பூஜை அறையில் ஒரு வெள்ளி நாணயத்தை வைத்திருப்பதால், சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்பார்கள்.
அதிலும் சரியான இடத்தில்தான் வெள்ளியை வைக்க வேண்டுமாம். அந்தவகையில், செல்வம் மற்றும் செழிப்புக்கான திசையாக கருதப்படும் வடகிழக்கு மூலையில் வெள்ளியை வைக்க வேண்டும். இதுதான் வெள்ளிக்குரிய திசையாகும். வெள்ளி நாணயங்களை எப்போதுமே மேல்நோக்கி இருக்கும்படி வைக்க வேண்டும். இதனால், வீட்டிற்குள் எப்போதுமே லட்சுமியின் வாசமும், ஆசீர்வாதமும் கிடைக்கும்
வெள்ளி நாணயங்கள்: வெள்ளி நாணயத்தை புதிதாக வாங்க வேண்டுமானால், வெள்ளிக்கிழமையன்று வாங்கி, வீட்டிற்குள் கொண்டு வரலாம். ஆனால், கோயிலில் வெள்ளி நாணயத்தை வைப்பதற்கு முன்பு, அதை தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்துவிட்டு வைக்க வேண்டும்.
கிச்சனிலுள்ள சர்க்கரை டப்பாவில், சிறிதான வெள்ளி ஸ்பூன் ஒன்றை போட்டு வைக்கலாம். இதனால் சுக்கிர பகவானின் ஆசி அதிகமாகவே கிடைக்கும். அல்லது குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் சிறிய வெள்ளி ஸ்பூனையாவது சர்க்கரை டப்பாவில் போட்டு வைக்கலாம். முடிந்தால் வெள்ளி டம்ளரிலும் தண்ணீர் குடிக்கலாம். டம்ளர், வெள்ளி டம்ளராக பயன்படுத்தி வரும்போது, தரித்திரம் மெல்ல மெல்ல விலகுமாம்.
மணி பர்ஸ்: அதேபோல, பர்ஸ் பயன்படுத்துபவர்கள், பணத்தை தவிர வேறு எந்த பேப்பரையும் அதில் தேவையில்லாமல் வைக்கக்கூடாது.. பர்ஸில் ஒரு சதுரமான தங்கம் அல்லது பித்தளையை வைத்து கொள்ளலாம், அல்லது உங்களது ராசி தொடர்பான விஷயங்களையும் வைத்துக் கொள்ளலாம். அதேபோல, ஓம், ஸ்வஸ்திகா சின்னத்தை வைத்திருக்கலாம். உங்கள் குடும்ப போட்டோக்களை வைத்திருக்கலாம். கருப்பு நிற மணிபர்ஸுக்கு பதில் வேற நிறத்தை பயன்படுத்தலாம்.
இடது கையில் பர்ஸை தொடக்கூடாது.. முடிந்தவரை வலது கையிலேயே எடுத்து வலது கையிலேயே பணத்தையும் கொடுக்கவும் வாங்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். பர்ஸில் குறைந்தது 11 ரூபாயாவது வைத்திருக்க வேண்டும். ஆண்களாக தங்களின் பேன்ட்டின் பின்புறம் பாக்கெட்டில் பர்ஸை வைக்கக் கூடாது. பர்ஸை பயன்படுத்தாதபோது, பூஜை அறையில் வைத்து விட வேண்டுமாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications