Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கந்த சஷ்டி 2022: கந்தன் அருளால் இனி இந்த ராசிக்காரர்களுக்கு கவலைகள் தீரும்..எதிரிகள் தொல்லை ஒழியும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கந்தன் மனக்கவலைகளை தீர்க்கச் செய்பவன்.. கந்தனை வணங்கினால் கடன் பிரச்சினைகள் நீங்கும்.. எதிரிகள் தொல்லை ஒழியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இன்றைக்கு எத்தனையோ பேர் கடனில் சிக்கி கவலைக்கு ஆளாகியுள்ளனர். நேரடி, மறைமுக எதிரிகளால் பிரச்சினையில் சிக்குகின்றனர். முருகா என்று கையெடுத்து கும்பிட்டால் கூப்பிட்டவர்களின் குரலுக்கு ஓடி வந்து அவர்களின் சிக்கல்களை தீர்ப்பவர் சிங்கார வேலர். கந்த சஷ்டி தினமான இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு கவலைகள் ஒழியும், எதிரிகள் பிரச்சினை நீங்கும்.. நோய்கள் முடிவுக்கு வரப்போகிறது என்று பார்க்கலாம்.

புதிது புதிதாக நோய்கள் இன்றைக்கு பலரையும் வாட்டி வதைக்கிறது. மருத்துவ செலவுகளுக்காக சிலர் சொத்துக்களை விற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சம்பாதிக்கும் பணத்தை நன்றாக சாப்பிடுகிறார்களோ இல்லையே மருந்து மாத்திரை வாங்க செலவு செய்கின்றனர். கந்த சஷ்டி விரதம் இருந்து கந்தனை வணங்கினால்
நோய் நொடிகள் நீங்கும்.

கந்த சஷ்டி கவசம் பாடினாலே நோய்கள் பறந்தோடும் எனவே தான் ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி நாட்களில் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கலாம். கந்த சஷ்டி தினமான இன்று முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடக்கிறது. திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களின் யாருக்கெல்லாம் முருகன் அருளால் வெற்றிகள் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

செவ்வாய் பகவான் ராசி நாதனாக இருக்கிறார். செவ்வாய் பகவானின் அதிபதி முருகன். மேஷராசிக்காரர்கள் சாதாரணமாகவே தைரியசாலிகள். முருகன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். உங்களுக்கு இன்றைய தினம் நவ கிரகங்களும் சாதகமாக உள்ளது. செவ்வாய் பகவான் உங்கள் தைரிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தன்னம்பிக்கை கூடும். செய்யும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். முருகனுக்கு உகந்த கார்த்திகை நட்சத்திரமும் உங்கள் ராசியில் உள்ளது. எந்த நற்காரியம் செய்யும் முன்பும் முருகனின் வேலை வணங்கி வேலையைத் தொடங்குங்கள். மாதந்தோறும் கந்த சஷ்டி விரதம் இருந்து கந்தனை வணங்கினால் மன கவலைகள் நீங்கும்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே..கார்த்திக்கேயன் அவதரித்த கார்த்திகை நட்சத்திரம் உங்கள் ராசியில் உள்ளது. செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருக்கிறார். உங்களின் கடன் பிரச்சினை தீரும் அளவிற்கு பண வருமானம் வரும். உங்களின் எதிர்கள் தொல்லை நீங்கும் காலம் வரப்போகிறது. முருகப்பெருமான் அருள் கிடைக்க ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்கிழமை விரதம் இருந்து வணங்க வேண்டும். படியேறி பழனிமலை முருகனை தரிசனம் செய்தால் கடன் பிரச்சினைகள் நீங்கும்.

கடகம்

கடகம்

முருகப்பெருமானுக்கு உகந்தது பூசம் நட்சத்திரம். கடக ராசியில் உள்ளது பூசம் நட்சத்திரம். தைப்பூசம் திருநாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கினால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடக ராசியில் பிறந்தவர்களுக்கு எப்போதுமே முருகன் அதிக நற்பலன்களை வழங்குவார். செவ்வாய் பகவான் கடக ராசியில் நீசம் பெற்றாலும் சில நேரங்களில் யோகங்களையும் தருவார் முருகன். கடக ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு பூசம் நட்சத்திர நாளிலும் விரதம் இருந்து கந்தனை வணங்க வேண்டும். உங்களின் கடன் பிரச்சினைகள் நீங்கும்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்டவர்களுக்கு செவ்வாய் எப்போதுமே சேனாதிபதியாக செயல்படுவார். தேவ சேனாதிபதி முருகனின் அருள் சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்போதுமே கிடைக்கும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். சிம்ம ராசியில் உத்திரம் நட்சத்திரம் 1ஆம் பாதம் உள்ளது. பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்தது. சூரியனுக்கு உரிய நட்சத்திரம் உத்திரம். பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து கந்தனை வணங்க நோய் நொடிகள் நீங்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு பொதுவாகவே எதிரிகள் பிரச்சினை அதிகம். எதிரிகள் தொல்லை நீங்க செவ்வாய்கிழமை விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கலாம்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு எப்போதுமே ஒருவித மன கவலைகள் இருந்து கொண்டே இருக்கும். என்னதான் புத்திசாலிகளாக இருந்தாலும் கடன் பிரச்சினையில் சிக்கிக்கொள்வார்கள். கன்னி ராசியில் உள்ள உத்திர நட்சத்திரம் முருகனுக்கு உகந்த நட்சத்திரம். எனவே கன்னி ராசிக்காரர்களுக்கு முருகன் நிறைய சாதகங்களை செய்வார். எப்போது நமக்கு கடன் தீரும். காலை சுற்றிய பாம்பாக உள்ள கடன் நம்மை விட்டு எப்போது நீங்கும் என்று நினைத்து நினைத்து கவலைப்படுவார்கள். "கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்"என்று சொல்வது போல எப்போதுமே கடனை நினைத்தே கவலைப்பட்டு நோய்களால் பாதிக்கப்படுவார்கள். கடனும் நோயும் தீர கன்னி ராசிக்காரர்கள் முருகனை நினைத்து வெள்ளிக்கிழமை விரதம் இருக்க வேண்டும். சஷ்டி திதி நாட்களில் மறக்காமல் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். சஷ்டி கவசம் சங்கடங்களை தீர்க்கும். நோய்கள், எதிரிகள் தொந்தரவுகளையும் முடிவுக்கு கொண்டு வரும் கடன் பிரச்சினைகளை காணமல் போகச் செய்வார் கந்த பெருமான்.

துலாம்

துலாம்

முருகனுக்கு விசாகன் என்ற பெயர் உண்டு. வைகாசி விசாகம் முருகனின் அவதார திருநாளாக கொண்டாடப்படுகிறது. அறுபடை வீடு அழகன் முருகன் துலாம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு உற்ற துணையாக இருந்து காப்பார். மாதந்தோறும் விசாகம் நட்சத்திர நாளில் விரதம் இருந்து முருகனை வணங்க வேண்டும். இந்த ராசிக்களில் பிறந்தவர்களுக்கு வம்பு வழக்கு வீடு தேடி வரும். கோர்ட் கேஸ் என்று நிறைய செலவு செய்வார்கள். எதிரிகள் தொந்தரவும் அதிகரிக்கும். சம்பாதிக்கும் பணம் எல்லாமே வழக்குக்கு போகிறதே என்ற மன வாட்டம் இருக்கும். வழக்கில் ஜெயிக்க வேண்டுமே.. எதிரிகள் தொல்லை எப்போது தீரும் என்ற ஏக்கம் மனதில் இருக்கும். திருச்செந்தூர் முருகனை நினைத்து சஷ்டி கவசம் படிக்க எதிரிகள் பிரச்சினையை பொடிப்பொடியாக்குவார் முருகப்பெருமான். நான்கு கிரகங்கள் உங்கள் ராசியில் இருக்கிறது. தன ஸ்தான அதிபதி செவ்வாய் பகவானும்உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். முருகன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கப் போகிறது.

 விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான். முருகப்பெருமானின் அருள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இருப்பதனால்தான் எத்தனை சோதனை வந்தாலும் நீங்கள் தாங்குகிறீர்கள். ஒன்றா.. இரண்டா.. எத்தனை பிரச்சினைகள்? ஏழரை சனி முடிந்ததே என்று நிம்மதி பட முடியவில்லை.. தலைமேல் வந்து கேது அமர்ந்தார்.. அது முடிந்தால் வேறு ஏதோ சிக்கல் வந்து மீள முடியாத நிலைக்கு தள்ளியது. கடன் ஒருபக்கம் கழுத்தை நெறிக்க.. பணம் கடனாக கொடுத்தவர்கள் மற்றொரு பக்கம் நெருக்கடிக்கு ஆளாக்கினர். எல்லா சிக்கல்களையும் படிப்படியாக தீர்க்க வழி ஏற்படுத்திக்கொடுத்தவர் வழிவிடுமுருகன்தான். உங்களுக்கு வரும் பிரச்சினைகளில் இருந்து கவசம் போல போல காப்பவர் கந்த வேலன்தான். வேலினை வணங்க வல் வினைகள் நீங்கும் வரப்போகும் வினைகளும் பொடிப்பொடியாகும். செவ்வாய்கிழமை விரதம் இருந்து மறக்காமல் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். எந்த கவலையும் காணமல் போகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+