சங்கடங்களை தீர்க்கும் சங்குப் பூ.. நீல சங்குப்பூ கொடிக்குரிய திசை இதுதான்.. சங்குப்பூக்களின் பலன்கள்
சென்னை: வீட்டில் வறுமை ஒழியவும், பணம் சேரவும், நிம்மதி தங்கவும், மகிழ்ச்சி பொங்கவும், சங்குப்பூக்கள் இருந்தாலே போதும் என்கிறார்கள். அந்தவகையில், வீட்டில் தன வரவு அதிகரிக்க செய்யும் இந்த சங்கு பூவை பற்றி ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ள முக்கியம்சங்கள் என்னென் தெரியுமா?
விஷ்ணு பகவானுக்கு பிடித்தமான பூ இதுவாகும்.. எனவே, சங்குப்பூ இருக்குமிடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.. இந்த பூக்களை மகாவிஷ்ணுவிற்கு சாத்தி வழிபட்டு வரும்போது, குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். நீலம் தவிர, இளஞ்சிவப்பு, வெள்ளை நிறங்களிலும் இந்த பூக்கள் உண்டு.

விஜயதசமி: இந்த சங்குப் பூங்கொடியை வீட்டில் வளர்த்து, அந்த பூக்களை சனி தேவருக்கு சமர்ப்பித்து வழிபட்டு வந்தால், சனி தோஷத்திலிருந்து மெல்ல விடுபட முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது.. அதேபோல, குடும்பத்தை பீடித்திருக்கும் எதிர்மறை சக்தியை விரட்டியடித்து நேர்மறை ஆற்றலையும் பெருகச்செய்யும் தன்மை இந்த பூக்களுக்கு உண்டு.
விஜயதசமி நாளில் சங்கு மலர்களைக் கொண்டு பரிகாரங்களை செய்யும்போது, அம்பிகையின் ஆசீர்வாதத்தை எளிதாக பெறலாம் என்பார்கள்.. குறிப்பாக, 5 சங்கு மலர்களை தண்ணீரில் போட்டு குளிப்பதால், இதுநாள்வரை தடைபட்ட அனைத்து காரியங்களும் எளிதில் கைகூடும்... விஜயதசமி நாளில், லட்சுமி தேவிக்கு சங்கு பூக்களை பூஜை செய்து, அந்த பூக்களை உங்கள் பர்ஸ் அல்லது பீரோ அல்லது பணம் வைக்குமிடத்தில் வைக்கலாம். இதனால், வீட்டில் பொருளாதாரம் மேலும் வலுவடையும்.
உரிய திசைகள்: அதேபோல, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் 7 சங்கு பூக்களை போட்டு, வடகிழக்கு மூலையில் வைத்துவிட வேண்டும். இதன்மூலமும் குடும்பத்தில் நிலவும் வறுமை, தொல்லை குறைய துவங்கும் என்கிறார்கள் பெரியவர்கள்.
இந்த நீல சங்குப்பூ கொடியை, வீட்டில் வடக்கு திசையில் நட்டு வைக்க வேண்டும். இதனால் சுப பலன்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். ஆனால், எக்காரணம் கொண்டும், இந்த கொடியை மேற்கு அல்லது தெற்கு திசையில் நடக்கூடாது.
செல்வம்: அப்படி வளர்த்தால், அந்த வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தில் தடை ஏற்படுவதோடு, வீட்டில் செல்வமும் மகிழ்ச்சியும் பாதிக்கப்படும்.. மொத்தத்தில், மணி பிளாண்ட்டிற்கு அடுத்தப்படியாக வீட்டின் செல்வ நிலைமை அதிகரிக்கும் சக்தி இந்த சங்குப்பூவிற்கு உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications