காரிய வெற்றி தரும் தீபங்கள்...வீட்டில் தீபம் ஏற்றும் போதும் இதை செய்ய மறக்க வேண்டாம்
தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை தீபம் ஏற்றி வழிபடலாம்.
சென்னை: தீபங்கள் நமது கர்ம வினையை நீக்குகின்றன. தெய்வங்களை அமைதிபடுத்தக்கூடியவை. தீபங்களை முறையாக ஏற்ற வேண்டியது அவசியம். எந்த தீபங்களை எப்படி ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
நம்முடைய வீட்டில் தினம் காலையில் தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும்.
மாலையில் 4.30 மணியில் இருந்து 6 மணிக்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இந்த நேரத்தில் வீட்டில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும்.

எந்த தீபத்திற்கு என்ன பலன்
ஒவ்வொரு தீபத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் வீட்டில் ஏற்றுவதால் கிடைப்பது உண்டு. மண்ணால் செய்யப்பட்ட விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும். வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் திருமகள் அருள் கிடைக்கும். பஞ்ச லோக விளக்கில் தீபம் ஏற்றினால் தேவதை வசியம் உண்டாகும். வெண்கல விளக்கில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் உண்டாகும். இரும்பு விளக்கில் தீபம் ஏற்றினால் சனி கிரக தோஷம் விலகும்.
காரிய வெற்றிக்கு வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடலாம்

உப்பு தீபம்
பசு நெய்யில் தீபம் ஏற்றினால் மோட்சம் கிடைக்கும். பாவங்கள் தீரும். மகாலட்சுமி அருள் கிடைக்கும்.
வெள்ளிக் கிழமையில் சகல ஐஸ்வரியங்களும் பெருக உப்பு தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம்.அது போல ஜல தீபம் ஏற்றினால் குடும்பத்தில் இருக்கும் உஷ்ணம் போன்ற பிரச்சனைகள் தணிந்து குளிர்ச்சியுறும் என்கிற நம்பிக்கை உண்டு.

மிளகு தீபம்
மிளகு தீபம் பைரவருக்கு ஏற்றி வழிபடக் கூடிய அற்புதமான ஒரு தீபம் ஆகும். இதை வீட்டில் வைத்து தாராளமாக ஏற்றி வழிபடலாம். கடன் தொல்லை நீங்க பைரவரை நினைத்து வீட்டில் மிளகு தீபம் ஏற்றி வழிபடலாம். அதிலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி திதிகளில் வீட்டில் மிளகு தீபம் ஏற்றி வைத்தால் எல்லா பிரச்சனைகளும் தீரும் என்கிற நம்பிக்கையும் உண்டு.

ஐஸ்வர்யம் தரும் தீபங்கள்
ஒரு முக தீபம் ஏற்றினால் நினைத்த செயல்கள் நடக்கும். இரு முக தீபம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கிட்டும். முன்று முக தீபம் ஏற்றினால் புத்திரதோஷம் நீங்கும். நான்கு முகம் ஏற்றினால் பசு,பூமி,செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும். ஐந்து முகம் ஏற்றினால் சகலநன்மையும்,ஐஸ்வர்யம் பெருகும்.

தாமரைத்தண்டு நூல் தீபம்
குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன. பருத்திப் பஞ்சு வைத்து தீபம் ஏற்றினால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும். வாழைத் தண்டின் நாரில் தீபம் ஏற்றினால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும். தாமரைத்தண்டு நூலில் தீபம் ஏற்றினால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும். வெள்ளை எருக்கம்பட்டையில் தீபம் ஏற்ற செல்வம் பெருகும். புதிய மஞ்சள் துணியில் தீபம் ஏற்ற நோய்கள் குணமாகும். புதிய சிவப்பு வண்ண துணியில் தீபம் ஏற்ற குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும். புதிய வெள்ளை துணி திரியில் தீபம் ஏற்ற அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.

எந்த திசை நோக்கி விளக்கேற்றலாம்
கிழக்கு திசை நோக்கி விளக்கேற்றுவது துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி ஏற்படும். மேற்கு திசையில் விளக்கேற்றுவது கடன், தோஷம் நீங்கும். வடக்கு நோக்கி தீபம் ஏற்றினால் திருமணத்தடை அகலும். தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது அப்படி ஏற்றினால் மரண பயம் ஏற்படும்.

தீபம் ஏற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
தினசரியும் தீபம் ஏற்றும் போதும் நாம் சில மந்திரங்களை கூறி ஏற்றினால் அதற்கு நல்ல பலன் கிடைக்கும்.
தீபம் ஜோதி பரப்பரஹ்மம்: தீபம் ஜோதி ஜனார்தணம்: தீபோமே ஹரது பாபம் : தீபம் ஜோதி நமோஸ்துதே:
சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்கியம் தன சம்பதம் சத்ரு புத்தி விநாசாய தீபஜோதி நமோஸ்துதே!
என்ற மந்திரங்களைக் கூறி தீபம் ஏற்றலாம்.

வீட்டில் ஏற்றக்கூடாத தீபங்கள்
வீட்டில் தெரியாமல் கூட பஞ்ச தீப விளக்கு எண்ணெயில் தீபம் ஏற்றக்கூடாது. இலுப்பை எண்ணெய் விளக்கு, எள் தீபம், எலுமிச்சை தீபம், தேங்காய் தீபம் போன்றவற்றை ஏற்றக் கூடாது. இதை கோவில்களில் சென்று தான் நீங்கள் முறையாக ஏற்றி வழிபட வேண்டும். எள் தீபம் என்பது சனீஸ்வரருக்கு சனீஸ்வர தோஷம் போக ஏற்றப்படும் முக்கிய விளக்காகும். இதை வீட்டில் வைத்து ஏற்றினால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்கிறது ஜோதிடம் எனவே எள் விளக்கை வீட்டில் வைத்து ஏற்றக் கூடாது. அதே போல துர்க்கை அம்மனுக்கு ஏற்றப்படும் எலுமிச்சை தீபத்தை எக்காரணம் கொண்டும் வீட்டில் ஏற்றக்கூடாது. உக்கிர தெய்வங்களுக்கு ஏற்றப்படும் பரிகார தீபங்கள் கண்டிப்பாக வீட்டில் ஏற்றவே கூடாது என்பதை கட்டாயம் நினைவில் கொள்ளுங்கள்.பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். பூவால் குளிர்விக்கலாம் அல்லது குச்சியால் குளிர்விக்க வேண்டும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications