தோஷங்களை விலக்கும் வில்வம்! வில்வ இலைகள் தரும் ஆன்மீக பலன்கள்..மகிழ்ச்சியை தரும் வில்வத்தின் சிறப்பு
சென்னை: சிவனுக்கு உகந்ததாக கருதப்படும் வில்வ இலைகளின் மகத்துவம் என்னென்ன தெரியுமா? வில்வ இலைகளை எப்போது பறிக்க வேண்டும்? வில்வ இலைகளில் பூஜித்து வருவதால் கிடைக்கக்கூடிய உன்னதமான பெரும்பயன்கள் என்னென்ன தெரியுமா?
ஆன்மீகத்தில் மிகவும் முக்கியத்துவமும், மகத்துவமும் உடையது வில்வ மரம்.. காரணம், வில்வ இலைகள் சிவன் என்றும், முட்கள் சக்தி என்றும், அதன் கிளைகள் வேதங்கள் என்றும் போற்றப்படுகின்றன. அதனால்தான் சிவ பூஜைகளில் வில்வ இலைகள் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

வில்வ இலைகள்: வில்வங்களில் 21 வகைகள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனாலும் மகா வில்வமும், அகண்ட வில்வமும்தான் மிக உயர்ந்த வகைகளாக கருதப்படுகின்றன. அதுமட்டுமல்ல, லட்சுமி தேவியின் திருக்கரங்களிலிருந்து இந்த வில்வ மரம் தோன்றியதாம். அதனால்தான், யாகங்களில் வில்வ காய்களை பயன்படுத்துவார்கள்.
3 இலை வடிவமானது சிவபெருமானின் மூன்று கண்களை அல்லது திரிசூலத்தை குறிப்பதாகும். அதாவது, முக்கூறுகளைக் கொண்ட 3 இலைகள், திரிசூலத்தின் குறியீடாக பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளைக் குறிப்பதாக நம்பப்படுகிறது.
தோஷங்கள்: வில்வ இலைகளை வைத்து பூஜிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா? வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் குடும்பத்திலிருந்து அகலும்.. பீடித்திருக்கும் தோஷங்களும் விலகும்.. வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்..
ஆனால், பூஜைக்குப் பயன்படுத்துகிறபோது, சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்கள்.. அதாவது, சூரியன் உதயமாவதற்கு முன்பாகவே இந்த இலையை பறித்து வைத்துக் கொள்ள வேண்டுமாம்.. ஆனால், சதுர்த்தி அஷ்டமி நவமி சதுர்த்தசி பௌர்ணமி ஆகிய திதிகளில் வில்வம் பறிக்கக்கூடாது.
வில்வத்துக்கு தோஷம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீர் தெளித்துவிட்டு, பூஜைக்கு பயன்படுத்தலாம். 3, 5, 7 இதழ்கள் கொண்ட வில்வங்கள் சிறப்புக்குரியது. ஆனால் எக்காரணம் கொண்டும், சிவபெருமானுக்கு இரட்டை படை எண்ணிக்கையிலான வில்வ இலைகளை அர்பணிக்க கூடாது.
அர்ச்சனை: காய்ந்த நிலையில் இருந்தாலும் வில்வ இலைகளை அர்ச்சனைக்கு பயன்படுத்தலாம். ஒரு முறை அர்ச்சனைக்கு பயன்படுத்திய வில்லத்தை, மறுநாள் தண்ணீரில் சுத்தம் செய்து, மறுபடியும் அர்ச்சனைக்கு பயன்படுத்தலாம்.. இப்படி 5 நாட்கள் வரை பூஜைக்கு பயன்படுத்தலாம். வில்வத்தை பறித்து ஆறு மாதம் வரை வைத்திருந்தும் பூஜை செய்யலாம்.
அதிலும், மகா சிவராத்திரியன்று சிவபெருமானுக்கு வில்வத்தில் பூஜித்து வந்தால், ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்களும் விலகிவிடுமாம். வீட்டிலும் வில்வ மரம் வளர்க்கலாம்.. அப்படி வளர்த்து வருபவர்களுக்கு எம பயம் நெருங்காது என்பார்கள்.. இந்த வில்வ இலைகளால் மாலைகளை கோர்த்து சிவனுக்கு சாற்றலாம். இதனால், அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கையாகும்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications