வைகுண்ட ஏகாதசி.. ஸ்ரீரங்கத்தில் டிச. 22ல் திருநெடுந்தாண்டகம்.. ஜன.2ல் சொர்க்க வாசல் திறப்பு
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 22ஆம் ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. பகல்பத்து விழா முடிந்து 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் ஆம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும் ஜனவரி 2ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா ஆண்டு தோறும் கோலாகலமாக நடைபெறும். பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு விழா சிகர நிகழ்ச்சியாகும்.
ஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள். ஞானேந்திரியம் ஐந்து; கர்மேந்திரியம் ஐந்து; மனம் ஒன்று என்னும் பதினொன்றும் பகவானிடம் ஈடுபடுவதே ஏகாதசி விரதம். மாதங்களில் நான் மார்கழி என்கிறார் மகாவிஷ்ணு. அத்தகைய சிறப்பு வாய்ந்த மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும். அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. அந்நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி விரதமிருந்தால், மனக் கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும் என்பது நம்பிக்கை.

திருநெடுந்தாண்டகம்
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 22ஆம்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு கோவில் மூலஸ்தானத்தில் ஆரம்பமாகும் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி தொடர்ந்து சந்தனு மண்டபத்தில் நடைபெறும். அப்போது அரையர்கள் அபிநயத்துடன் பாடல்களை பாட நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 22ஆம் தேதி பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள் நிகழ்ச்சி தொடங்குகிறது. அன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி 7.45 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருள்வார். பகல் பத்து இரண்டாம் நாளில் இருந்து நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு சிறப்பு அலங்காரத்தில் புறப்படுவார்.

ஜனவரி 2ல் சொர்க்கவாசல் திறப்பு
பகல் பத்து உற்சவத்தின் 10வது நாளான ஜனவரி 1 ஆம் ஆம்தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளிப்பார். ஜனவரி 2ஆம் தேதி பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படும். அன்று அதிகாலை 4.15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசலை கடந்து திருக்கொட்டகையில் பக்தர்கள் மத்தியில் எழுந்தருள்வார். கொரோனா கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நம்மாழ்வார் மோட்சம்
அன்று முதல் ராப்பத்து நாட்கள் தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ஜனவரி 8ஆம் தேதி திருக்கைத்தல சேவை நடைபெறும். ஜனவரி 9ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், ஜனவரி 12ஆம்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறும்.

பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம்
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் புதுப்பொலிவு பெற்று வருகிறது. ராப்பத்து உற்சவத்தின்போது நம்பெருமாள் எழுந்தருளும் ஆயிரங்கால் மண்டபத்தின் உள்பகுதி மற்றும் தூண்களில் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. வண்ண மின் விளக்குகளும் போடப்பட்டு உள்ளன. ஆயிரங்கால் மண்டபத்தின் முன் பகுதியில் உள்ள மணல் வெளியில் பந்தல் அமைக்கும் பணி முடிவடைந்து உள்ளது. இது தவிர முக்கிய கோபுரங்களில் மின் விளக்குகளால் அலங்கரிக்கும் பணியும் நடந்து வருகிறது.

பெருமாள் அலங்காரம்
வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம் முதல் முடிவு வரை மூலவர் நம்பெருமாள் ரத்தின அங்கியில் சேவை சாதிப்பார். ரத்தின அங்கியில் மூலவர் பெருமாளை தரிசனம் செய்யவும், உற்சவர் நம்பெருமாளை தரிசனம் செய்வதற்கும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வந்து செல்வார்கள் என்பதால் காவல்துறையினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

ஜனவரி 2ல் உள்ளூர் விடுமுறை
இதனிடையே சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும் ஜனவரி 2ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு பொருந்தும். ஆயினும் பள்ளி/கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களை கொண்டு செயல்படும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வருகிற 7ஆம் தேதி சனிக்கிழமையன்று வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications