திருப்பதி ஏழுமலையானை மார்ச்சில் சீனியர் சிட்டிசன்கள் தரிசிக்கணுமா? இன்று டிக்கெட் ரிலீஸ்
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதம் அங்கப்பிரதட்சிணம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும். அது போல் மூத்த குடிமக்களுக்கான டிக்கெட்டுகள் இன்று மாலை 3 மணிக்கு ரிலீஸாகிறது. இந்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய மாதந்தோறும் 90 நாட்களுக்கு முன்பே பல்வேறு சேவைகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. உதாரணமாக மார்ச் மாதம் திருப்பதிக்கு போக திட்டம் என்றால் டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி முதற்கொண்டே பல்வேறு சேவைகளுக்கான டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிடும்.

அதை பக்தர்கள் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த டிக்கெட்டுகள் எப்போது வெளியிடப்படும் என காத்திருக்க தேவையில்லை. அவர்களின் இணையத்திலேயே இந்தந்த சேவைகளுக்கு இந்த நாளில் இந்த நேரத்திற்கு டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து நம்முடன் வரும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களின் ஆதார் எண், வயது, ஆதார் எண்ணில் இருப்பதை போன்று பெயர் பட்டியலுடன் காத்திருக்க வேண்டும்.
ஸ்லாட் ஓபன் செய்யப்பட்டால் உடனே அந்த தகவல்களை எல்லாம் நிரப்பி பணத்தை கட்டி விட வேண்டியதுதான்! அந்த வகையில் கடந்த 21 ஆம் தேதி ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ரிலீஸ் செய்யப்பட்டன. கல்யாணோத்சவம், ஆர்ஜித சேவை, ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீபலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கின. இதில் கல்யாணோத்சவத்திற்கு ரூ 1000, ஆர்ஜித சேவை, தீபலங்கார சேவை,ஊஞ்சல் சேவைகளுக்கு தலா ரூ 500 செலுத்த வேண்டும். ஒரு ஐடியில் அதிகபட்சமாக இரு டிக்கெட்டுகள் வரை மட்டுமே புக் செய்ய முடியும்.
அது போல் இன்றைய தினம் காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சிணம் செய்ய விரும்பும் பக்தர்கள் புக் செய்து கொள்ளலாம். அதற்கான ஸ்லாட் இன்று ஓபனாகிறது. அது போல் மூத்த குடிமக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்று திருப்பதிக்கு செல்ல வேண்டுமானால் அவர்கள் இன்றைய தினம் மாலை 3 மணிக்கு புக் செய்துக் கொள்ளலாம்.
இவர்களுக்கான தனி வரிசையில் அனுப்பப்படுவார். கூட்ட நெரிசலில் சிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே இன்று காலை 10 மணிக்கு அங்கபிரதட்சிணம் செய்யவும், மாலை 3 மணிக்கு மூத்த குடிமக்களுக்கான டிக்கெட்டுகளையும் புக் செய்து கொள்ளலாம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications