திருப்பதி பிரம்மோற்சவம்..ஏழுமலையானுக்கு காஞ்சியில் தயாரான பட்டுசேலை..என்னென்ன சிறப்பம்சம்?

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்திற்காக 8 நாட்கள் விரதம் இருந்து இரவு பகல் பாராமல் காஞ்சிபுரத்தை சேர்ந்த தம்பதியினர் 427 பெருமாள் முகங்களுடன் கூடிய பட்டுசேலையை நெசவு செய்து அசத்தியுள்ளனர். விரதமிருந்து கடந்த எட்டு தினங்களாக நான்கு நெசவாளர்கள் துணையுடன் 192 மணி நேரத்தில் பட்டுச்சேலையை நெசவு செய்து தயாரித்து உள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. திருப்பதிக்கு வந்ததும் ஒவ்வொருவரின் காதில் பதிவது, அங்கு ஒலிக்கும் வேங்கடேச ஸ்தோத்திரம்தான். பக்தர்கள் அனைவரும் கோவிந்தா...கோவிந்தா என்று சொல்லி வணங்குவார்கள்.

என்னை 'கோவிந்தா' என்று ஒரு முறை அழைத்தால், நான் உனக்கு கடன்பட்டவன் ஆகிறேன். இரண்டாவது முறை 'கோவிந்தா' என்று அழைத்தால், அந்த கடனுக்கு வட்டி செலுத்துவேன். மூன்றாவதாக 'கோவிந்தா' என்று கூப்பிட்டால், அந்த வட்டிக்கு வட்டி தருவேன்" என்று கூறியுள்ளார். அதனால்தான், திருமலை திருப்பதி முழுவதும், 'கோவிந்தா.. கோவிந்தா..' என்ற சரண கோஷம் எதிரொலிக்கிறது. ஏழுமலையான், குபேரனுக்கு மட்டுமே கடன்பட்டவராக இல்லாமல், தன்னுடைய நாமத்தை உச்சரிக்கும் பக்தருக்கும் கடன்பட்டவராக இருக்கிறார்.

திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான்

இந்தியாவில் உள்ள பெருமாளின் 8 சுயம்பு மூர்த்த தலங்களில், 'வேங்கடாத்ரி' எனப்படும் திருமலை திருப்பதியும் ஒன்று. இங்கு பெருமாள், நின்ற கோலத்தில் அருள்பாலிக் கிறார். பொதுவாக திருப்பதிக்கு வருபவர்கள், நேராக திரு மலைக்குச் சென்று ஏழுமலையானை தரிசிக்கும் வரிசையில் நின்று கொள்வதும், பின்னர் அவரை தரிசித்து விட்டு, உடனடியாக வீடு திரும்புவதுமே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் திருப்பதி ஏழுமலையான எப்படி தரிசிக்க வேண்டும் என்பது ஒரு மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

 பட்டு பீதாம்பரம்

பட்டு பீதாம்பரம்

ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

 பட்டு சேலை சிறப்புகள்

பட்டு சேலை சிறப்புகள்

திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது பெருமாளுக்கு வாடிக்கையாளரால் பட்டுசேலை வழங்குவது வழக்கம். அந்த வகையில் 427 பெருமாளின் திருமுருகங்களும் 27 ஜோடி யானைகள் உருவமும், ஆதிசேஷன் மீது அரங்கநாதரும் மகாலட்சுமியும் அமர்ந்திருப்பது போல் உருவம் பதித்த பட்டுசேலை ஒன்றை காஞ்சிபுரத்தை சேர்ந்த தம்பதியினர் விரதம் இருந்து நெசவு செய்துள்ளனர்.

பிரம்மோற்சவத்திற்கு பட்டு சேலை

பிரம்மோற்சவத்திற்கு பட்டு சேலை

காஞ்சிபுரத்தில் விளக்கொளி பெருமாள் கோவில் தோப்புத் தெருவில் வசிப்பவர்கள் குமரவேலு கலையரசி தம்பதியினர். பட்டுச்சேலை வடிவமைப்பு தொழில் செய்து வரும் இவர்கள், வாடிக்கையாளர்கள் விரும்பும் உருவங்களை பட்டு சேலையில் வடிவமைத்து கைத்தறியில் நெசவு செய்து தயாரித்து வழங்கி வருகின்றனர். அந்த வகையில் அவர்களிடம் சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், 3 ஆவது ஆண்டாக திருமலை திருப்பதியில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழாவில் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வித்தியாசமாக பட்டுச்சேலை தயாரித்து வழங்க கேட்டுக்கொண்டார்.

பெருமாளின் முகங்கள்

பெருமாளின் முகங்கள்

வாடிக்கையாளர் வேண்டுகோளின்படி பட்டுச்சேலையில் பெருமாளின் முகங்களையும், முந்தானையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் லட்சுமி தேவியை வடிவமைத்து தர டிசைனர் தம்பதியினர் முடிவெடுத்தனர். அதன்படி குமரவேலு கலையரசி தம்பதியினர் பெருமாளின் திருமுகம், அரங்கநாதர் லட்சுமி தேவியின் படத்தினை வடிவமைத்து இரவு பகலாக கடந்த எட்டு தினங்களாக நான்கு நெசவாளர்கள் துணையுடன் 192 மணி நேரத்தில் பட்டுச்சேலையை நெசவு செய்து தயாரித்து உள்ளனர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

அரக்கு கலர் கோறா பட்டில் தக்காளி கலர், தங்க ஜரிகை இழைகளால் நெசவு செய்து 21.5 முழம் நீளத்தில், ஒரு கிலோ 386 கிராம் எடையில் நெசவு செய்துள்ள சேலையின் உடலில் 427 பெருமாளின் திருமுகங்களும், பார்ட்டரில் 27 ஜோடி யானைகளும் உள்ளவாரும், முந்தானையில் ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் படுத்திருக்கும் ரங்கநாதரும், காலடியில் வீற்றிருக்கும் மகாலட்சுமியும், நாபியில் இருந்து வளரும் தாமரைப் பூவில் பிரம்மாவும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் உற்சவர் உருவமும் ஜரிகை இழைகளால் நெய்து சேலையை தயாரித்து உள்ளனர்.

விரதம் இருந்த பக்தர்கள்

விரதம் இருந்த பக்தர்கள்

திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது பெருமாளுக்கு வாடிக்கையாளரால் வழங்கப்படும் பட்டுச்சேலையை விரதம் இருந்து நெசவு செய்து வழங்கி உள்ளதாக பெரு மிதத்துடன் குமரவேலு கலையரசி தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+