வரலட்சுமி விரதம் 2022.. மகாலட்சுமிக்கு நோன்பிருந்து பூஜை செய்தால் இத்தனை நன்மைகளா?
மதுரை:தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. திருமணமான பெண்களும், கன்னிப்பெண்களும் இந்த விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும். கணவரின் ஆயுள் பலம் வேண்டி சுமங்கலிப்பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர். இந்த விரதம் கடைபிடிப்பதால் ஆயுள், ஆரோக்கியம் மட்டுமல்லாது செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. வரலட்சுமி விரத நாளில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பெளர்ணமி தினத்திற்கு முன் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இந்து சமயத்தை பின்பற்றும் சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள விரும்புவர். அப்படிப்பட்ட மிக முக்கிய விரத நாளான வரலட்சுமி விரதம் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.

வரலட்சுமி விரத முறை
திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் வரலட்சுமி விரதத்தன்று புதுமணம் முடித்த பெண்ணிற்கு இந்நோன்பு எடுத்து வைக்கப்படும். புகுந்த வீட்டில் இந்நோன்பு அனுசரிக்கும் வழக்கம் உள்ளது.வரலட்சுமி விரதத்தின் போது வீடு சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தம்தான் மகாலட்சுமிக்கு பிடித்தமானது. சூரிய உதயத்திற்கு முன்னாள் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். உங்கள் கையால் கோலம் போட்டு மகாலட்சுமியை அழைக்க வேண்டும்.

வீடு சுத்தம் அவசியம்
வீடு சுத்தமாக இருக்க வேண்டும். வியாழக்கிழமை மாலையே வீடுகளை சுத்தம் செய்ய வேண்டும். லட்சுமி பூஜை செய்வதற்கு முன்பாக விநாயகர் வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். வரலட்சுமி பூஜையை மனநிறைவோடு செய்ய வேண்டும். ஒரு ரூபாய்க்கு கற்பூரம் ஏற்றி வரலட்சுமியை வழிபட்டாலும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். மஞ்சள் குங்குமம் பூ வைத்து முடி கயிறு வைத்து பூஜிக்கலாம்.
பட்டுத்துணியல் அவசியம் அம்மனை அலங்கரிக்க வேண்டும். சரிகை உள்ள துணியால் அலங்கரிக்க வேண்டும். வெள்ளை கறுப்பு நிறத்தில் வஸ்திரம் இருக்கக்கூடாது. மஞ்சள் நிறம், சந்தன நிறத்தில் வஸ்திரம் இருந்தால் அற்புதமானது.

பூஜை நாளில் என்ன செய்யக்கூடாது
வரலட்சுமி விரதத்தின் போது வீடு சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தம்தான் மகாலட்சுமிக்கு பிடித்தமானது. சூரிய உதயத்திற்கு முன்னாள் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். உங்க கையால் கோலம் போட்டு மகாலட்சுமியை அழைக்க வேண்டும். வீடு சுத்தமாக இருக்க வேண்டும். வியாழக்கிழமை மாலையே வீடுகளை சுத்தம் செய்ய வேண்டும். வீடு அசுத்தமாக இருக்கக் கூடாது தலைகுளித்து விட்டு தலையை கட்டிக்கொண்டே பூஜை செய்யக்கூடாது தலையை நன்றாக காய வைத்து பின்னி பூஜை செய்ய அமரவேண்டும். தலையை விரித்துப்போட்டுக்கொண்டு பூஜை செய்யக்கூடாது. தலையில் இருந்து முடி கீழே விழுந்தால் சனி தோஷம் வந்து விடும்.

வரலட்சுமி நோன்பு கடைபிடிக்கும் முறை
பூஜை செய்யப் போகுமிடத்தில் இழை கோலம் போட்டு காவியிட்டு ஒரு தட்டில் அட்சதையைப் பரப்பி அம்மனை ஆவாஹனம் செய்யப் போகும் கலசத்தை அதன் மீது வைக்க வேண்டும். கலசத்தில் ஸ்ரீ வரலட்சுமி நமஹ என்று இருக்க வேண்டும். கலசத்தினுள் அட்சதையுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள் ஒரு வெள்ளிக் காசு மற்றும் ஒரு எலுமிச்சைப் பழமும் வைத்து மாவிலையைக் கலசத்தின் மீது வைத்து அதன் மீது தேங்காயை வைக்க வேண்டும். அம்மனின் முகத்தைக் கலசத்தோடு இணைத்து வைத்து விளக்கேற்றி வெண்பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். அம்மனை அழைப்பதாக உள்ள பாடல்கள் பாடி வரலட்சுமி அம்மனை வரவேற்க வேண்டும்.

பக்தியுடன் விரதம்
வரலட்சுமி விரதத்தின் போது ஒன்பது முடிச்சு இருக்கும் நோன்புக்கயிறு அவசியம். வயது மூத்த சுமங்கலிகள் கையால் நோன்புக்கயிறு கட்டிக்கெள்ள வேண்டும். சர்க்கரைப் பொங்கல் பாயசம், தாமரை மலர் அவசியம். மனதில் பக்தியுடன் சந்தோஷத்துடன் பூஜை செய்ய வேண்டும். பட்டுத்துணியால் அவசியம் அம்மனை அலங்கரிக்க வேண்டும்.

அம்மனின் ஆசி கிடைக்கும்
அம்மன் அலங்காரம் செய்த உடன் முடிக்கயிறு தயாரிக்கும் போது 9 முடிச்சுகள் போட்டிருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலைதான் இந்த முடிச்சு போடவேண்டும். பூஜை செய்பவர்கள் பட்டு வஸ்திரம்தான் அவசியம் அணிய வேண்டும். சரிகை இருப்பது அவசியம். பூஜைக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு,வளையல், ரவிக்கை துணி கொடுத்து ஆசி பெற வேண்டும்.
Recommended Video

மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்
வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது. வரலட்சுமி பூஜை செய்வதற்கு முன்பாக விநாயகர் வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். பெரிய அளவில் செலவு செய்து பூஜை செய்ய முடியாவிட்டாலும் வரலட்சுமி பூஜையை மனநிறைவோடு செய்ய வேண்டும். ஒரு ரூபாய்க்கு கற்பூரம் ஏற்றி வரலட்சுமியை வழிபட்டாலும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். மஞ்சள் குங்குமம் பூ வைத்து முடி கயிறு வைத்து பூஜிக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications