துலாம், விருச்சிகம் ரெண்டு லட்டு தின்ன ஆசையா.. அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது பார்த்துக்குங்க

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: வைகாசி மாதம் ஜூன் 1 ஆம் தேதி வரையில் துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். இரண்டு ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Weekly rasi palan Lucky zodiac signs

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு நரசிம்மர் கவசம், நரசிம்மர் காயத்ரி கேட்பது நல்லது. நரசிம்மர் தெய்வ வழிபாடு, பானகத்துக்கான பொருள்கை தானமாக கொடுப்பது சகல விதத்தில் நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும். காது, மூக்கு, தொண்டை விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

கணவன், மனைவி அனுசரித்துக் கொண்டு வெள்ளைக் கொடி காட்டிச் செல்வது நல்லது. பெற்றோர் பெரியோரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. முதலீடுகளில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். தெய்வ தரிசனங்களுக்கான பிராப்தம் ஏற்படும். பிரசித்திபெற்ற கோயில்களுக்குச் சென்று வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் யோக பலத்தையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

உத்திரவாதத்துடன் எடுக்கக்கூடிய முடிவு பலரால் பாராட்டப்படும். முதலாளிகளுக்கு ஏற்றத்தைப் பெற்றுத் தரக்கூடிய அதிஅற்புதமான அமைப்பு உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதால் ஏற்றம், அனுகூலம், சந்தோஷம், லாபம் ஏற்படும். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள், நிந்தனைகள் எல்லாவற்றிலும் ஜெயம் ஏற்படும். வழக்குகளில் வெற்றி ஏற்படும். புதிய தொழில்கள் ஆரம்பிப்பது, சொந்த தொழில் ஆரம்பிப்பது போன்றவற்றை செய்வீர்கள்.

திருமணத்தில் இருந்த பாதிப்புகள் சரியாகும். புத்திர சந்தானத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். பிள்ளைகளுடன் இருந்து வந்த மனத்தாங்கல்கள் சரியாகும், பெற்றோர், பெரியோருடன் மட்டும் கோபதாபமில்லாமல் இருப்பது நல்லது. புதிய அறிமுகங்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அண்டை, அயலார் வீட்டில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கண் நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள், கணவன், மனைவி உடல்நிலையிலும், வயிறு தொடர்பான பிரச்சனைகளிலும் மிகுந்த அக்கறை தேவை. இஷ்ட பெண் தெய்வ வழிபாடு, தேவி வழிபாடு, முருகர் வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்து வந்தால் தொழிலில் வெற்றி, எதிரிகளின் பதட்டம் குறையும், தூக்கமின்மை நீங்கும், சுபவிரைய பிராப்தம் உண்டாகும்.

கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். முதலீடுகளுக்குப் பஞ்சம் இருக்காது. தாய் வழி, தந்தை வழி உறவு மேன்மை அடையும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். திடீர் பண வரவுக்கான உத்தரவாதம் ஜூன் 1 ஆம் தேதிக்குள் நிச்சயமாக ஏற்படும். ஜூன் 26 ஆம் தேதி முதல் திடீர் பண வரவு உண்டாவதில் முதன்மையானவராக இருப்பீர்கள்.

வசதிக்கேற்ப ஏதாவதொரு அதிர்ஷ்டம் நிச்சயமாக கிடைக்கும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு, பிறர் குடும்பத்தில் உங்களுடைய தலையீடு கூடவே கூடாது. கணவன், மனைவியுடைய சிறு சண்டையும் பெரிய பாதிப்பு, பெரிய சண்டையையும் ஏற்படுத்தும். குடும்ப விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. புதிய அறிமுகத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நன்மையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+