கனவில் யானை.. மாலை போடுதா? விரட்டுதா? என்ன நடக்கும்.. கனவு சாஸ்திரம் சொல்லும் உண்மை
சென்னை: யானை உங்களை ஆசீர்வாதம் செய்வது போல கனவு வந்தால் உங்களுடைய அனைத்து காரியங்களுக்கும் வெற்றி கிடைக்கும். யானை உங்களுக்கு மாலை போடுவது போல கனவு வந்தால் உங்களுக்கு பெரிய பதவி தேடி வரும் என்று அர்த்தம். பொதுவாக யானை கனவில் வருவது நன்மையை குறிக்கும் என்று சொல்வார்கள். கனவு சாஸ்திரம் யானையைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
இந்து மதத்தில் யானையை விநாயகக் கடவுளின் அம்சமாக பார்க்கின்றனர். உலகின் மிகப்பெரிய நிலப்பரப்பு பாலூட்டியான யானை பல சிறப்பம்சங்களைக் கொண்டது. அபாரமான நினைவாற்றல் கொண்டது யானை. யானையை பார்த்து சிலருக்கு பயம் இருக்கலாம். பலருக்கும் யானையை பார்த்தால் வணங்கத்தான் தோன்றும்.

இந்தியாவில் பல கோவில்கள் யானைகள் உள்ளன. திருவிழாவில் யானைதான் முதன்மையானதாக வரும். ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்டு வரும் யானையை வணங்குகின்றனர். யானைக்கு பழங்களை வாங்கிக் கொடுக்கின்றனர். யானை கனவில் வருவது சுபமானதாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எந்த நேரத்தில் கனவில் யானை எப்படி வருகிறது என்பதைப்பொருத்தும் பலன்கள் மாறுபடும்.
யானை பொதுவாக அதிர்ஷ்டத்தின் அடையாளமாகும். உங்கள் கனவில் யானையுடன் நட்பாக இருப்பது போல காண நேர்ந்தால் நெருங்கிய உறவில் உள்ள ஒருவர் நல்ல செய்தியை கூறப்போகிறார் என்று அர்த்தமாகும். யானை கனவு வந்தால் உங்களின் பலமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கப்போகிறது என்று அர்த்தமாகும். விளை நிலங்களில் யானை உலா வருவதைப் போல கனவு கண்டால் உங்களின் செல்வம் அதிகரிக்கப்போகிறது என்று அர்த்தம்.
யானை தண்ணீரைக் கடப்பது போலவே தண்ணீரில் நிற்பது போல கனவு வந்தாலோ, தண்ணீரை பீய்ச்சி அடிப்பது போல கனவு காண நேர்ந்தாலோ, கவனமாக இருக்க வேண்டும். கடந்தகால கவனக்குறைவின் மூலம் சிக்கல் வரப்போவதை உணர்த்துகிறது அந்த கனவு. உங்கள் கனவில் இருந்த குட்டி யானைக்குவருகிறதா? ஆம் எனில், அது ஒரு அற்புதமான சகுனம். காரிய வெற்றி உண்டாகப்போகிறது. செல்வ செழிப்பு ஏற்படப்போகிறது என்று அர்த்தமாகும்.
பெண் யானை கனவில் வந்தால் உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களின் மீது அக்கறை செலுத்த வேண்டும். திருமணம் ஆகாத இளம் பெண் அல்லது இளைஞரின் கனவில் யானை வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதை உணர்த்துகிறது. வனத்தில் யானைகள் குடும்பத்தோடு கூட்டமாக மகிழ்ச்சியாக இருப்பது போல கனவு வந்தால் பரம்பரை சொத்தில் பங்கு வரைப்போகிறது என்பதை உணர்த்துகிறது.
வீட்டு வாசலில் யானை நிற்பது போல கனவு வந்தால் பல நன்மைகள் நடக்கப்போகிறது என்று அர்த்தம். யானை உங்களை ஆசீர்வாதம் செய்வது போல கனவு வந்தால் உங்களுடைய அனைத்து காரியங்களுக்கும் வெற்றி கிடைக்கும். வெள்ளை யானை கனவில் வருவது வெற்றியின் அடையாளமாகும். சிலருக்கு லாட்டரியில் பணம் கிடைக்கப்போவதை யானை கனவுகள் உணர்த்துகின்றன. நிறைய சொத்துக்கள் வாங்கப்போகிறீர்கள் என்று அர்த்தமாகும்.
கோவிலிலோ அல்லது பொது இடத்திலோ யானை மீது சவாரி செய்வது போல கனவு வந்தால் குடும்பத்திலும் தொழில்துறையிலும் வளர்ச்சி ஏற்படப்போகிறது. சமூகத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கப்போகிறது என்பதை உணர்த்துகிறது. கனவில் வரும் யானை உங்களுக்கு மாலை போடுவது போல கனவு வந்தால் உங்களுக்கு பெரிய பதவி தேடி வரும் என்று அர்த்தம். குட்டி யானை சுட்டித்தனமாக விளையாடுவதைப் பார்த்தால் உங்கள் பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி தேடி வரப்போகிறது என்று அர்த்தமாகும்.

யானை உங்களை தாக்குவதைப் போல கனவு கண்டால் வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளால் ஏதோ சங்கடங்கள் நேரப்போகிறது என்று அர்த்தமாகும். எனவே அலுவலகத்தில் உயரதிகாரிகளை பகைத்துக்கொள்ளாதீர்கள். பறக்கும் யானை கனவில் வந்தால் நீங்கள் மிகப்பொய லட்சியத்தை அடையப்போகிறீர்கள் என்று அர்த்தமாகும்.
யானையை பார்த்து பயப்படுவது போல கனவு வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனை நடக்கப்போகிறது என்று அர்த்தமாகும்.
வனத்தில் யானை துரத்துவது போல் கனவு வந்தால் உங்களின் லட்சியத்தை அடையப்போவதில் சில தடைகள் வரப்போகிறது என்று அர்த்தம். மதம் பிடித்த யானையை கனவில் கண்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படப்போகிறது என்று அர்த்தம். பெரியவர்களிடம் விட்டு கொடுத்து போக வேண்டும். இறந்த யானை கனவில் வந்தால் நீங்கள் புதிய மாற்றத்திற்கு தயாராகப்போகிறீர்கள் என்று அர்த்தமாகும்.












Click it and Unblock the Notifications