வெளியானது ஆப்பிள் 16 சீரிஸ்.. ஐபோன் 16, 16+ போனும் வெளியானது! இவ்வளவு சிறப்பம்சங்களா? இனி கெத்துதான்
நியூயார்க் : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற இட்ஸ் க்ளோ டைம் நிகழ்வில், ஆப்பிள் 16 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஏர் பாட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக ஆப்பிள் 16 சீரிஸின் அடிப்படை ஸ்மார்ட் போன் மாடலான ஐபோன் 16 அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதன் சிறப்பம்சங்கள் என்ன? விலை எவ்வளவு? உள்ளிட்ட விபரங்களை பார்க்கலாம்.
உலக அளவில் செல்போன் விற்பனை பிரிவில் முன்னணி இடத்தில் இருக்கும் ஆப்பிள் இன்று தனது ’இட்ஸ் க்ளோ டைம்’ நிகழ்வில் ஆப்பிள் ஐபோன் 16 ஃபோன்களை அறிமுகம் செய்துள்ளது.

உலகமே எதிர்பார்த்து காத்திருந்த இந்த நிகழ்வில் ஐபோன் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், ஆப்பிள் வாட்ச், ஏர் பட்ஸ், ஐஓஎஸ் 18 உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளது.
இட்ஸ் க்ளோ டைம் நிகழ்வு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு தொடங்கியது. ஆப்பிள் நிறுவனத்தின் யூடியூப் சேனல், ஆப்பிள் டிவி மற்றும் ஆப்பிள் இணைய தளத்தில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. கலிபோர்னியாவின் குபர்ட்டினோவில் உள்ள ஆப்பிள் தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் வெளியானது. ஆப்பிளின் அடிப்படை மாடலான ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களுடன், 4th ஜெனரேஷன் ஏர்பாட்ஸ், ஐஓஎஸ் 18 இயங்கு தளம், ஆப்பிள் வாட்ச் 10 ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஐபோன் 15 ஃபோன்கள் வெளியான நிலையில் தற்போது ஐபோன் 16 மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்பிள் 16 ஐபோnai வெளியிட்டுப் பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16, ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாகவும் இது வரலாற்றில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார். பின்புறம் கேப்சூல் டிசைனில் இரு கேமராக்கள் ஃப்ளாஷ் உடன் இந்த போன் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.
கருப்பு, வெள்ளை, பிங்க், கிரீன் மற்றும் நீல வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன் 16 வெளியிடப்பட்டிருக்கிறது. ஆப்பிள் ஐபோன் 16, 6.1 இன்ச் டிஸ்ப்ளே உடனும், ஐபோன் 16 பிளஸ் 6.7 இன்ச் டிஸ்ப்ளே உடனும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக இந்த சீரிஸில் ஆக்சன் பட்டனும் இடம் பெற்றுள்ளது. சிரி சப்போர் உள்ளிட்ட அம்சங்களை ஆக்சன் பட்டன் மூலம் பெறலாம். கூடுதல் சிறப்பம்சமாக இந்த போனில் புதிதாக camera control button இடம்பெற்றுள்ளது. ஆப்பிள் ஐபோன் 16 ஏரோஸ்பேஸ் தர அலுமினியத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. தற்போது சந்தையில் இருக்கும் மற்ற பேக் க்ளாஸ் போன்களுடன் ஒப்பிடுகையில் ஆப்பிள் 16 2 மடங்கு அதிக வலுவுடையது

பயனர்கள் விரைவாகவும், போன் ஹேங் ஆகாமல் பயன்படுத்துவதற்காக புதிய A18 chip பயன்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பம்சமாக இந்த போனில் ஆப்பிள் ஏஐ இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் போட்டோக்களை நீங்களாகவே விரும்பியவாறு எடிட் செய்து கொள்வதோடு, அதனை ஸ்டிக்கராகவும் மாற்றிக் கொள்ளலாம்..
பல ஆண்டுகள் கழித்து நீங்கள் எடுத்த புகைப்படத்தை பார்க்க நினைத்தால், சென்னை மெரினாவில் நீல சட்டையுடன் எடுத்த போட்டோ என டைப் செய்தாலே அது தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆப்பிள் ஏஐ எடுத்துக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் ஐபோன் 16 ஆனது யூஎஸ் இங்கிலீஷ் பதிப்பில் அடுத்த மாதமும், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து , தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆங்கில பதிப்புகளில் டிசம்பர் மாதமும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சைனிஸ், பிரான்ஸ், ஜாப்பனீஸ், ஸ்பானிஷ் மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் விஷுவல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்துடன் கேமரா கண்ட்ரோல் கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. 48 எம்பி மெயின் கேமரா, 12 எம்பி டெலி போட்டோ கேமரா அம்சங்களுடன் கேப்சூல் கேமரா அம்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அதிகபட்ச தரத்தில் குறைந்த மெமரி கொண்ட புகைப்படங்களை எடுக்க முடியும் குறிப்பாக. 12mb டெலி போட்டோ கேமரா மூலம் மிகவும் நுண்ணிய பொருட்களைக் கூட தெளிவாக படம் பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டோ ஃப்ரேம், சென்சார் ஷிப்ட் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களையும் இது கொண்டுள்ளது. இதன் மூலம் மேக்ரோ புகைப்படங்கள் மற்றும் இடம் சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
மேலும் ஐஓஎஸ் 18 மூலம் இதுவரை இல்லாத ஆப்பிள் எக்ஸ்பீரியன்ஸை உங்களால் உணர முடியும். குறிப்பாக ஏ18 தொழில்நுட்பம் மூலம் அட்டகாசமான கேமிங் அனுபவத்தை உணரும்படி உருவாக்கப்பட்டுள்ளது.
அதிக நேரம் தாக்குப் பிடிக்கும் வகையில் ஆப்பிள் போனில் கூடுதல் பேட்டரி லைஃப் வழங்கும் வகையில் பெரிய பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது. அவசரகால sos வீடியோ கால் அம்சமும் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் சாட்டிலைட் மெசேஜிங் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், உங்கள் செய்திகளை மிகவும் பாதுகாப்பாக அனுப்பவும் பெறவும் முடியும். மேலும் மேம்படுத்தப்பட்ட சாட்டிலைட் வசதி மூலம் துல்லியமாக பல்வேறு மேப் வசதிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
புதிய ஐபோன் 16 799 டாலர் விலையிலும் (இந்திய மதிப்பில் சுமார் 67 ஆயிரம் ரூபாய்), iPhone 16 Plus 128GB மெமரியுடன் 899 டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் 75,400 ரூபாய் ) விலையிலும் கிடைக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications