எந்த விமானத்தில் கம்மி ரேட்.. ஈஸியா தெரிந்துகொண்டு பந்தாவா பறக்கலாம்.. கூகுள் தந்த புது வசதி
சென்னை: ஆன்லைன் விமான டிக்கெட் புக்கிங் சர்ச் சர்வீஸ் வழங்கும் கூகுள் பிளைட்ஸ் தற்போது இன்சைட்ஸ் (insights) என்ற ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த வசதி விமான கட்டணத்தை குறைவான விலையில் புக்கிங் செய்ய உதவும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே பயணிக்கக் கூடியதாக இருந்து வந்த விமானங்கள் தற்போது நடுத்தர மக்கள் கூட அதிகம் பயன்படுத்தக் கூடிய ஒன்றாக மாறிவிட்டது. மலிவான கட்டணம் மற்றும் இரண்டாவது கட்ட நகரங்களுக்கு கூட விமான சேவைகள் அதிகரித்து இருப்பது என இதற்கு பல காரணங்களை சொல்லலாம்.

விமானங்களில் விலையை பொறுத்தவரை dynamic முறையில் நிர்ணயிக்கப்படுகின்றன. எளிதாக சொல்வது என்றால் நம்ம ஊர் ஆம்னி பேருந்துகளில் பண்டிகை காலத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு விலையை ஏற்றிவிட்டு, கூட்டம் சேராத நாட்களில் அரசு பேருந்து கட்டணத்தை விட குறைவான கட்டணத்தில் இயக்குகிறார்களே அதே முறைதான். அதாவது தேவை அதிகமாக இருக்கும் போது கட்டணம் எகிறும். அதேநேரத்தில் தேவை குறையும் நேரத்தில் விலை மலிவாக இருக்கும்.
விமானத்தில் பின்பற்றப்படும் முறையை பார்த்துதான் ஆம்னி பேருந்துகளில் தற்போது இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறதோ என்று சொல்லும் அளவுக்கு பேருந்துகளிலும் அச்சுபிசிராமல் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். விமானங்களை பொறுத்தவரை பயண நாட்களுக்கு பல வாரங்களுக்கு முன்பே திட்டமிட்டு புக்கிங் செய்தால் கட்டணம் சற்று குறைவாக இருக்கும். ஆனால் பயணம் நெருங்கும் நாட்களில் விமான கட்டணம் அதே தொலைவுக்கு அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு பலனளிக்கும் வகையில் கூகுள் பிளைட்சில் புதிய வசதியை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அம்சம் மூலமாக விமான டிக்கெட்டுகளை குறைந்த விலையில் புக்கிங் செய்வதற்கான சரியான பீரியட் எது என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும். அதாவது, எந்த நேரத்தில் புக் செய்தால் குறைந்த விலையில் டிக்கெட்டை புக் செய்யலாம் என்பதற்கான தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே விலை டிராக்கிங் அலார்ட்ஸ் மற்றும் விலை கேரண்டி சாய்ஸ் போன்றவை இருக்கும் நிலையில் கூடுதலாக இந்த வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. கூகுள் பிளைட்ஸ் சேவையின் மூலமாக முந்தைய விலை பேட்டர்ன்களை அடிப்படையாக கொண்டு புக்கிங்க் டிரெண்டுகள் செயல்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
சில விமானங்களின் விலைப்பட்டியலை பொறுத்தவரை விலை உத்தரவாத பேட்ஜ் இடம் பெற்றிருக்கும். அதாவது, இந்த விமானத்தில் இன்று நீங்கள் பார்க்கும் விலை குறையவே வாய்ப்பு இல்லை என்பதாகும். இந்த விமானங்களில் டிக்கெட்டை புக்கிங் செய்தால், விமானம் டேக் ஆப் ஆகும் வரை டிக்கெட் விலை தினசரி கண்காணிக்கப்படும். ஒருவேளை அளிக்கப்பட்ட உத்தரவாத விலையை விட குறைந்தால் இந்த விலை வித்தியாசத்தை கூகுள் பே வழியாக நாங்களே உங்களுக்கு தந்து விடுவோம்" கூகுள் தனது பிளாக்ஸ்பாட்டில் தெரிவித்துள்ளது. அடிக்கடி விமான பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இந்த வசதி இருக்கும் என்று தெரிகிறது.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி












Click it and Unblock the Notifications