சீரக சம்பா முதல் சிக்கன் குழம்பு வரை.. இனி எதுவா இருந்தாலும் பிரச்சனை இல்லை.. கலக்கும் கூகுள் மேப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூகுள் மேப்ஸ் செயலி மூலம் தான் இன்னும் நம்மில் பலரும் நாம் செல்லும் இடத்திற்கான ரூட்டை கண்டுபிடிக்கிறோம். ஆனால், இப்போது வெறுமன ரூட்டை காண்பிப்பதை தாண்டி மேப்ஸ் பல விஷயங்களை செய்கிறது. ஏஐ உடன் சேர்ந்து கூகுள் மேப்ஸ் செய்யும் இந்த அட்டகாசமான வசதிகள் குறித்து நாம் பார்க்கலாம்!

நாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல சிறந்த ரூட்டை தேட கூகுள் மேப்ஸ் தான் யூஸ் செய்வோம். புதிய இடத்திற்கு செல்லும்போது பலருக்கும் இப்போது கை கொடுப்பது கூகுள் மேப்ஸ் தான். சில நேரங்களில் மேப்ஸ் நம்மை சுத்தலில் விட்டாலும் கூட பெரும்பாலான சூழல்களில் சரியான வழியையே நமக்கு காட்டும்.

google maps AI Google Maps AI

கூகுள் மேப்ஸ்

இதற்கிடையே ஏஐ உடன் சேர்ந்து கூகுள் மேப்ஸ் இப்போது பல புதிய வசதிகளை நமக்கு கொண்டு வந்துள்ளது. பயணத்தின் போது தேவையான பல விஷயங்களையும் ஒரே இடத்தில் செய்து முடிக்கும் வகையில் இந்த AI வசதிகள் உள்ளன. பயணத்தின்போது எந்த உணவகத்திற்கு செல்லலாம், எந்த ஹோட்டலில் தங்கலாம், அருகில் என்ன நிகழ்ச்சிகள் நடக்கின்றன என்பது போன்ற தகவல்களை இனி மேப்ஸ்லேயே கேட்டு தெரிந்துகொள்ள முடியும்.

புதிய வசதி

இதற்காக மேப்ஸ் செயலியில் 'Ask Maps' என்ற ஏஐ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் யூசர்கள் சாதாரண கேள்விகளை கேட்பதன் மூலமாகவே தங்களுக்கு தேவையான தகவல்கள் பெறலாம். உதாரணமாக நீங்கள் செல்லும் ரூட்டில், "இந்த ரூட்டில் எங்கு உணவு நன்றாக இருக்கும்.." அல்லது "இந்த ரூட்டில் சீரக சம்பா பிரியாணி எங்கே கிடைக்கும்" என்பது போல நேரடியாகவே கேட்கலாம். நீங்கள் போகும் ரூட்டில் இருக்கும் உணவகங்கள், அவை திறந்திருக்கும் நேரம் உள்ளிட்ட தகவல்களை மேப்ஸ் தேடி வழங்கும்.

நீங்கள் என்ன மாதிரியான இடங்களுக்கு சென்றுள்ளீர்கள்.. உங்களுக்கு எது பிடித்துள்ளது என்பதை எல்லாம் ஏஐ மூலம் பிராசஸ் செய்து அதற்கேற்ற ஹோட்டல்களையே உங்களுக்கு பரிந்துரையாக அளிக்குமாம்.

எல்லா கேள்விகளுக்கும் பதில்

அதேபோல எங்கே தங்கலாம் என்று சரியான ஹோட்டலை கண்டறியவும் Ask Maps உதவும். "பீச்சிற்கு அருகே குடும்பத்துடன் தங்குவதற்கு ஏற்ற, குறைந்த கட்டண ஹோட்டல் வேண்டும். ரூம் நல்லா பெரியதாக இருக்க வேண்டும்" என்று கேட்டால், அதற்கான ஹோட்டல்களை மேப்ஸ் காட்டும். அந்த ரூம் கட்டணம் என்ன.. அதை இப்போது புக் செய்ய முடியுமா இல்லையா என எல்லா விவரங்களும் அதிலேயே வந்துவிடும். இதனால் யூசர்கள் ஒவ்வொரு ஹோட்டல் இணையத்திற்கும் சென்று தனித்தனியாக தேட தேவையில்லை.

கூகுள் மேப்ஸின் இந்த புதிய வசதி இத்தோடு நிற்கவில்லை. ஒரு ஹோட்டலில் தங்குகிறீர்கள். நீங்கள் தங்கம் காலகட்டத்தில் ஹோட்டல் அருகே திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் சுற்றுலா தலங்கள் எதாவது நடக்கிறதா என கேட்டால்.. அதற்கான பதிலையும் வரும். மேலும், நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகளையும் கூட நீங்கள் நேரடியாக புக் செய்து கொள்ளலாம்.

தமிழிலேயே கேட்கலாம்

இந்த Ask Maps ஏஐ அம்சம் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் மற்றும் பிராந்தியங்களில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் சில கூடுதல் வசதிகளோடு இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய மக்கள் தேடுவதற்கு ஏற்ப அது பதில் சொல்லுமாம். மேலும், தமிழ், இந்தி உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் நாம் கேள்விகளை கேட்க முடிகிறது.

இது போக Personal Intelligence என்ற ஒரு ஆப்ஷனும் இருக்கிறது. இந்த Personal Intelligenceஐ நீங்கள் ஆன் செய்தால்.. Gmail போன்ற இதர கூகுகில் செயலிகளில் இருக்கும் டேட்டாவை வைத்து இன்னுமே பெஸ்ட் பரிந்துரைகளை மேப்ஸ் நமக்கு வழங்குமாம். உதாரணமாக, உங்கள் விமான டிக்கெட் அல்லது ஹோட்டல் விவரம் ஜிமெயிலில் இருந்தால், அந்த தகவலின் அடிப்படையில் உங்களுக்கு ஏற்ற இடங்களை Ask Maps பரிந்துரைக்கலாம்.

பொது போக்குவரத்து தகவல்

இதனுடன் ரியல் டைம் பொது போக்குவரத்து வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், ரயில்கள் மற்றும் படகு சேவைகள் குறித்த நேரலை தகவல்களை மேப்ஸ் மூலம் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இப்படி ஒரு காலத்தில் வழி கண்டுபிடிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்ட மேப்ஸ், இப்போது ஏஐ வந்தவுடன் மொத்தமாக மாறிவிட்டது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+