• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அஞ்சு லட்சம் ரூபாயில் எடுத்த படம் பதினாறு வயதினிலே...!

|
  MUDHAL MARIYADHAI TO MEENDUM ORU MARIYADHAI | BHARATHIRAJA EXCLUSIVE INTERVIEW | FILMIBEAT TAMIL

  சென்னை: ஜெயா டிவியின் உள்ளே வெளியே நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா அஞ்சு லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் பதினாறு வயதினிலே படம் எடுத்தோம் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்டூடியோ உள்ளே நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேள்வி கேட்க, வெளியில் நேரலை நிகழ்ச்சியை பார்த்து யாரும் போனில் கேள்வி கேட்கலாம்.

  ஜெயா டிவியில் வாராவாரம் ஞாயிற்று கிழமை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நேரலை நிகழ்ச்சியை மாலா மணியன் தொகுத்து வழங்கி வருகிறார். பதினாறு வயதினிலே படத்துக்கு முதலில் நாகேஷைத்தான் தேர்வு செய்து வைத்து இருந்ததாக கூறினார்.

  தயாரிப்பாளர் ராஜ்கண்ணு, இல்லை இந்த படத்துக்கு அழகாக இருப்பவரை மாற்றிக் காண்பித்து புகழடைய வேண்டும். அதனால் வேறு யாரையாவது தேர்வு செய்யலாம் என்று சொன்னார். அப்போதுதான் கமல்ஹாசனை தேர்வு செய்து அழகான அவரை அலங்கோலப் படுத்தி சப்பாணியாக்கியதை கூறினார்.

  கமலுக்கு அட்வான்ஸ்ட் மைண்ட்

  கமலுக்கு அட்வான்ஸ்ட் மைண்ட்

  கமல்ஹாசனை சப்பாணியாக மாற்றியது குறித்து கூறுங்கள் என்று மாலா மானியன் கேட்க, கமல்ஹாசன் அட்வான்ஸ்ட் மைண்ட் உள்ளவர். சப்பாணியா நடிக்கனும்னா. இப்படி இப்படித்தான் முகம் இருக்கணும். கோவணம் கட்டிக்கணும் என்று சொன்னவுடனே நீங்க என்ன சொல்றீங்களோ அதை செய்யறேன்னு சொன்னார். ரெண்டே சட்டைத்தான் கொடுத்தோம். அவர் அதை கசக்கி போட்டுக்குவார். கமல் ஒரு அபரிமிதமான நடிகர் என்று கூறினார்.

  Gokulathil Seethai Serial: ராசாவே.. ஆஹா.. அந்த காயத்ரியா இது.. மறக்க முடியாத கண்ணாச்சே அது!

  நடிப்பது சிரமம்

  நடிப்பது சிரமம்

  தொலைபேசியில் லைனில் வந்த நடிகை ராதா நீங்க கல்லுக்குள் ஈரம் படம், குரங்கு பொம்மை, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடிகராயிட்டீங்க. நடிப்பதில் நீங்கள் என்ன வித்தியாசம் காண்பித்தீர்கள் என்று கேட்டார். அப்போது பதில் அளித்த பாரதிராஜா, நடிக்கறது ரொம்ப சிரமம்னு உணர்ந்தேன். எத்தனையோ பேரை அடிச்சு கூட நடிக்க வச்சுட்டேன். இப்போ பார்க்கையில் ரொம்ப கசக்கி பிழிஞ்சுட்டேனோன்னு தோணுது. மெமரி பவர், ரிதம் சென்ஸ் கூட நடிக்கறதுக்கு வேணும். கல்லுக்குள் ஈரம் நடிச்சப்பவே நான் மெச்சூரிட்டியா இல்லை. அதனாலதான் இயக்குநர்னா தொப்பியோட இருக்கணும் இப்படி எல்லாம் செய்துட்டேன்.

  ரிபிட்டேசன் பிடிக்காது

  ரிபிட்டேசன் பிடிக்காது

  எனக்கு ரிபிட்டேசன் பிடிக்காது.. எல்லா படத்தையும் பார்த்தால் ஒவ்வொண்ணும் ஒரு விதத்தில் இருக்கும். நிழல்கள் படம் எடுத்தபோது வெகு ஜன மக்கள்கிட்டே போய் சேரலை. அதனால இளைஞர்களை கவரும்படி படம் எடுக்கணும்னு யோசிச்சேன். அப்போதுதான் காதலை சொல்லலாம்னு யோசிச்சேன். அப்படி உருவானதுதான் அலைகள் ஓய்வதில்லை. இன்று அந்த படம் பார்த்தாலும் பாரதிராஜாகிட்டே இவ்ளோ இளமை விளையாடி இருக்கேன்னு நினைச்சுக்குவேன் என்று சொன்னார் பாரதிராஜா.

  விதை போட்டது நான்

  விதை போட்டது நான்

  நிழல்கள் ரவி லைனில் வந்தார்.. அப்போது உங்கள் மோதிர கையால் குட்டு பட்டவன் நான் சார். இன்னிக்கு நாங்க சாப்பிடற சாப்பாடு நீங்க போட்டதுதான். என்னை மாதிரி பலர் இப்படி உங்கள் மோதிர கையால் குட்டு பட்டவர்கள். இன்று ஆல மரம் போல வளர்ந்து நிக்கறோம்.இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சார் என்று கேட்டார். அப்போதுதான் பாரதிராஜா, விதை நான் போட்டது...வளர்ந்தது எல்லாம் நீங்களாகத்தான் என்று கூறினார். அதோடு கடைசி மூச்சு வரை படம் இயக்கிக் கொண்டுதான் இருப்பேன் என்று கூறினார்.

  இயக்குநர் தந்தை

  இயக்குநர் தந்தை

  பாரதிராஜா பேசிக்கொண்டு இருக்கையில் அவரது மகன் மனோஜ் லைனில் வந்தார். அப்போது இயக்குநர் பாரதிராஜா, தந்தை பாரதிராஜா பற்றி சொல்லுங்க டாடி என்று கேட்டார். அப்போது, இயக்குநராக நான் ஜெயித்துவிட்டேன். தந்தையாக நான் தோற்றுவிட்டேன் என்று கூறினார். ஆனால், மனோஜ் இதை ஒப்புக் கொள்ளவில்லை. என்னையும் தங்கையையும் நன்றாகவே கவனித்தீர்கள் என்று கூறினார். முழு நேரத்தையும் உங்களுக்காக கொடுத்து இருந்தால் இன்னும் உங்கள் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும் என்று கூறினார் பாரதிராஜா.

   
   
   
  English summary
  Kamal Haasan's Advanced Mind is about to ask Mala Manian to tell him about Kamal Haasan's transformation into sappani. Do you like it? This is how the face looks. As soon as you say that you will do what you say. We gave the two shirt. He would squeeze it. Kamal is a fine actor.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X