2022ல் திடீர் திருமணம் செய்த சின்னத்திரை பிரபலங்கள்... பரபரப்பை ஏற்படுத்திய 10 ஜோடிகள்
சென்னை: 2022 வருடம் முடிவடைய இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த வருடத்தில் திருமணம் செய்த சின்னத்திரை பிரபலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியவர்களை பார்க்கலாம்.
திடீர் திருமணத்தால் பலர் பிரபலம் அடைந்து இருக்கின்றனர். குறிப்பாக மகாலட்சுமி ரவீந்தர் ஜோடி, அதுபோல பத்து சின்னத்திரை பிரபலங்களும் திருமணத்தின் மூலமாக இந்த வருடத்தில் பிரபலம் அடைந்து இருக்கின்றனர்.

மகாலட்சுமி- ரவீந்தர்
சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி திடீரென திரைப்பட தயாரிப்பாளர் ஆன ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார். ஒன்றரை வருடங்களாக காதலித்து ரவீந்திரரை இரண்டாவது திருமணம் செய்திருந்தார்..செப்டம்பர் ஒன்றாம் தேதி இவருடைய திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. சமூக வலைதளத்தில் டிரெண்டிங் ஜோடியாக இவர்கள்தான் இடம் பிடித்திருந்தனர்.

புகழ் -பென்ஸி
விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து இவர் பென்ஸி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல வருடங்களாக இவர்களுடைய காதல் வாழ்க்கை இந்த வருடம் திருமணத்தில் தொடங்கி இருக்கிறது.

திவ்யா ஸ்ரீதர்- அர்ணவ்
சன் டிவியில் செவ்வந்தி சீரியலில் நடித்து வரும் திவ்யா ஸ்ரீதர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியலின் கதாநாயகனான அர்ணவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் முடிந்து புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியான பிறகு இவர்களுடைய வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கும் நிலையில் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த ஜோடியும் இந்த வருடத்தில் திருமணத்தை செய்து இருக்கின்றனர்.

முனீஸ் ராஜா- பிரியா
சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் சம்பந்தம் கேரக்டரில் நடித்து வந்த முனீஸ் ராஜா இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அன்ன லட்சுமி அமுதாவும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய திடீர் திருமணம் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்ப வரைக்கும் இவருடைய குடும்பப் பிரச்சனை சமூக வலைதளத்தில் பலருக்கும் தெரிந்ததுதான்.

நட்சத்திரா- விஷ்வா
ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் வெண்ணிலா கேரக்டரில் நடித்து பலருக்கும் பரிச்சயமான நட்சத்திரா இந்த வருடத்தில் விஷ்வா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய நண்பர்கள் கூட்டணியில் நட்சத்திரா மட்டும் தான் சிங்களாக சுற்றிக் கொண்டிருந்தார். அவரும் இந்த வருடத்தில் எளிமையாக திருமணத்தை முடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தார்.

நவீன்- கண்மணி
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியலின் மூலமாக பிரபலமான நவீன் செய்தி வாசிப்பாளர் கண்மணியை பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் காதல் திருமணம் என்று வதந்திகள் கிளம்பி வந்த நிலையில் அப்படி எல்லாம் இல்லை இது வீட்டில் பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் தான் என்று இவர்கள் கூறியிருக்கின்றனர்.

காயத்ரி ரெட்டி- நிஷாந்த்
பிகில் திரைப்படத்தில் நடித்த காயத்ரி ரெட்டி ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியின் மூலமாக ஒரு போட்டியாளராக அறிமுகம் ஆகி தன்னுடைய விளையாட்டு திறமையை சிறப்பாக காட்டியிருந்தார். இவர் இந்த வருடத்தில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

ரித்திகா- வினோத்
விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான ரித்திகா தற்போத பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்துக் கொண்டிருக்கும் போது விஜய் டிவியை சார்ந்த வினோத் என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இவருடைய திருமணம் சமீபத்தில் முடிந்திருந்தாலும் இவருடைய திருமணம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தான் இருந்து வருகிறது.

ஸ்வேதா- மால் மருகா
சன் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பான சந்திரலேகா சீரியலில் சந்திராவாக நடித்து வந்த ஸ்வேதா ஒரு சில நாட்களுக்கு முன்பு தனது காதலரை திருமணம் செய்து இருக்கிறார். இவருடைய திடீர் திருமணமும் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது..பல வருடங்களாக இவர் யாரை த காதலிக்கிறார் என்று கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இப்போது திருமண செய்தி கொஞ்சம் இன்ப அதிர்ச்சியாக தான் இருக்கிறதாம்.

சுகேஷ்- நந்தினி
பாரதி கண்ணம்மா சீரியலில் அகிலன் கேரக்டரில் நடிக்கும் சுகேஷ் கடந்த மாதம் மாடலின் பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். இது சின்னத்திரை ரசிகர்களின் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications