ரிவ்யூ கேட்டு காண்டான அண்ணாச்சி...சாமர்த்தியமாக சமாளித்த அபிஷேக்
சென்னை: வெளியில் செய்த வேலையே வீட்டுக்குள்ளும் தொடங்கிவிட்டார் அபிஷேக்.
ரிவ்யூ எடுக்கிறேன் என்று அவர் பேசிய வார்த்தைகளை கேட்டு அண்ணாச்சி மட்டுமல்ல அவருடைய ரசிகர்களும் கடுப்பாகி விட்டனர்.
வயதில் பெரியவரை இந்த மாதிரி ஒரு வார்த்தையில் குறிப்பிடலாமா என்று நெட்டிசன்கள் போர்க்கொடியை தூக்கி விட்டார்கள்.

அண்ணாச்சியின் டைமிங் காமெடி
பிக் பாஸ் 5 வது சீசனில் அதிகமாக அறிமுகம் இல்லாத நபர்கள் பலர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்தாலும், பலருக்கும் பரிச்சயமான தாங்கள் ரசிக்கும் ரசிகர்களாக இருக்கும் நடிகர்களாக இருப்பவர்களும் ஒரு சிலர் இதில் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பலருடைய கவலைகளை மறக்க வைத்து தன்னுடைய டைமிங் காமெடியால் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் இமான் அண்ணாச்சியை இந்த நிகழ்ச்சியில் பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் இவர் செய்யும் காமெடிகளும் வைரலாகி வருகிறது.

குழந்தைகளும் ரசிக்கும் அண்ணாச்சி
ஏற்கனவே இமான் அண்ணாச்சிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இவரை பார்த்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரசிக்கத் தொடங்கி விட்டனர். ஏற்கனவே குழந்தைகளின் காமெடி கிங்காக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது அனைத்து தரப்பினரையும் முகம் சுளிக்காத இவருடைய கேரக்டரால் கவர்ந்து வருகிறார். இவர் தன்னுடைய கதையை கூறி அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் கடைசியாக இவர் பேசிய வார்த்தை போட்டியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது போல ரசிகர்களின் மனதிலும் இவருக்கான ஒரு இடத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.
Recommended Video

அப்பவே அப்படி தான்
நிகழ்ச்சியில் அனைவரை விடவும் வயதில் மூத்தவராக இருக்கும் இமான் அண்ணாச்சியை பற்றி அவருடைய சக போட்டியாளராக அறிமுகமாகியிருக்கும் யூடியூபர் அபிஷேக் பேசி இருப்பதுதான், ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியாகவும் அபிஷேக் மீது கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனாலேயே பல நெகட்டிவ் கமெண்டுகள் அபிஷேக்குக்கு வந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு அபிஷேக்குக்கு அதிகமான நெகட்டிவ் கமெண்டுகள் வந்துகொண்டிருந்தன அதனை இந்த நிகழ்ச்சியிலே பிரியங்காவும் கூறியிருக்கிறார்.

என்னது அக்கா தம்பியா
பிரியங்கா, அபிஷேக் பற்றி கூறும்போது இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன்பு கூட என்னுடைய நண்பர்கள் எல்லோரும் சொல்லி தான் அனுப்பி வைத்தார்கள். அபிஷேக் கூட மட்டும் சேர்ந்து விடாதே என்று, அவரைப் பற்றி அந்த அளவிற்கு ரசிகர்கள் பலர் நெகட்டிவாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த வீட்டிற்குள்ளே அவருடன் நெருங்கி பழகும் போதுதான் இவரைப் பற்றி நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது என்று கூறியிருந்தார். அதனாலேயே தற்போது அபிஷேக்கும் இவரும் அக்கா தம்பி ஆக மாறி விட்டனர்.

குவியும் நெகட்டிவ் கமெண்ட்கள்
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரைப் பற்றியும் ரிவ்யூ கொடுக்கச் சொல்லி கமல்ஹாசன் கூறியதும் ஒவ்வொருவரையாக தன்னுடைய மனதில் தோன்றிய நல்ல குணங்களை மட்டும் கூறி இம்பிரஸ் பண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் அண்ணாச்சி பற்றி பேசும் போது, அண்ணாச்சி, "பழம் தின்னு கொட்டை போட்ட கேஸ்" என்று எதார்த்தமாக இவர் சொல்ல அவரும் எப்படி 'கேஸ்' என்று சொல்லலாம் என்று பொங்கி விட்டார். ஆனால் அதனை லாவகமாக சமாளித்து அபிஷேக், அண்ணாச்சி "பலாப்பழம்" போல வெளியே கரடுமுரடாக இருந்தாலும் மனது குழந்தை போல என்று சமாளித்து விட்டார். ஆனால் இதனை பார்த்து ரசிகர்கள் பலர் அபிஷேக்குக்கு நெகட்டிவ் கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications