பிக்பாஸ் பார்க்காமலேயே கமலை அந்தக் கிழி கிழித்து இருக்கிறாரா அபிஷேக்... கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: பூனை.. கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருட்டாக இருக்கிறது என்று சொல்வது போல இருக்கிறது, அபிஷேக்கின் பேச்சு என ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.
பொய் சொன்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று அபிஷேக்குக்கு எதிராக நெட்டிசன்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருவது தெரியாததால் என்னென்ன கதை கட்டுகிறார் பாருங்கள் என்று மீம்ஸ்கள் பறந்து வருகிறது.

முதல் எலிமினேஷன்
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் பல புதுமுகங்கள் அறிமுகமாகி இருந்தாலும் அதில் அனைவருக்கும் பரிச்சயமான முகமாக வலம் வந்து கொண்டிருக்கும் அபிஷேக் நெட்டிசன்கள் ஃபேவரைட் ஆக இருந்து வருகிறார். இவரை கலாய்ப்பதற்காகவே பலர் சமூக வலைத்தளத்தில் ஃபேன்ஸ் பேஜ் ஓபன் பண்ணி இவரை வைத்து மீம்ஸ்களை போட்டு வருகின்றனர். இந்த வாரம் இவருடைய பெயர் தான் கடைசி இடத்தில் இருந்ததால் இவர் தான் எலிமினேஷன் ஆவார் என்று நெட்டிசன்கள் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு வீணாகிவிட்டது. கடைசி நிமிடத்தில் அவருக்கு பதிலாக நாடியா சிங் வெளியேறி இருக்கிறார். இது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியான செய்தியாக தான் இருந்து வருகிறது.

வைரலான பழைய வீடியோ
நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி கண்டமேனிக்கு பேசிய அபிஷேக் தற்போது நிகழ்ச்சிகுள் வந்தபிறகும் தன்னுடைய கெத்தை விட்டுவிடாமல் அங்கேயும் இங்கேயும் கேமரா தன்னையே சுற்றி வரும்படி கண்டெண்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதனாலேயே தான் இந்த வாரம் இவருடைய பெயர் கடைசி இடத்தில் இருந்தாலும் இவர் தக்க வைக்கப்பட்டுள்ளார் என்று நெட்டிசன்கள் பலர் குறை குற்றம் சுமத்தி வருகின்றனர். பொதுவாக ஒரு ப்ரோமோ வந்தாலே அதில் அபிஷேக்கை பற்றி தாறுமாறாக கமெண்டுகளை போடும் ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல இவரைப் பற்றி வரும் கமெண்டுகளுக்கு லைக் போடுவதற்காகவே ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது.

ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள்
ஒரு யூடியூபர் ஆக இருந்து கொண்டு தன்னை சினிமா பையன் என்று அழைத்துக் கொண்டு இருக்கும் அபிஷேக் வெள்ளித்திரை நடிகர்களைப் பேட்டி எடுத்து அவர்களின் வாயிலிருந்து வார்த்தைகளை பிடிங்கி ரசிகர்களின் மத்தியில் பாப்புலர் ஆனவர். தனக்கு மட்டுமே உலக அறிவு முழுக்க இருக்கிறது என்று இவர் செய்யும் அட்டூழியங்கள் பேசும் வார்த்தைகளுக்கு நெட்டிசன்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் ஏற்பட்டுவரும் ஆனால் அதையெல்லாம் இவர் கண்டு கொள்வது இல்லையெனறு இவருடைய தீவிரமான ரசிகர்கள் கூறி வருகின்றனர். நெட்டிசன்கள் பலர் இவரை கலாய்த்து வந்தாலும் ஒரு சில ரசிகர்கள் இவருக்கு ஆறுதல் கொடுத்தும் வருகின்றனர்.
Recommended Video

என்னது பாக்கலையா??
நேற்றைய எபிசோடில் இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை யாரெல்லாம் பார்த்துவிட்டு இந்த சீசனில் வந்திருக்கிறீர்கள் என்று கமல்ஹாசன் கேட்ட கேள்விக்கு, அபிஷேக் அதிரடியாக கையை தூக்கி நான் இதற்கு முன்பு ஒளிபரப்பான சீசன்களில் ஒரு எபிசோடு கூட பார்க்கவே இல்லை. காரணம் நீங்கள் தொகுத்து வழஙகுவதால் இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை என்று நீண்ட விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் இதற்கு முன்பு இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி பேசிய வீடியோ தற்போது வைரலாக வலம் வருவதை அறிந்து கொள்ளாததால் இந்த மாதிரி பேசிக்கொண்டிருக்கிறார், வெளியே வந்து பார்த்த பிறகுதான் தெரியும் இவருக்கே நம்ம என்ன செஞ்சு இருக்கோம் என்று என நெட்டிசன்கள் இவரை வைத்து கலாய்த்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications