மரணத்தோடு போராடும் ஹுசைனியின் “பாராட்டும்” செயல்.. உடல் தானம், இதயம் மட்டும் இதற்காக! நெகிழ்ச்சி பதிவு
சென்னை: திரைப்பட நடிகராகவும் கராத்தே நிபுணராகவும் இருக்கும் ஷிஹான் ஹுசைனி ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஆபத்தான கட்டத்தில் இருக்கும் நிலையிலும் உடல் தானம் செய்து இருப்பதாக பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதோடு தன்னுடைய இதயத்தை மட்டும் "இதற்காக" பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று ஒரு குறிப்பையும் அதில் கூறி இருக்கிறார்.
மதுரையை பூர்வீகமாக கொண்ட ஷிஹான் ஹுசைன் கராத்தே மாஸ்டராக பல நடிகர்களுக்கும், பல மாணவர்களுக்கும் பயிற்சி அளித்திருக்கிறார். அதிலும் கே. பாலச்சந்தர் மூலமாகத்தான் புன்னகை மன்னன் திரைப்படத்தால் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கராத்தே மாஸ்டர்
அதிலும் வேலைக்காரன், மூங்கில் கோட்டை, உன்னை சொல்லி குற்றமில்லை போன்ற படங்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அதுபோல நடிகர் ரஜினிகாந்த் நடித்த பிளட் ஸ்டோன் என்ற ஹாலிவுட் படத்தில் வேலை பார்த்திருக்கிறார். அதுபோல தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு பத்ரி திரைப்படத்தில் கராத்தே சொல்லி கொடுக்கும் கேரக்டரில் நடித்திருந்தார்.
பத்ரி பட நடிகர்
இந்த திரைப்படத்திற்காக விஜய் இவரிடம் கராத்தே கற்றுக் கொண்டாராம். அதுபோல அந்த திரைப்படத்தில் விஜயின் கைகளில் கார் ஏறுவது உண்மையான காட்சிகள். அதற்கு ஹுசைன் தான் பயிற்சிகள் கொடுத்திருந்தாராம். இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது.
அபாய கட்டம்
அப்போது அவர் மருத்துவமனையில் அதற்காக பரிசோதனை செய்தபோது புற்றுநோய் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்கள். அதிலும் அபாய கட்டமான ரத்த புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி இருக்கிறார்கள். அப்போது நீங்கள் பத்து நாள் உயிர் வாழ்வதே பெருசு என்று சொல்லி இருக்கிறார்கள். அதுபோல ஒரு நாளைக்கு இரண்டு பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தன்னம்பிக்கை வார்த்தை
என்னுடைய வாழ்நாளை நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஆனால் அவர் அந்த பதிவில் "நான் தைரியமாக போரிடுவேன். சாவு எல்லோருக்கும் வரும். எனக்கு வருவது தெரிந்து வருகிறது அவ்வளவுதான். நான் எனக்குப் பிறகு என்னுடைய பயிற்சி பள்ளிகளை யார் பார்க்க வேண்டும் என்ற பொறுப்புகளை ஒப்படைத்து விட்டேன்."
கடைசி ஆசை
அதுபோல என்னுடைய கராத்தே ஸ்கூலை நான் விற்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதை என்னிடம் பயிற்சி பெற்ற பவன் கல்யாண் வாங்கி பல குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார். அதுபோல துணை முதலமைச்சர் ஆகவும், விளையாட்டு துறை அமைச்சர் ஆக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார்.
கடைசி வேண்டுகோள்
அதாவது வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஒரு மைதானத்தை ரெடி பண்ணி தர வேண்டும். நம்முடைய தமிழ்நாட்டு வில்வித்தை வீரர்கள் ஒலிம்பிக்கில் விருது வாங்க வேண்டும் என்று தன்னுடைய கடைசி ஆசை என்று அவர் பேசியிருந்தார். இந்த நிலையில் நேற்று தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

உடல் தானம் செய்த நடிகர்
அதில் மருத்துவம், உடற்கூறியியல் மற்றும் ஆராய்ச்சிக்காக என் உடலை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தானம் செய்ய விரும்புகிறேன். ஆனால் என் இதயத்தை மட்டும் வில்வித்தை, கராத்தே மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அதுபோல தனக்கு இந்த தானம் செய்வதற்கு உதவியாக இருந்த டான்ஸ் மாஸ்டர் கலாவிற்கும் நன்றி தெரிவித்து இருந்தார்.
-
சிரிக்க கூட முடியாத அளவிற்கு.. அப்செட்டான விஜய்.. மனசை குடையும் 2 விஷயங்கள்! என்ன நடந்தது? -
ஒரு மாதத்தில் சிதைந்த விஜய்யின் 'ஒற்றை அதிகார மையம்' உறுதி? ஐஏஎஸ் அதிகாரிகளே புதிய பவர் சென்டர்? -
"வாழ்க்கை என்பது ஆரம்பத்தில் கண்ட கனவை விட".. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சமந்தா பதிவு -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
திமுக ஆட்சியில் தேவையில்லாத திட்டங்கள் எதுவுமில்லை.. அமைச்சர் மரிய வில்சன் சொன்ன வார்த்தை! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. எந்தெந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? -
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி











Click it and Unblock the Notifications