அம்மா சத்தியமா அப்படியெல்லாம் இல்லை..பிக்பாஸூக்குள் நடப்பது இதுதான்.. ரகசியத்தை உடைத்த நடிகர் தினேஷ்
சென்னை: விஜய் டிவியில் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.
இதில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கும் நிலையில் நடிகர் தினேஷ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று பல்வேறு செய்திகள் பரவி வருகிறது.

அது குறித்து நடிகர் தினேஷ் முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கப்போகிறது என்பது பற்றியும் அவர் க்ளு கொடுத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவில் அதிகமான எதிர்பார்ப்போடு இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி தற்போது வரைக்கும் 6 சீசன்கள் முடிவடைந்து வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து ஏழாவது சீசன் தொடங்க இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் இந்த நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பு அது பற்றிய பல்வேறு எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கும். அந்த வகையில் இந்த முறை எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. காரணம் இந்த முறை இதுவரைக்கும் இல்லாத வகையில் இரண்டு வீடு முறை இருக்கிறது என்று ப்ரமோவில் நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் ஒவ்வொரு சீசன் போலவே இந்த சீசனிலும் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று உத்தேச பட்டியல் வெளியாகி இருக்கிறது.
அதில் ஆரம்பத்தில் இருந்தே நடிகர் தினேஷின் பெயரும் இடம் பெற்று இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் தினேஷ் முதல் முறையாக இது பற்றி பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அதில் "அம்மா சத்தியமா சொல்லுதேன்... இப்ப வரைக்கும் எனக்கு பிக் பாஸிலிருந்து எந்த போன் காலும் வரவில்லை. ஆனால் பல செய்தி சேனல்களில் என்னுடைய பெயர் வருவதை நானும் பார்த்தேன். அது எதற்காக என்று எனக்கு சரியாக தெரியவில்லை.

ஆனால் கடந்த சீசனில் ரச்சிதா நிகழ்ச்சியில் இருக்கும் போது நான் வைல்ட் கார்டாக உள்ளே நுழைவேன் என்று ஒரு பேச்சு அடிபட்டது. அதற்காக கூட இந்த முறையும் அப்படியே சொல்லலாம். காரணம் ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்த பிறகும் கூட சண்டை ஏற்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் பிரச்சனை போனது வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வேன் என்று பலர் எண்ணி இருக்கலாம்.
ஆனால் யாரும் என்னிடம் அப்படி இதுவரைக்கும் பேசவில்லை. என்ன பொருத்தவரை நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்ப்பவர் கிடையாது. கடந்த சீசனில் ரச்சிதாவிற்காக அந்த நிகழ்ச்சியை பார்த்தேன். அதுபோல அதற்கு முன்பும் எப்பவாவது டைம் கிடைக்கும்போது சில நேரங்களில் பார்த்திருக்கிறேன். அதை வைத்து நான் யூகித்துக் கொண்டது என்னவென்றால் வெளியில் நெகட்டிவ் ஆக பெயர் இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பாசிட்டிவ் பெயர் வாங்கிவிடலாம்.
அதேபோல வெளியே பாசிட்டி டைப்பில் இருப்பவர்கள் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர்களின் கேரக்டர் ரசிகர்களின் மத்தியில் நெகட்டிவாக மாறியதும் உண்டு. அதுபோல வெற்றி தோல்வி எல்லாம் யாருக்கும் நிரந்தரமும் கிடையாது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பல வாய்ப்புகள் நமக்கு வந்து குவிந்து விடும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் அது இல்லை என்று ஒவ்வொரு முறையும் நிருபனம் ஆகிக்கொண்டிருக்கிறது.
அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சிலர் ஆசைப்படுவதற்கு காரணம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக ஆகிவிடலாம் என்றும், இன்னொரு ஒரு சிலர் நிறைய கமிட்மெண்ட் இருந்தால் இதில் கிடைக்கும் இரட்டை மடங்கு சம்பளத்தை வைத்து நம்மளுடைய கமிட்மெண்டை பார்த்துக் கொள்ளலாம் என்றும் தான் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
ஆனால் நான் இந்த இரண்டிலும் இல்லை. அதனால் இதில் கலந்து கொள்ளும் ஐடியா எனக்கு இப்ப வரைக்கும் இல்லை என்று நடிகர் தினேஷ் அதில் விளக்கம் கொடுத்து இருக்கிறார். தற்போது இவருடைய முடிவுக்கு அதிகமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
டேய் நம்ம பாண்டியன் படம்ப்பா! தியேட்டரில் ஒன்ஸ்மோர் கேட்டு அலறிய கூட்டம்! அந்த 1 சீன் சரித்திர சாதனை -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications