நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி.. காரணம் இதுதானா?
சென்னை: பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடல்நல குறைவு காரணமாக கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன பிரச்சனை என்பது பற்றி பார்க்கலாம்.
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சில நாட்களாகவே சிறுநீரக கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மதியம் அவருக்கு திடீரென்று உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால் கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சீனிவாசன் சினிமாவிற்காக தன்னுடைய பெயரை பவர் ஸ்டார் என்று மாற்றிக்கொண்டார். தமிழ் திரைப்பட நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். ஆனாலும் 2013ஆம் ஆண்டு நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார்.
அதுபோல கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்திற்கு பிறகு ஐ, ஒன்பதுல குரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இவருடைய காமெடி மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. சமீபத்தில் கூட நடிகை வனிதாவோடு இவர் மாலையும் கழுத்துமாக எடுத்த போட்டோ பெரிய அளவில் பேசப்பட்டது. வனிதாவை பவர் ஸ்டார் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா? என்று கூட பலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
ஆனாலும் சமீபத்தில் இவர் நடித்த இரண்டு படங்கள் இன்னும் வெளியாகவில்லை. அதுபோல திரைப்படங்களில் மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு இருந்தார்.
2020இல் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது ரஜினிகாந்தை சீண்டும் வகையில் பேசி இருந்தார். அதாவது "சீக்கிரமா கட்சி தொடங்குங்க ரஜினி இல்லை என்றால் நான் கட்சி ஆரம்பிக்கிறேன் நீங்கள் வந்து சேர்ந்து விடுங்கள்" என்று அவர் பேசியது அந்த நேரத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகராகவும், அரசியல் பிரமுகராகவும், தொழில் அதிபராகவும் இருக்கும் பவர் ஸ்டார் இன்று உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மருத்துவர்கள் அவர் ஒரு வார காலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். விரைவில் அவர் நலம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications