விஜய் சேதுபதி பையனை கூப்பிட்டு வாழ்த்திய விஜய்.. ஆனால், சூர்யா போட்ட போஸ்ட் பாருங்க
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா பீனிக்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் சூர்யா சண்டைக்காட்சியில் கலக்கி இருக்கிறார். அதே நேரத்தில் அவருக்கு நேற்று எதிர்பாராத ஒரு பாராட்டும் கிடைத்திருக்கிறது. அதாவது நடிகர் விஜய் சூர்யாவை நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார். அது குறித்து சூர்யா வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஒரு சில பிரபலங்களின் குழந்தைகள் பெற்றோர்களைப் போலவே சினிமாவில் அடி எடுத்து வைக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு சிலருக்கு தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. சிலர் அதிகமாக ட்ரோல் செய்யப்படுகிறார்கள். அதுபோலத்தான் இப்போது விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் ஆரம்பத்திலிருந்து அடிக்கடி ட்ரோலில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

மீம்ஸ் மெட்டீரியல்
இவருடைய எதார்த்தமான பேச்சு கூட மீம்ஸ்களாகவும் ட்ரோலாகவும் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்து கொண்டிருக்கிறது. தன்னை பற்றி என்ன சர்ச்சைகளும் வதந்திகளும் பரவி வந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் சூர்யா இப்போது ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார். தன்னுடைய அப்பா நடித்த சிந்துபாத் திரைப்படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் இப்போது பீனிக்ஸ் திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக மாறி இருக்கிறார்.
தீவிர உழைப்பு
இந்த திரைப்படத்திற்காக தன்னுடைய உடல் எடையை கடுமையாக ஒர்க்அவுட் செய்து குறைத்து இருக்கிறார். பல படங்களுக்கு சண்டைக்காட்சிகள் அமைத்து அனல் அரசு பீனிக்ஸ் படத்தை இயக்கி இருக்கிறார். இதனால் இந்த திரைப்படம் முழுக்க ஆக்சன் ஆகவே இருக்கிறது. இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வீடியோக்களிலும் அதிகமான அதிரடி காட்சிகள் தான் இருந்தது. ஆனாலும் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா சேதுபதி பபுள்கம் மென்று கொண்டே ரசிகர்களுடன் போட்டோ எடுத்தது சோசியல் மீடியாவில் அதிகமாக ட்ரோல் செய்தனர்.
சூர்யா சேதுபதி பேட்டி
சூர்யா ஓவர் ஆட்டிட்யூட் காட்டுவதாக சிலர் கூறியிருந்தார்கள். விஜய் சேதுபதி மீதுள்ள வன்மத்தை எல்லாம் சிலர் சூர்யா மீது காட்டுவதாக விஜய் சேதுபதி ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் சூர்யா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது எனக்கு சினிமாவில் பிடித்த ஹீரோ என்றால் அது விஜய் தான் என்னுடைய அப்பா நடிகராக இருந்தாலும் எனக்கு விஜய் ரொம்ப பிடிக்கும். எங்க அப்பா மாஸ்டர் படத்தில் நடித்திருந்தாலும் நான் விஜய்க்காக தான் அந்த படத்தையே பலமுறை பார்த்தேன். நான் விஜய் உடைய தீவிரமான ரசிகர் என்று சொல்லியிருந்தார்.

சூர்யா சேதுபதி பதிவு
இந்த நிலையில் நடிகர் விஜய் சூர்யாவை நேரில் அழைத்து அவருக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யா பகிர்ந்து இருக்கிறார். அதில் "நன்றி விஜய் சார். நீங்கள் சொன்ன கனிவான வார்த்தைகள்... உங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். என்னுடைய இந்த பயணத்தில் உங்களுடைய ஆதரவு எனக்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் கொடுத்த அரவணைப்பை நான் மறக்க மாட்டேன்" என்று பதிவிட்டு இருக்கிறார். சூர்யாவின் பீனிக்ஸ் படத்தை பார்த்துவிட்டு விஜய் சூர்யாவை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications