Actor Vishal marriage: நடிகர் விஷாலுக்கும் சாய் தன்ஷிகாவுக்கும் ஆகஸ்ட் 29இல் திருமணம்!
சென்னை: நடிகர் விஷாலுக்கும் சாய் தன்ஷிகாவுக்கும் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி (விஷால் பிறந்தநாள்) திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி வரை விஷாலை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள விரும்புகிறேன் என சாய் தன்ஷிகா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த யோகிடா பட இசை வெளியீட்டு விழாவில் திருமண அறிவிப்பை தன்ஷிகா வெளியிட்டார். இந்த விழாவில் தன்ஷிகா கூறுகையில் எனக்கும் விஷாலுக்கும் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது. அவரை நான் இறுதி வரை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறேன். பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையை கற்றுக் கொடுங்கள் என தன்ஷிகா பேசியிருந்தார்.

தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்தவர் விஷால். விஷாலின் நண்பர்களான ஆர்யா, கார்த்தி உள்ளிட்டோர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு மட்டும் திருமணம் தாமதமானது.
செல்லமே படம்
இவர் செல்லமே படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் அதிக மேக்கப் இன்றி நடித்ததால் இவருக்கு ஏராளமானோர் ரசிகர்களாக இருந்தனர். இந்த நிலையில்தான் திருட்டு விசிடியை ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இவர் மேற்கொண்டார்.
நடிகர் சங்க பொதுச் செயலாளர்
இதைத் தொடர்ந்து நடிகர் சங்க பொதுச் செயலாளராக 2023 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இவர் நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடித்ததும் திருமணம் செய்து கொள்வேன் என சொன்னார். இந்த நிலையில் அவருக்கு மூத்த நடிகர் ஒருவரின் மகளுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது.
இருவரும் மறுப்பு
ஆனால் இதை இருவருமே மறுத்தனர். இந்த நிலையில் விஷாலுக்கு அனிஷா ரெட்டியுடன் 2019ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் ஏதோ ஒரு சில காரணத்தால் அது திருமணம் வரை செல்லாமல் பாதியிலேயே நின்றுவிட்டது. இதனால் விஷால் திரைப்படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
3 ஆண்டுகள்
இந்த நடிகர் சங்க கட்டடம் கட்ட 3 ஆண்டுகள் மட்டுமே ஆகும் என எண்ணியிருந்த நிலையில் இதை கட்டி முடிக்க 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நிலையில் நடிகர் சங்க கட்டடம் முழுமையடையும் நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கட்டடத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி
இந்த நிலையில் திருமணம் குறித்து நடிகர் விஷால் கூறுகையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு பிறகு வரும் முகூர்த்த நாளில் எனக்கு திருமணம் உறுதி. என் பிறந்தநாளன ஆகஸ்ட் 29இல் கூட எனக்கு திருமணம் நடைபெறலாம். எப்படி பார்த்தாலும் இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும்.
பெண் பார்த்துவிட்டோம்
பெண் பார்த்துவிட்டோம். பேசி முடித்துவிட்டோம். காதல் திருமணம்தான். அவர் யார் , பெயர் என்ன என்பதை நேரம் வரும் போது சொல்கிறேன். ஒரு மாதமாகத்தான் அந்த பெண்ணை காதலித்து வருகிறேன். விரைவில் நல்ல தகவல் சொல்கிறேன் என தெரிவித்திருந்தார்.
47 வயதான விஷாலுக்கு 35 வயதான பெண்
இதனால் அந்த பெண் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந் நிலையில் 47 வயதான விஷால் 35 வயதான நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
சாய் தன்ஷிகா அறிவிப்பு
இந்த நிலையில் சாய் தன்ஷிகா நாயகியாக நடித்துள்ள யோகி டா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடந்தது. இதில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்பட்டது. அந்த வகையில் சாய் தன்ஷிகா தனது திருமண தேதியை அறிவித்துள்ளார். விஷால் சொன்னது போல் அவருடை பிறந்தநாளான ஆகஸ்ட் 29ஆம் தேதி இருவருக்கும் திருமணம் என அறிவித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications