சோப்பு விக்கறேன்.. பாத்ரூம் கழுவவும் நான் ரெடி.. ஒரு வேலை கொடுங்கள்.. நடிகை ஐஸ்வர்யா கண்ணீர்
சென்னை: வீடு வீடாக போய் சோப்பு விற்கிறேன், பாத்ரூம் கழுவவும் தயாராக இருக்கிறேன் என பிரபல நடிகை ஐஸ்வர்யா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் லட்சுமி. இவர் தன்னுடன் நடித்த சிவசந்திரனை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். லட்சுமிக்கு முதல் கணவர் பாஸ்கருக்கும் பிறந்தவர் மகள் ஐஸ்வர்யா.
இவரும் தனது தாயை போல் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக எஜமான் படத்தில் நடித்தது இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. பின்னர் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஒரு சுயம்வரம் எனும் திரைப்படத்தில் காமெடியாக நடித்திருந்தார்.

முன்னணி நடிகை
இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். பட்டர்ஃபிளைஸ் எனும் படத்தில் மோகன்லாலுடன் இவர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். திருடா திருடா படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. 1994 ஆம் ஆண்டு இவர் தன்வீர் அகமது என்பவரை திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். 1995 ஆம் ஆண்டு இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

கணவருடன் கருத்து வேறுபாடு
இதையடுத்து கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவரை 1996 ஆம் ஆண்டு விவகாரத்து செய்தார். இதனால் ஐஸ்வர்யா குடிக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. சினிமாவிலும் மறுபிரவேசம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவரை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து நல்வழிப்படுத்தினர்.

கல்வியில் ஈடுபாடு
பின்னர் அவர் தனது கல்வியில் ஈடுபாட்டை காட்டினார். 1997 ஆம் ஆண்டு சாப்ட்வேர் என்ஜீனியர் ஆனார். பின்னர் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். சில டெலிவிஷன் ஷோக்களையும் ஹோஸ்ட் செய்து சிலவற்றில் ஜட்ஜாகவும் வந்துள்ளார். இந்த நிலையில் சில ஆண்டுகளாக இவர் நடிக்காததால் இவருக்கு வருமானம் இல்லாமல் தவித்து வருவதாக சொல்கிறார்.

வாய்ப்பு
இதனால் வீடு வீடாக போய் சோப்பு விற்று அன்றாட தேவைகளை போக்கிக் கொள்வதாகவும் தெரிவிக்கிறார். தனக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இருப்பதாகவும் வாய்ப்பு கொடுத்தால் நடிப்பேன் என்றும் சொல்கிறார். அண்மையில் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் மேற்கண்ட தகவல்களை சொல்லியுள்ளார்.

திருமண வாழ்க்கை
இந்த பேட்டியில் தனது திருமண வாழ்க்கை குறித்தும் அவர் கூறியுள்ளார். அதில் தன்வீரை திருமணம் செய்த 6 மாதங்களில் அவருடன் வாழ பிடிக்கவில்லை. இதையடுத்து எனது மகள் ஒன்றை வயதாக இருக்கும் போது தன்வீரை விவாகரத்து செய்துவிட்டேன் என்றார். மேலும் அவர் கூறுகையில் சினிமா என்றில்லை வருமானத்தை ஈட்டிக் கொள்ள ஏதாவது ஒரு வேலை எனக்கு கிடைத்தால் போதும்.

தயக்கம் இல்லை
எந்த வேலையை செய்யவும் எனக்கு தயக்கம் இல்லை. உங்கள் அலுவலகத்தில் (தனியார் ஊடகம்) எனக்கு வேலை கொடுத்தாலும் நாளைக்கே நான் வரத்தயார். டாய்லெட் கழுவும் வேலையாக இருந்தாலும் சந்தோஷமாக செய்வேன் என அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications