Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹார்ட் பீட் 2 சீரிஸ் நடிகை அனுமோல் உடைத்து சொல்லிட்டாரே.. அப்ப சொந்த குரல் இல்லையா? அன்புக்கு நன்றி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு உட்பட வெளிமாநிலங்களிலும் என்னை தங்கள் வீட்டு பெண்ணாக பார்த்து அன்பு காட்டுகிறார்கள் ரசிகர்கள்.. இதற்காக ரசிகர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.. பெயர் சொல்லும்படியான கேரக்டர்களில் இனி தொடர்ந்து நடிப்பேன்" என்று கூறிவரும் அனுமோல், தன்னுடைய வெப்சீரிஸ் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.. இந்த இன்ஸ்டா பதில்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி, இப்போது சினிமாவில் ஜொலித்து வரும் மலையாள நடிகை அனுமோல்.. இவர் தமிழில் 'சூரன்', 'திலகர்', 'ஒருநாள் இரவில்', 'பர்ஹானா', 'ஹரா' போன்ற படங்களில் நடித்துள்ளார். 'அயலி', 'ஹார்ட் பீட்' வெப் தொடரில் நடித்தும் கவனம் தமிழக மக்களின் கவனம் பெற்றவர்.

Television Actress Anumol heartbeat 2 2

இதில், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் கடந்த வருடம் வெளியான சீரிஸ் "ஹார்ட் பீட்".. இதில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்திருந்தனர்.

வெற்றிக்கு காரணம்

'ஏ டெலி பேக்டரி' நிறுவனம் தயாரித்திருந்த இந்த சீரிஸை தீபக் சுந்தர்ராஜன் டைரக்ட் செய்திருந்தார் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது..

இதற்கு காரணம், எமோஷனலான தருணங்கள், வலுவான கேரக்டர்கள், மருத்துவமனை வாழ்க்கையின் உண்மையான சித்தரிப்பு, அதை உணர்ந்து நடித்தவர்கள் என அத்தனையுமே வெற்றியை தேடி தந்தது.. எனவேதான், இந்த சீரிஸின் 2ம் சீசன் உருவாகியிருக்கிறது.

100 எபிசோடுகள்

இந்த சீரிஸில் நடித்துள்ளவரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தில் பிரேக்அவுட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவருமான யோகலட்சுமி, கிரண், கமல், ரோஷினி, டி.எம். கார்த்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.. தீபக் சுந்த சுந்தரராஜன் எழுதி இயக்கி உள்ளார். ரெஜிமல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.. இந்த தொடரும் 100-க்கும் அதிகமான எபிசோடுகளை கொண்டுள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் கடந்த 22-ம் தேதி வெளியானது.

இதில், டாக்டர் ரதி தியாகராஜன் என்ற கதாபாத்திரத்தில் அனுமோல் நடிப்பில் கவனம் பெற்றுள்ளார்.. இந்நிலையில், ரசிகர் ஒருவர் இன்ஸ்டாவில் அனுமோலிடம், "உங்க குரலே அழகாக இருக்கே? அப்புறம் எதுக்காக தமிழில் டப்பிங் செய்யவில்லை" என்று கேட்டிருந்தார்.

டப்பிங் டைம்

அதற்கு அனுமோல், "உங்கள் அன்புக்கு நன்றி.. ரதி கதாபாத்திரத்திற்கு ஏற்கனவே முதல் சீசனில் அளித்த டப்பிங் குரலே சிறப்பாகவும் பிரபலமாகவும் இருந்ததால் அதுவே பயன்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், நான் கேரளாவில் இருப்பதால் சென்னைக்கு வர முடியவில்லை.

வேறு சில படங்களில் நடிப்பதாலும் என்னால் டப்பிங்கிற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இன்னும் தமிழில் நன்றாக பேச பயிற்சி வேண்டியிருக்கிறது.. மீண்டும் உங்களின் அன்புக்கு நன்றி" என்று தெரிவித்திருக்கிறார்.

நல்ல கேரக்டர்கள்

ஏற்கனவே ஒரு பேட்டியில் அனுமோல் பேசும்போது, "ஒரு நடிகை என்பவர் சினிமாவில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பது கிடையாது. சினிமாவோ, வெப் தொடரோ நல்ல கேரக்டர்கள் எங்கு கிடைத்தாலும் அதில் முத்திரை பதிக்கலாம். ரசிகர்களை அதன்மூலம் கவரலாம்.

அயலி சீரிஸில் என்னுடைய குருவம்மா கேரக்டர், ஹார்ட் பீட் வெப்சீரிஸில் ரதி கேரக்டர், இன்றளவும் ரசிகர்களை,குறிப்பாக இல்லத்தரசிகளை ஈர்த்துள்ளது. வெளிமாநிலங்களிலும் என்னை தங்கள் வீட்டு பெண்ணாக பார்த்து அன்பு காட்டுகிறார்கள். இதற்காக ரசிகர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.. பேர் சொல்லும்படியான கேரக்டர்களில் இனி தொடர்ந்து நடிப்பேன்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+