விஜய் டிவி சீரியலை விட்டு விலக காரணமே இதுதான்.. அவர் அப்படி! வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்த நடிகை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் சீரியலில் அஞ்சலி கேரக்டரில் நடித்து வந்த நடிகை தனுஷித் எதற்காக சீரியலில் இருந்து விலகினேன் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பொதுவாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என நடிகைகளும், நடிகர்களும் மாறுவது வழக்கமானதுதான். பல சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடிப்பவர்களும் விலகி இருக்கிறார்கள். சீரியல்கள் பொதுவாக பல வருடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஒரு சிலர்களால் அந்த சீரியலில் தொடர முடியாமல் போய்விடுகிறது.

அதே நேரத்தில் ஒரு சிலர் சீரியலில் இருந்து விலகும் போது அந்த சீரியல் டிஆர்பியில் அடி வாங்குகிறது. புதியதாக வரும் கேரக்டரை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் வரைக்கும் சீரியல் தரப்பினருக்கு பயம் இருந்து கொண்டே இருக்கும். இது ஒரு பக்கம் இருந்தாலும் சிலர் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறுகிறார்கள்.
அதுபோலத்தான் நீ நான் காதல் சீரியலில் அஞ்சலி கேரக்டரில் இருந்து விஜே தனுஷிக் விலகி இருக்கிறார். இது குறித்து அவர் வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் இவர் எதற்காக விலகுகிறார்.. இதற்காக விலகுகிறார்.. என்று பல்வேறு வதந்திகளும் பரவி வந்தது. அதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் தான் மணி என்பவரோடு விஜே தனுஷுக்கு எங்கேஜ்மென்ட் நடைபெற்றது.

இதனால் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதால் அவருடைய கணவர் வற்புறுத்தலினால் இவர் சீரியலில் இருந்து விலகி விட்டாரா? என்று செய்திகள் பரவி வந்த நிலையில் அதை தனுஷுக் மறுத்து இருக்கிறார். அது பற்றி அவர் பேசுகையில், கடந்த டிசம்பர் மாதத்தில் எனக்கு டெங்கு காய்ச்சல் காரணமாக ஸ்ரீலங்காவில் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தேன்.

கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேலே மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சீரியல் ப்ரொடக்ஷன் டீம் சேனல் எல்லோருமே எனக்காக வெயிட் பண்ணினாங்க. சீரியல் கதையும் கூட எனக்காக மாற்றினார்கள். அஞ்சலி மருத்துவமனையில் இருப்பது போன்று கதை மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அப்புறமும் எனக்கு சில பர்சனல் காரணங்களால் வர முடியாமல் போய்விட்டது.

உடம்பும் முழுசா குணமாகல. ப்ரொடக்ஷன் டீம் வெயிட் பண்ண ரெடியா தான் இருந்தாங்க. ஆனால் நான் தான் அவங்களை வெயிட் பண்ண வைக்கிறது சரியா இல்லை என்று முடிவெடுத்தேன். அதனால நானே சீரியலில் இருந்து விலகிக்கிறேன்னு சொன்னேன். நான் விலகுகிறேன் என வீடியோ போட்டதிலிருந்து என்னுடைய மேரேஜ் பற்றியும் என்னுடைய கணவர் பற்றியும் நிறைய நெகட்டிவ் கமெண்டுகள் வந்துட்டே இருக்கு.
என்னுடைய வருங்கால கணவருக்கும் என்னுடைய விலகல் முடிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது என்னுடைய தனிப்பட்ட முடிவு. இப்ப வரைக்கும் நான் ஸ்ரீலங்காவில் தான் இருக்கிறேன். என்னுடைய ஹெல்த் மற்றும் பர்சனல் கமிட்மெண்ட் இரண்டும் சரியானதும் நான் மறுபடியும் சென்னைக்கு வருவேன். வந்ததும் கண்டிப்பா புது ப்ராஜெக்டில் வருகிறேன் என்று தனுஷிக் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications