பிரபல சீரியலை விட்டு விலகும் திவ்யா கணேஷ்.. திடீர் முடிவுக்கு அந்தப் பிரச்சினை தான் காரணமா??
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியலில் நடித்து வந்த திவ்யா கணேஷ் திடீரென அந்த சீரியலை விட்டு விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த திவ்யா செல்லம்மா சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இந்த சீரியலில் இருந்து விலகுவதற்கான காரணம் இதுவாகத்தான் இருக்கும் என்று பல தகவல்கள் கசிந்து இருக்கிறது.

சன் டிவி சீரியலில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் நடிக்கும் திவ்யா கணேஷ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார். இவர் இதற்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சி மற்றும் சுமங்கலி போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். ஆனாலும் இவர் அறிமுகமானது சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியல் மூலமாகத்தான். இந்த சீரியலின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் இவர் அறிமுகமானாலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் உருவானது பாக்கியலட்சுமி சீரியல்தான்.

ரசிகர்களை கவர்ந்த ஜெனி
திவ்யா கணேஷை இப்ப வரைக்கும் ரசிகர்கள் பலர் ஜெனி என்று தான் கூப்பிட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக இவருக்கு நல்ல ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் மாமியாருக்கு சப்போர்ட் பண்ணும் மருமகளாக இவர் இருந்து வருகிறார். அதனாலே பலர் இவரை போல ஒரு மருமகள் நமக்கு கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று இவரை குறிப்பிட்டு கூறி வருகின்றனர். சீரியல் மூலமாக குடும்பப் பெண்களின் மனதையும் சமூக வலைத்தளத்தின் மூலமாக இளைஞர்களையும் கவர்ந்திருக்கிறார். இந்த நிலையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலிலும் நடித்து வருகிறார்.

செல்லம்மா சீரியலில் மேகா
ஆரம்பத்தில் செல்லமா சீரியலில் கதாநாயகியாக இவர்தான் இருப்பார் என்றே நினைத்த ரசிகர்களுக்கு இவர் தான் அந்த சீரியலில் வில்லி என்பது அதிர்ச்சியை கொடுத்தது. ஏற்கனவே லட்சுமி வந்தாச்சி சீரியலில் திவ்யா வில்லியாக நடித்திருந்தாலும் அது அந்த அளவிற்கு அப்போது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை ஆனால் இப்போது இவர் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கும் நேரத்தில் திடீரென இவர் வில்லியாக நடிப்பதை பலர் ஏற்றுக் கொள்ளாமல் தான் இருந்து வருகின்றனர். செல்லமா சீரியலில் மேகா கேரக்டரில் இவர் நடித்து வருகிறார்.

காரணம் இதுவாக இருக்குமோ
ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் செல்லமா சீரியல் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. ஆனால் சமீபத்தில் அந்த சீரியலின் கதாநாயகன் மற்றும் அவருடைய மனைவி திவ்யா ஸ்ரீதர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு குடும்ப பிரச்சனை காரணமாக இந்த சீரியலின் பெயரும் சமூக வலைத்தளத்தில் அதிகமாக அடிபட்டது. அதுவும் குறிப்பாக அந்த சீரியலின் கதாநாயகி அன்ஷிதாவுடன் அர்ணவ் நெருக்கமாக இருப்பதால் தான் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது என்பது பலருக்கும் தெரிந்ததால், இந்த சீரியலை பலர் வெறுக்க தொடங்கி விட்டதால் இந்த சீரியலின் டிஆர்பி குறைந்து விட்டதாம். இந்த நிலையில் இந்த சீரியலில் நடித்தால் சரிப்பட்டு வராது என்று தான் திவ்யா இந்த சீரியலில் இருந்து விலகி இருப்பார் என பலர் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் திவ்யாவிற்கு பதிலாக வேற ஒரு கதாநாயகி நடிக்க இருப்பதாகவும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது ஆனால் திவ்யா தரப்பில் இருந்து இதுவரைக்கும் எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலையும் கூறாமல் தான் இருந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications
