உருவ கேலி பண்ண யூடியூபரின் போலி மன்னிப்பை ஏற்க மாட்டேன்.. அது சால்ஜாப்பு வார்த்தை: நடிகை கவுரி கிஷன்
சென்னை: பொறுப்புணர்வு இல்லாமல் கேட்கப்படும் மன்னிப்பு என்பது மன்னிப்பே அல்ல. அதுவும், வழக்கமாக சொல்லப்படும், "தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது" என்ற சால்ஜாப்போடு கோரப்படும் மன்னிப்பு இன்னும் கொடுமையானது" என்று தன்னை விமர்சித்த யூடியூபருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை கௌரி கிஷன்... வெற்று வார்த்தைகளை மன்னிப்பாக கருத முடியாது, இந்த மன்னிப்பை ஏற்கவும் முடியாது என்றும் கெளரி கிஷன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
நடிகை கெளரி கிஷன் உடல் எடையை குறித்து யூடியூபர் ஆர்.எஸ் கார்த்திக் அநாகரீகமான முறையில் கேள்வியை கேட்டிருந்தார்.

இதற்கு தன்னுடைய கடுங்கோபத்தை கவுரி கிஷன் பல்வேறு தரப்பினரிடம் கவுரி கிஷன் வெளிப்படுத்தியிருந்தார்..
அபத்தமான கேள்வி
"இதுபோன்ற கேள்விகள் அபத்தமானது. இது டைரக்டரின் தேர்வு. நீங்கள் யார் கேள்வி கேட்பதற்கு?, என் உடல் எடை குறித்து ஹீரோவிடம் கேட்கலாமா? இதுவும் பாடி ஷேமிங் செய்வது போலத்தான்.. என் எடையை தெரிந்துகொண்டு நீங்க என்ன செய்யப் போறீங்க? உடல் எடையை பற்றி பேச அவருக்கு யார் உரிமை தந்தது?
பிரஸ்மீட்டிலிருந்து பாதியிலேயே வெளியேற நினைத்தேன்.. ஆனால் படத்துக்காக அமைதியாக இருந்தேன்.. பாடி ஷேமிங் சாதாரணமானது என்ற மனநிலை மிகவும் ஆபத்தானது.. பெண்கள் பாடி ஷேமிங் செய்யப்பட்டால் அதை எதிர்த்து கேள்வி கேட்கணும்..
பெண்கள் என்றாலே ஒருபடி கீழேதான் என்ற மனநிலை இங்கு பரவலாக உள்ளது.. அந்த செய்தியாளர் என் உடல் எடை பற்றி கேட்டதுமே, நான் கண்ணீர் விட்டு அழ நினைத்தேன். ஆனால் அப்படி அழுதால், அது அவர்களுடைய பலமாகிவிடும்" என்றெல்லாம் கூறியிருந்தார்.
கவுரி கிஷன்
கவுரி கிஷனின் இந்த கருத்துக்கு ஆதரவுகள் குவிய தொடங்கின.. சின்மயி, நடிகை குஷ்பு, ரோகிணி, டைரக்டர் பா.ரஞ்சித், நடிகர் கவின் , இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் தங்களது ஆதரவை கவுரி கிஷனுக்கு வழங்கியதுடன், சர்ச்சை கேள்வியை எழுப்பிய யூடியூபர் கார்த்திக்கு கண்டனத்தையும் பதிவு செய்தனர்.
அனைத்து தரப்பில் இருந்தும் கவுரி கிஷனுக்கு பரவலாக ஆதரவு பெருகிய நிலையில் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார் யூடியூபர் கார்த்திக்..
ஜாலியான கேள்வி
அதில், "கடந்த சில நாட்களாகவே நான் மன உளைச்சலில் இருக்கிறேன். நான் ஒரு விதத்தில் அவரிடம் கேள்வி கேட்டேன். அவர் அதை தவறாக புரிந்துகொண்டு முட்டாள்தனமான கேள்வி என்று சொன்னார்.. இதனால் அடுத்த பிரஸ் மீட்டில் அவரை நான் திருப்பி கேள்வி கேட்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அது ஒரு ஜாலியான கேள்வியாக கேட்கப்பட்டது.
நான் அவர்களை உருவகேலி செய்யவில்லை. இந்த கேள்வியை அவர் தான் தவறாக புரிந்துகொண்டார். இப்போது எல்லாரும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்கிறபோது நானும் என்னுடைய நிலையில் இருந்து இறங்கி வந்து மன்னிப்பு கேட்கிறேன்" என்று பேசியிருந்தார்.
பொறுப்புணர்வில்லாத மன்னிப்பு
இந்த வீடியோவை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்த கவுரி கிஷன், "பொறுப்புணர்வில்லாத மன்னிப்பு என்பது மன்னிப்பே அல்ல. முக்கியமாக, கவுரி கேள்வியைத் தவறாகப் புரிந்துக்கொண்டாள்; அது ஜாலியான கேள்விதான்," அல்லது அதைவிட மோசமாக, "நான் யாரையும் உடல் ரீதியாக அவமதிக்கவில்லை" எனச் சொல்லி தட்டிக்கழிப்பதும் மிகப்பெரிய பிரச்னைதான்.
நான் தெளிவாகச் சொல்கிறேன். மேடைத்தனத்துடன் கூடிய போலி வார்த்தைகளால் வெளிப்படும் மன்னிப்பை நான் ஏற்கமாட்டேன். இன்னும் பெட்டராக முயற்சி செய்யுங்கள் ஆர் எஸ் கார்த்திக்" என்று தெரிவித்து கொண்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications