சூரியவம்சம் படத்தில் இதனால்தான் நடிக்கல! ஆனால் மீனாவோடு போட்டி! மனம் திறந்த மோகினி
சென்னை: தமிழ் சினிமாவின் மிக முக்கியமான குடும்பத் திரைப்படங்களில் ஒன்று சூரியவம்சம். இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, மற்றும் பிரியா ராமன் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தப் படம், இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் பிரியா ராமன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் தன்னிடம்தான் இயக்குநர் விக்ரமன் பேசியதாக நடிகை மோகினி தனது சமீபத்திய நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.

யார் இந்த மோகினி
மோகினி என்ற பெயரால் அறியப்படும் மகாலட்சுமி, 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தார். இவர் ஈரமான ரோஜாவே, நான் பேச நினைப்பதெல்லாம், போன்ற பல திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். அவர் பெரும்பாலும், துணிச்சல் மிக்க மற்றும் நேர்மறை எண்ணங்கள் கொண்ட கதாபாத்திரங்களிலேயே நடித்துப் புகழ் பெற்றார். ஒரு கட்டத்தில் திரை வாழ்க்கையிலிருந்து விலகி, அமெரிக்காவில் குடியேறி, தனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.
சூரியவம்சம் வாய்ப்பை நிராகரிப்பு
சூரியவம்சம் திரைப்படத்தில் பிரியா ராமன் நடித்த, கதாநாயகனுக்கு எதிராகச் செயல்படும் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தன்னைத்தான் இயக்குநர் விக்ரமன் அணுகியதாக மோகினி தெரிவித்தார். ஆனால், அந்த வாய்ப்பை ஏற்காததற்கான காரணங்களை அவர் சுவாரசியமாகவும், நேர்மையாகவும் விளக்கியுள்ளார்.
"சூரியவம்சம் படத்தில் பிரியா ராமன் நடித்த ரோலுக்கு முதலில் என்னைத்தான் இயக்குநர் விக்ரமன் கேட்டார். அதற்கு நான் ஹீரோவுக்கு துரோகம் பண்ணுற ரோலில் நடிக்க மாட்டேன் என்று மோகினி கூறியுள்ளார். அதற்கு, தான் விரும்பிய தேவயானி நடித்த கதாபாத்திரத்தைக் கேட்டதாகவும், ஆனால் தேவயானியை ஏற்கனவே தேர்வு செய்துவிட்டதாக இயக்குநர் விக்ரமன் தெரிவித்ததாகவும் கூறினார்.
மோகினி சூரியவம்சம் படத்தை நிராகரித்த காரணம் பற்றி பேசும்போது, நான் நெகடிவ் கேரக்டர்ல நடக்க மாட்டேன். ஒரு தடவை அப்படிப் பண்ணிட்டா, அடுத்து எல்லாம் வில்லி ரோல்கள் தான் கிடைக்கும். நான் என் ரசிகர்களிடமிருந்து வில்லி எனும் பெயரை வாங்கிக்க வேண்டாம்" என்று அவர் தெரிவித்திருக்கிறார். தான் ஒரே விதமான கதாபாத்திரங்களில் நடிக்க நேரிடும் என்று நினைத்தே, இந்த வாய்ப்பை மறுத்ததாகக் கூறியுள்ளார்.
அதுபோல முத்து படத்திலும் தான் தான் கதாநாயகியாக நடிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறி இருந்தார். அது பற்றி அவர் பேசும் போது முத்து படத்தில் கடைசி வரைக்கும் என்னுடைய பெயரும், மீனாவின் பெயரும் தான் இருந்தது. ஆனால் கடைசியில் இயக்குநர் இந்த கேரக்டர் உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் அழுத்தம் கொடுத்து பேசினால் சரியாக வரும் என்று சொன்னார். ஆனால் நான் ஒரு கேரக்டருக்காக அவ்வளவு ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அந்த கேரக்டர் நமக்கு தகுதியாக இருந்தால் கண்டிப்பாக கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் மீனா ரொம்பவும் சிறப்பாக அந்த கேரக்டரில் நடித்திருந்தார் என்றும் மோகினி பேசியிருக்கிறார்.
இந்தக் கருத்துக்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஒரு நடிகையின் திரை வாழ்க்கைப் பயணத்தில், இது போன்ற முடிவுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை மோகினியின் இந்த நேர்காணல் உணர்த்துகிறது.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications