விஜய் கேரக்டர் இதுதான்! மாறாது! அன்னைக்கு சிஎம் ஆபிஸில் என்ன நடந்தது.. நடிகை டிகே கலா உருக்கம்
சென்னை: விஜய் முதல்வராக பதவியேற்ற பிறகு அவருடன் குருவி படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்த டிகே கலா அவரை சந்திப்பதற்காக ஆபீசுக்கு போயிருந்தார். ஆனால் அங்கு அவரை சந்திக்க முடியவில்லை என்று கண்கலங்கி பேட்டி கொடுத்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அது குறித்து சமீபத்தில் அவர் தனியார் சேனல் ஒன்றில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை டிகே கலா "தாயின் சிறந்த கோவிலும் இல்லை.. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" என்ற பாடலை பாடியவர் என்பது ஒரு சிலருக்கு தெரிந்திருக்கலாம். அந்த பாடலுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடி இருக்கிறார். அதுபோல கில்லி படத்தில் பிரகாஷ்ராஜ் அம்மாவாகவும் குருவி படத்தில் விஜய்க்கு அம்மாவாகவும் நடித்திருந்தார்.

நடிகை டிகே கலா பேட்டி
இந்த நிலையில் தான் விஜய் முதலமைச்சர் ஆனதும் அவரை சந்திப்பதற்காக போயிருந்தார். ஆனால் அங்கு அவரை சந்திக்க முடியவில்லை என்று அவர் கண்கலங்கி அழுது இருந்தார். இது பற்றி பல விமர்சனங்களும் எழுந்தது. இந்த நிலையில் தற்போது அவர் தனியார் youtube சேனல் ஒன்றில் பேசுகையில் நான் அன்னைக்கு நான் அழவில்லை, அவரை பார்க்கவில்லை என்ற ஆதங்கத்தில் தான் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் அன்னைக்கு ஆபீஸில் இல்லை அதனால் தான் அவரை பார்க்க முடியவில்லை.
அதுபோல விஜய் முதலமைச்சர் ஆனதும் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். நான் ஓட்டு போடப் போவது பற்றி எனக்கு கனடாவில் இருந்த என்னுடைய 9 வயது பேரன், நீங்க விஜய் மாமாவுக்கு தான் ஓட்டு போடணும் என்று சொன்னான் இங்கு இருக்கிற குழந்தைகள் விஜய்க்கு ஓட்டு போட சொல்லி சொல்லுவது கூட ஓகேன்னு சொல்லலாம். ஆனால் கனடாவில் இருக்கும் என்னுடைய பேரனும் நீங்க விஜய் மாமாவுக்கு தான் ஓட்டு போடணும்னு சொன்னான்.
விஜய்க்கு சப்போர்ட்
அதுபோல நான் விஜய் உடன் படங்களில் நடித்திருக்கிறேன், அவர் எப்போது வழவழன்னு பேசிட்டு இருக்க மாட்டாரு. சூட்டிங்கில் சரியாக இருப்பாரு. எந்த நேரத்தில் அவர் வரணுமோ அப்போ வருவாரு. அவர் அந்த சூட்டிங் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது ஆனால் அவருடைய காட்சிகள் எல்லாம் சரியாக முடித்துவிடுவார் ஆனால் என்ன செய்யணும் என்பதில் கவனத்தில் வைத்திருப்பார். அதனால் தான் அவரால் இன்று இந்த அளவிற்கு வர முடிகிறது. அவருடைய கேரக்டர் எப்போதுமே மாறாது.
மீண்டும் முதல்வர்
அவர் தீர்க்காயுசுடன் நல்ல, உடல்நிலையுடன் இன்னும் பல வருஷங்கள் ஆட்சி செய்ய வேண்டும். அவர் கண்டிப்பாக தமிழ் மக்களுக்கு உதவுவார் என்று நான் நம்புகிறேன். சமீபத்தில் கூட மேகதாது அணை பற்றிய பிரச்சனை வரும்போது தமிழ் மக்களுக்காக எனக்கு அசிங்கம் வந்தாலும் பரவாயில்லை என்று சொன்னாரே.. இது போல யாரும் சொல்லுவா? யாரு செய்வா? ஆனால் விஜய் மக்களுக்காகத்தான் எப்போதுமே உழைத்துக்கொண்டு இருக்கிறார்.
அவர் மக்களுக்காக நிறைய யோசிக்கிறாரு. அதனாலதான் எனக்கு அவரை பார்க்க முடியலையேன்னு கொஞ்சம் வருத்தம் இருந்தது மத்தபடி எந்த கோபமும் இல்ல என்று அந்த பேட்டியில் நடிகை டிகே கலா பேசியிருக்கிறார். சமீபத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
