குழந்தை பிறந்த சில மாதங்களில் மீண்டுமா..?? ரெஸ்டே இல்லையா..?? ஆல்யாவை கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: சமீபத்தில் குழந்தை பிறந்த நடிகை ஆலியா மானசா தற்போது மீண்டும் தன்னுடைய பழைய வாழ்க்கைக்கு திரும்பி இருக்கிறார்.
நடிகை ஆலியா மானசா மீண்டும் சீரியலுக்கு நடிக்க வருகிறார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவர் வெளியிட்ட வீடியோ பலரையும் கலாய்க்க வைத்துள்ளது.
எப்போதுமே ஆட்டம் பாட்டத்தோடு தூள் கிளப்பும் ஆலியா மனசா தற்போது மீண்டும் பழையபடி டான்ஸ் ஆடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்திருக்கிறார்.

எப்போதும் ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள்
விஜய் டிவியில் ஒரு சில சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் வேற லெவலில் ரீச் ஆக விடுகிறார்கள்.சில சீரியலில் நடிக்கும் நடிகர்களை இளைஞர்கள் அதிகமாக ஃபாலோ செய்து வருகின்றனர். ஏனென்றால் அவர்கள் சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் ஆலியா மானசாவிற்கு சீரியல் வட்டாரத்தில் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதை விடவும் சமூக வலைதளத்தில் இவருக்கு எப்போதுமே கிரேஸ் அதிகமாக தான் இருந்து வருகிறது. திருமணத்திற்கு பிறகும் இவர் மீண்டும் சீரியலுக்கு வருகிறார் என்று செய்திக்கு ரசிகர்கள் பலர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

காதல் முதல் கல்யாணம் வரை
ஆலியா மானசா முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த சீரியலில் இவர் ஒரு வேலைக்கார பெண்ணாக நடித்து அனைவருடைய மனதையும் கவர்ந்து விட்டார். நெட்டிசன்கள் இவரை எந்த வேலைக்கார பெண் இவ்வளவு மேக்கப் போடு வருவார் என்று பலமுறை கலாய்த்தலும் இந்த சீரியலில் இவருக்காக அதிகமான ரசிகர்கள் இருந்தனர். ரசிகர்களை அதிர்ச்சி அடையும் வகையில் அந்த சீரியலில் கதாநாயகனாக இருந்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பலருக்கும் இது அதிர்ச்சியாக இருந்தாலும் வாழ்த்துக்களை கூறி வந்தனர். இந்த சீரியல் முடிவடைந்த பிறகு ஆலியா மானசா பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

மீண்டும் சீரியலில்
சமூக வலைதளத்தில் செம ஆக்டிவாக இருக்கும் ஆலியா மானசா ஒரு குழந்தை பிறந்த பிறகு மீண்டும் ராஜா ராணி சீசன் 2வில் நடித்து வந்தார். இந்த சீரியலில் நடிக்கும் போது மீண்டும் இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். இதனால் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை சில மாதங்களுக்கு முன்பு பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பிறகு இவர் மீண்டும் சீரியலில் நடிக்கப் போகிறார் என்ற செய்திகள் பரவி வருகிறது. அவரும் அதை உண்மை என்று சொல்லும் வகையில் தான் தற்போது மீண்டும் வொர்க் அவுட்டில் இறங்கி இருக்கிறார். உடல் எடையை குறைத்து கதாநாயகியாக மீண்டும் களம் இறங்கும் ஆலியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தொடங்கியது ஆட்டம்
இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு ஆலியா எந்த ஒரு டான்ஸ் வீடியோக்களையும் வெளியிடாமல் இருந்து வந்தார். ஆனால் தற்போது முதல் முறையாக மார்டன் உடையில் செம ஆட்டம் போட்டு இருக்கிறார். இவருடைய இந்த டான்ஸ்சை பார்த்தது ரசிகர்கள் மீண்டும் தொடங்கியாச்சா??குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் இப்படியா?? என்றெல்லாம் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் எப்போதும் இப்படி ஜாலியாக இருக்கிறீர்களே இதற்கு காரணம் என்ன?? என்று வெகுளித்தனமாக கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications