"நாங்க எல்லாம் டிவியில் பிரபலம் ஆனா நீங்க” வம்பு இழுத்த அமுதவாணன்..ஜி பி முத்து கொடுத்த பல்பு!!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசனில் சில சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன.
நடிகர் அமுதவாணன் புகழ்வது போல இகழ்ந்ததற்கு தக்க பதிலடி ஜி பி முத்து கொடுத்து இருக்கிறார்.
நாங்க எல்லாம் டிவி யில் பிரபலம், ஆனா நீங்க சின்ன யூடியூப் இல் சாதாரணமாக வீடியோ வெளியிட்டு இப்படி பிரபலமாகி விட்டீர்களே! என்று அமுதவாணன் பேசிய குதர்க்கமான பேச்சு ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய் டிவி பிரபலம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி கிங் நிகழ்ச்சியில் நகைச்சுவை யாளராக கலந்து கொண்ட அமுதவாணன் பலருக்கும் பரிட்சயமானவர்தான். இவர் ஒரு நடிகராகவும், நகைச்சுவை நடிகராக, நடன கலைஞராகவும் பல்வேறு முகங்களை கொண்டிருக்கிறார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பிறகு இவர் விஜய் டிவி அமுதவாணன் என்று தான் அழைக்கப்பட்டு வருகிறார். தாரை தப்பட்டை, பில்லா பாண்டி என ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

சமூக வலைத்தள பிரபலம்
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசனில் இந்த முறை 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஒருவராக ஜிபி முத்துவும் இருந்து வருகிறார். இவர் சமூக வலைத்தளம் பயன்படுத்தும் அனைவருக்கும் பரிச்சயம் ஆனவர்தான் என்று சொல்லும் அளவிற்கு பிரபலமாக இருந்து வருகிறார். இவருடைய வீடியோக்களும், போட்டோக்களும் சமூக வலைத்தளத்தில் எப்போதுமே பரவி வருகிறது. நடிகர் வடிவேலுவின் காமெடிக்கு அடுத்ததாக இவருடைய காமெடி தான் பல டெம்ப்ளேட்டாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு இவரும் வரவேண்டும் என்று ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து வந்தனர்.

அமுதவாணன் பேசிய வார்த்தை
கடந்த சீசனில் ஜிபி முத்து கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அப்போது அவர் வரவில்லை ஆனால் தற்போது சீசனில் வந்திருக்கிறார். இந்த நிலையில் உள்ளே இருக்கும் ரசிகர்களுக்கும் ஜி பி முத்து என்டர்டைன்மென்ட் கொடுத்து வருகிறார். நேற்றைய எபிசோட்டில் அமுதவாணன் ஜி பி முத்து இருவரும் கலந்து கொள்கிற மாதிரி டாஸ்க் இருக்கிறது. அதில் அமுதவாணன் ஜி பி முத்து விடம், "நாங்கள் எல்லாம் டிவி சேனல் மூலமாக பிரபலமாக இருக்கிறோம். ஆனால் நீங்கள் சின்ன யூட்யூப் பில் ஒரு சில வீடியோக்களை வெளியிட்டு இந்த அளவிற்கு பிரபலமாக வந்து இருக்கீங்க? இது பெரிய விஷயம்! அதையும் தாண்டி இங்க எல்லாருக்கும் உங்களை கலாய்க்க தோன்றும். அதுதான் ஜாலியாக இருக்கிறது. நீங்களும் எந்த இடத்திலும் முகத்தை சுளிச்சுகிட்டு போனது இல்லை அதனால் உங்க கிட்ட பிரண்ட்ஷிப் வெச்சிக்கணும்னு தோணுது என்று கூறியிருக்கிறார்.

ஜி பி முத்து கொடுத்த குத்து
அதுபோல நீங்களும் என்கூட ஃப்ரெண்ட்ஷிப் வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார். நீங்களும் ஒரு காமெடியன் நானும் ஒரு காமெடியன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது ஜி பி முத்து நீங்கள் ஒரு காமெடியன் என்பதை நான் பார்த்தது கிடையாது. பார்த்து இருந்தாலும் ஞாபகத்தில் இல்லை என்று கூறுகிறார். அந்த நேரத்தில் பல்பு வாங்கிய அமுதவாணன் நான் உங்களை பார்த்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோவை ஜி பி முத்துவின் ரசிகர்கள் பகிர்ந்து, "எங்க தலைவன் கிட்டே வா! " என்று மீம்ஸ்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications